திருமண கனவை நனவாக்கும் ‘கனவு வெட்டிங்’!

நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் சாம் பால் ஆகியோர் ‘கனவு வெட்டிங்’ நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டனர்!கனவு வெட்டிங் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை பவித்ரா லட்சுமி அறிவிப்பு!சென்னையில், சொகுசுத் திருமண அனுபவத்தை வழங்கும் முன்னணி நிறுவனமான  ‘கனவு வெட்டிங்’ பிராண்ட், டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் மூன்று நாள் பிரம்மாண்ட திருமணக் கண்காட்சியை நடத்தவுள்ளது.

ஒவ்வொரு கொண்டாட்டமும் மறக்க முடியாத ஓர் அனுபவமாக அமைய வேண்டும். இந்த  நோக்கத்துடன், தமிழில் ‘கனவு’ என்ற அழகான அர்த்தத்தைக் கொண்ட ‘கனவு வெட்டிங்’ என்ற சொகுசுத் திருமண அனுபவத்தை வழங்கும் பிராண்டின் அதிகாரப்பூர்வ லோகோ, சென்னையில் உள்ள ஹோட்டல் அக்கார்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த லோகோவை நடிகர் கணேஷ் வெங்கட்ராம், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் சாம் பால், நடிகை பவித்ரா லட்சுமி மற்றும் உபாசனா உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை பவித்ரா லட்சுமி இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடராகவும் அறிவிக்கப்பட்டார்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் MOAR Digital 360 என்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிராண்டிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மோனிகா ரிச்சர்ட் இதனை முன்னெடுத்துள்ளார். ஒவ்வொரு கொண்டாட்டமும் தனித்துவமானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ‘கனவு வெட்டிங்’ உருவாக்கப்பட்டுள்ளது.

விழாவில் மோனிகா ரிச்சர்ட் பேசியதாவது, “கனவு வெட்டிங் என்பது வழக்கமான ஒன்று கிடையாது. திருமணத்திற்கான ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிடுவதற்கு முன்பே, தங்களுடைய திருமணக் கனவை நேரடியாக அனுபவிக்கும் வகையில் தம்பதிகளுக்காக முழுமையான ஓர் உலகத்தை உருவாக்குவதே எங்களுடைய நோக்கம்.

சென்னையில் மட்டும் இப்போது தொடங்கியுள்ளோம். இதே அனுபவத்தை உலகம் முழுவதும் வாழும் இந்திய வம்சாவளியினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், இங்கிலாந்து, துபாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்த பிராண்டை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

‘கனவு வெட்டிங்’ நிறுவனத்தின் முதல் பிரம்மாண்ட திருமண கான்க்ளேவ், வரும் டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், முப்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 150 க்கும் அதிகமான முன்னணி மற்றும் பிரீமியம் சேவை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. மேலும், திருமணத்திற்குத் தயாராகி வரும் 6,000 க்கும் மேற்பட்ட தம்பதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் அனைவரும் ‘கனவு வெட்டிங்’ குழுவினரின் தொடக்கத்திற்கும் வருங்கால பணிகளுக்கும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட ஐரிஸ் ஈவண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் லதா ஏ. கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், பார்ட்னர்ஸ் மற்றும் ஊடகத்துறையினருக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

தற்போது அதிகாரப்பூர்வ லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 18 முதல் 20 வரை சென்னை ECR-ல் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள முதல் ‘கனவு வெட்டிங்’ கான்க்ளேவ் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. தங்களது திருமணக் கனவை நனவாக்கும் வகையில், தம்பதிகளுக்கு பிரத்யேகமான மற்றும் முழுமையான திருமண அனுபவத்தை இந்த நிகழ்வு வழங்கவுள்ளது.

 
 
 
 
 

Thanks & Regards

Suresh Chandra
 
Kindly mail us the link to the following mail id
 
Like us:
 
Follow us:

6 Attachments  •  Scanned by Gmail