418- திரைப்பட விமர்சனம் !

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் ஏர்னெனி , ரவிசங்கர் எலாமஞ்சிலி தயாரிக்க,சைத்ரா ஆச்சார்,சூரியராஜ் வீரபத்தினி , சரண் லக்கராஜு, ரமேஷ் இந்திரா, பிரீத்தி பகதாலா,  ரேகா நிரோஷா, சஷாங்க் பாட்டீல் நடிப்பில் கீர்த்தன் நடகவுடா இயக்கி கன்னட சினிமா உலகினரால் தெலுங்கு கன்னடத்தில் உருவாகி தமிழிலும் இந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு  இருக்கும் படம் 418 .ஒரு நல்ல படத்தில் இலக்கணம் என்பது படம் தொடங்கி முதல் 10 நிமிடங்களில் இந்த படம் இதைப்பற்றி தான் பேசப்போகிறது. இதுதான் இந்த படத்தின் பிரச்சனை என்று தெளிவாக சொல்லி விட வேண்டும் என்பார்கள் ஹாலிவுட் காரர்கள். அதே பாணியை இப்படத்தின் இயக்குனரும் பின்பற்றி முதல் 10 நிமிடங்களில் தெளிவாக கொண்டு வந்து விடுகிறார். அதன் பிறகு நடக்கும் எல்லா விஷயங்களும் ஒருவித பயத்துடனும் பரபரப்புடனும் நகர்ந்து செல்கின்றன. ஹாரர், உளவியல், திரில்லர் என்ற மூன்று விஷயத்தையும் ஒரு முக்கோண கதை போல சரியாக அணுகியிருக்கிறார் டைரக்டர். இதற்கான திரை கதையையும் தெளிவாக தந்திருகிறார். ஆங்காங்கே பயமுறுத்தும் சில விஷயங்கள், மனிதர்கள் என கதை நன்றாக செல்கிறது கதை. கர்நாடக மாநிலத்தின் யட்சகானம் எனும் நாட்டுப்புற ஆடல் வடிவத்தை கதையுடன் இருக்கிறார் டைரக்டர்.

இயக்குனர் பிரஷாந்த் நீல் வழங்கும் படம் இது. , வருடம் 2020, கோவிட்-19 பொதுமுடக்கத்திற்குச் சற்று முன்பு. கர்நாடகாவின் கடலோரப் பகுதியின் ஒரு தொலைதூர இடத்தில் அமைந்துள்ள VIMS என்ற மருத்துவக் கல்லூரிக்கு ஒரு புதிய தொகுதி மாணவர்கள் வருகிறார்கள். அவர்களில் விவேக் என்ற இளைஞனும் ஒருவன். அவனது பெற்றோர் அவனை விடுதிக்கு அழைத்து வந்து, முதலில் ஒரு மனநல மருத்துவமனையாக இருந்த ஒரு கட்டிடத்தில் விட்டுச் செல்கிறார்கள். விவேக்கும் அவனது அறைத்தோழன் ரோஹித்தும் வசிக்கும் அறைக்கு அடுத்துள்ள அறையான, அறை எண் 418, பூட்டப்பட்டு, உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை யாரும் விளக்கவில்லை. ரமேஷ் இந்திரா நடித்த கல்லூரி ஆலோசகர், தெளிவற்ற எச்சரிக்கைகளை வழங்குகிறார்.

அதன் பக்கத்தில் உள்ள அறையில் படிக்க வந்த மாணவன் தங்கி இருக்க, அவனையும் அந்த  சக்தி கொலை செய்ய முயல்கிறது. தனது நண்பனின் (சரண் லக்கராஜு) உதவியோடு  கல்லூரி மனநல மருத்துவரை (ரமேஷ் இந்திரா) சந்திக்கிறான் பாதிக்கப்பட்ட மாணவன் அவர் அங்கே இருக்கும் அமானுஷ்ய சக்தியின் கதையை கூறுகிறார்.
கன்னட நாட்டுப்புறக் கலைஞரான ஓர் அநாதை இளம்பெண்ணை ( சைத்ரா ஆச்சார்) ஒருவன் காதலிக்கிறான். கல்யாணம் செய்து கொள்கிறான். நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள்
அவள்  கர்ப்பமான நிலையில் அவள் வயிற்றில் குழந்தை தங்காது என்ற நிலை. ஆனால் அவளது  உறவுகளுக்கு குழந்தை பிறப்பது அவளை உறுத்துகிறது. இந்நிலையில் அவளை ஒருவர் ஒரு துர்தேவதையிடம் அழைத்துச் செல்கிறான். அந்த துர்தேவதை  ”ஆறு பெண்களை கொன்றால் உனக்கு பெரும் சக்தி கிடைக்கும்” என்கிறார்.
மூன்று பெண்களை கொன்ற நிலையில் அந்த அமானுஷ்ய சக்தி  மேலும் சிலரை கொல்ல இருப்பதாகவும் அந்த அமானுஷ்ய சக்தி பொருத்தமான உடலில் புகுந்து விட்டால் அப்புறம் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மனநல மருத்துவர்  கூறுகிறார்.  கல்லூரியில் படிக்கும் சகமாணவி( பிரீத்தி பகதாலா)  அந்த அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொள்ள , நடந்தது என்ன என்பதே இந்த 418 படம். கே ஜி எப் படங்கள் மூலம் அநீதியை குளோரிஃபை செய்யும் குரூர வன்முறையை பிரபலப்படுத்தி, பிரஷாந்த் நீல் , இப்போது பெண்களை வைத்து அதே மாதிரி இன்னொரு மோசமான ரூட்டை கையில் எடுத்து   இருக்கிறார். சைத்ரா ஆச்சார் சிறப்பாக நடிக்கிறார்.
பெரிய கண்கள், லோ ஹிப் மேல் ஏறி நிற்கும்  குறுந் தொப்பை அல்டசியமான நடையுடை பாவனைகள் என்று ஈர்க்கிறார்  பிரீத்தி பகதாலா.ரமேஷ் இந்திரா கவனிக்க வைக்கிறார். மற்றபடி நடித்தவர்கள் பலரும் நரம்பு புடைக்க, முடி சிலிர்க்க ஓவர் ஆக்டிங்கில் கத்துகிறார்கள்.தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு , வெங்கியின் இசை , அகுல்  அவினாஷ் படத் தொகுப்பு, அனுபம் கொடுத்திருக்கும் ஒலி வடிவமைப்பு இவையே படத்தின் பலம் ஆனால் ஓவராக குழப்பும் திரைக்கதையால் படத்தின் ஒலி அளவு கடுப்பேற்றுகிறது.
418 திரைப்படம், வலுவான நடுப்பகுதியையும், பலவீனமான தொடக்கத்தையும், அதைவிடப் பலவீனமான முடிவையும் கொண்டுள்ளது. ஒரு திகில் படத்திற்கு, இதன் ஒலி வடிவமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. கதைக்களம் இயல்பாகவே திகிலூட்டுவதாக இருக்கிறது