ஹைக்கூ- விமர்சனம் !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிக்க, ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா , அறிமுகம் ஃபெமினா ஜார்ஜ்,  ‘அதிர்ச்சி’ அருண் நடிப்பில் ஹரிஹரன் ராமோடு சேர்ந்து எழுதி,  யுவராஜ் சின்னசாமி இயக்கி இருக்கும் படம்.
ஹைக்கூ.
ஹைக்கூ என்பது  ஜப்பானிய இலக்கியத்தில் துவங்கிய- மூன்று வரிகளில் முடியும்-  ஒரு கவிதை வடிவம்.உலக அளவில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக குறைந்த வரிகள் கொண்ட   செய்யுள்/ கவிதை வடிவம் இதுவே! ஹைக்கூ கவிதைகளில் முதல் இரண்டு வரிகளில் சொன்ன விசயத்தை அப்படியே உடைப்பதாக மூன்றாவது வரி இருக்கும். ஹைக்கூவின் சிறப்பே அதுதான். ஒன்றை எதிர்பார்க்க வைத்து வேறொன்றைத் தரும்.! கிட்டத்தட்ட காதலும் அப்படித்தான்காதலில் எப்போது என்ன நிகழும் என்பதை காதலர்களால் கூட கணிக்க முடியாது.? அதனால் தான் இயக்குநர் யுவராஜ் சின்னசுவாமி இந்தப்படத்திற்கு இந்த டைட்டில் வைத்துள்ளாரோ என்னவோ?

படத்தின் கதை ஹைக்கூ போல ரொம்ப சிறியது தான். ஆனால் அதன் வீரியம் பெரியது.

தான் படிக்கும் கல்லூரியில் லேடீஸ் டாய்லட்டில்
தவறாக நுழைந்த காரணத்துக்காக,  கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறான் ஓர் இளைஞன் ( ஏகன்) .
நண்பர்கள் அவனுக்கு வேறு கல்லூரி தேட, நிகழ்வு ஆண்டு முதல் கோ எஜூகேஷனாக மாறி இருக்கும் பெண்கள் கல்லூரி ஒன்றுதான் கிடைக்கிறது.அங்கு இவன் ஒருவன்தான் மாணவன். மற்றவர்கள் எல்லாம் மாணவிகள்.

அங்கு படிக்கும் ஒரு பெண்ணுக்கும் (ஸ்ரீதேவி அப்பாலா) அவனுக்கும்  காதல் மலர்கிறது. அந்த பெண்ணின் அப்பா  சாதி வெறி பிடித்தவர். நாயகன் நாவிதர் சமூகம். அது ஒரு பிரச்னை.  படித்து முடித்த பின்னும் நாயகனுக்கு வேலை கிடைக்கவிலை என்பது இரண்டாவது  பிரச்னை.

இவை கூடப் பரவாயில்லை. காதலியின் அக்காவின் கணவன் காதலியை தவறாகப்
பார்ப்பது பற்றி  காதலனிடம்  காதலி கூறுகிறாள். அதுவே பிரச்னையாகிறது.  அக்கா, அக்காவின்
கணவன் , அவர்களது
பிள்ளை ஆகியோரோடு அவள் எங்கு போனாலும் ‘உடன் போகக் கூடாது ‘என்கிறான். தவிர்க்க முடியாமல் அவள் போனால் ”உன் மாமாவுக்கு நீ சம்மதம் சொல்லி விட்டாயா?”
என்ற ரீதியில் மிரட்டும் தொனியில் பேச ..

ஒரு நிலையில் அந்தக் காதல் முறிகிறது. அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறாள்.

இந்த நிலையில் நாயகனுக்கு வேலை கிடைத்து ஒரு ஐ டி கம்பெனியில் டீம்  லீடராக இருக்கிறான். அங்கு ஒரு பெண்  (  பெமினா ஜார்ஜ்) புதிதாக வேலைக்கு சேர்கிறாள்.

அவள் நகருக்கு தனியாக வந்து வேலை செய்கிற நிலையில் அவளுக்கு
சில உதவிகள் செய்கிறான்.நாயகன், அதையே சாக்காக வைத்து காதலிப்பதாக சொல்ல, அவளும் வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள,  காதல் என்ற பெயரில் அவன் அவளை  ஆபீஸ் வேலையைக் கூட செய்ய விடாமல்  அடித்து, மனோ ரீதியாக சித்திரவதை செய்து அடிமை போல் நடத்த, அவளுக்கு நாயகன் உதவ, கொடுமைக்கார காதலன் விலக, நாயகனுக்கும் அவளுக்கும் காதல் வருகிறது .

