தட்கல் திட்டதால் ரயில்வேக்கு, 25 ஆயிரம் கோடி வருவாய் !

‘தட்கல்’ முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களால், ரயில்வே துறைக்கு, நான்கு ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ரயில்களில் நீண்ட துார பயணம் செய்பவர்கள், கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, 1997ல், தட்கல் கட்டண திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த திட்டம், 2004ல், நீண்ட துார ரயில்கள் அனைத்திலும், அமல் படுத்தப்பட்டது. வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுக்கான கட்டணத்தை விட, தட்கல் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

ரயில் புறப்படும் நேரத்தை அடிப்படையாக வைத்து, முன்பதிவு செய்யும் நேரத்துக்கு ஏற்ப, கட்டணத்தை படிப்படியாக அதிகரிக்கும், ‘பிரிமியம்’ தட்கல் திட்டம், 2014ல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த, சந்திரசேகர் கவுர் என்பவர், தட்கல் திட்டத்தால், ரயில்வேக்கு கிடைத்த வருவாய் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு, ரயில்வே அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2016 – 19 வரையிலான, நான்காண்டு காலத்தில், தட்கல் திட்டதால், ரயில்வேக்கு, 21 ஆயிரத்து, 530 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. பிரிமியம் தட்கல் திட்டம் மூலம், 3,862 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. தட்கல் கட்டண திட்டம், நாடு முழுவதும், 2,677 ரயில்களில் தற்போது அமலில் உள்ளது. இதற்காக, 1.71 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts:

15 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் !
நீண்டகால குத்தகைக்கு 84 ஏக்கரை ஏலம் விடுகிறது தமிழக ரயில்வே !
ரயில்களின் முன்பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு ...! மக்கள் மகிழ்ச்சி !!!
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ரயில்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது !
இந்திய ரயில்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும் !பியூஷ் கோயல் நம்பிக்கை ?
நோயாளிகளுக்கு ரயில்வே டிக்கெட்டில் 75% தள்ளுபடி? எப்படி பெறுவது?
தமிழகத்தில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்..?
ரயில் பயணிகளின் வருவாயில் ரூ.155 கோடியும், சரக்கு போக்குவரத்து வருவாயில் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளது.?