ஒரு நிலையில் அவள் அவனிடம் பழைய காதலை பற்றிக் கேட்க அவன் சொல்ல, அவளுக்கு ஓர் உண்மை புரிகிறது. அவனது
பழைய காதலிக்கு என்ன பிடிக்குமோ அதையே  அவன் இவளுக்கும் செய்வதும் பழைய காதலிக்கு என்ன எல்லாம் பிடிக்காதோ அதை எல்லாம் இவளுக்கு
அவன் செய்யாததும்புதிய காதலிக்கு புரிய வருகிறது.

முதல் காதலியின் இன்னொரு ஜெராக்ஸ் ஆக அவன் தன்னை பார்ப்பதையும் தான் ஒரு டூப்ளிகேட் ஆக இருப்பதையும் விரும்பாத அவள் மனம் உடைகிறாள்.  ஹீரோ ஏகன் “இவர் நம்ம வீட்டுப் பையன் பா” என்ற எண்ணத்தை இந்தப்படத்திலும் நமக்குள் உருவாக்கியிருக்கிறார். ஒரு எதார்த்தமான நடிகர் என்ற முதிர்ச்சியையை பல இடங்களில் காட்டியிருக்கிறார். நாயகிகள் ஸ்ரீதேவி, பெமினா இருவருமே கேரக்டரின் சாராம்சத்தை உணர்ந்து ஆகச்சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஏகனின் நண்பர் கேரக்டர் உள்பட எல்லோரும் கொடுத்த வேலையை அழகாகச் செய்துள்ளனர்.

இந்தப்படத்தின் ஆன்மா இசைஞர் சித்துக்குமார் தான். அட்டகாசமான பின்னணி இசையை வழங்கியுள்ளார். பாடல்கள் அனைத்தும் காதல் ரகம் தான்! ஒளிப்பதிவாளர் காதல் நிரம்பி வழியும் பிரேம்களை வைத்து அசத்தியிருக்கிறார்.

இயக்குநர் ஒரு கம்ப்ளீட் காதல் கதையை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பை திரையெழுத்தில் காட்டியிருக்கிறார். அது பல காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது. கல்லூரி காதலில் இருக்கும் சுவராஸ்யம்அடுத்த காதலிலும் ஷிப்ட் ஆகி வந்திருப்பது சிறப்பான ஒன்று! குட்டி குட்டி எமோஷ்னலில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். க்ளைமாக்ஸ் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒளிவுமறைவற்ற அன்பு தான் ஒளிமயமான காதலை உருவாக்கும் என்று மெசேஜ் சொல்லியுள்ள இந்த ஹக்கூவிற்கு ரசிகர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிக்க, ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா , அறிமுகம் ஃபெமினா ஜார்ஜ்,  ‘அதிர்ச்சி’ அருண் நடிப்பில் ஹரிஹரன் ராமோடு சேர்ந்து எழுதி,  யுவராஜ் சின்னசாமி இயக்கி இருக்கும் படம்.
ஹைக்கூ.
ஹைக்கூ என்பது  ஜப்பானிய இலக்கியத்தில் துவங்கிய- மூன்று வரிகளில் முடியும்-  ஒரு கவிதை வடிவம்.உலக அளவில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக குறைந்த வரிகள் கொண்ட   செய்யுள்/ கவிதை வடிவம் இதுவே! ஹைக்கூ கவிதைகளில் முதல் இரண்டு வரிகளில் சொன்ன விசயத்தை அப்படியே உடைப்பதாக மூன்றாவது வரி இருக்கும். ஹைக்கூவின் சிறப்பே அதுதான். ஒன்றை எதிர்பார்க்க வைத்து வேறொன்றைத் தரும்.! கிட்டத்தட்ட காதலும் அப்படித்தான்காதலில் எப்போது என்ன நிகழும் என்பதை காதலர்களால் கூட கணிக்க முடியாது.? அதனால் தான் இயக்குநர் யுவராஜ் சின்னசுவாமி இந்தப்படத்திற்கு இந்த டைட்டில் வைத்துள்ளாரோ என்னவோ?

படத்தின் கதை ஹைக்கூ போல ரொம்ப சிறியது தான். ஆனால் அதன் வீரியம் பெரியது.

தான் படிக்கும் கல்லூரியில் லேடீஸ் டாய்லட்டில் தவறாக நுழைந்த காரணத்துக்காக,  கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறான் ஓர் இளைஞன் ( ஏகன்) . நண்பர்கள் அவனுக்கு வேறு கல்லூரி தேட, நிகழ்வு ஆண்டு முதல் கோ எஜூகேஷனாக மாறி இருக்கும் பெண்கள் கல்லூரி ஒன்றுதான் கிடைக்கிறது.அங்கு இவன் ஒருவன்தான் மாணவன். மற்றவர்கள் எல்லாம் மாணவிகள்.

அங்கு படிக்கும் ஒரு பெண்ணுக்கும் (ஸ்ரீதேவி அப்பாலா) அவனுக்கும்  காதல் மலர்கிறது. அந்த பெண்ணின் அப்பா  சாதி வெறி பிடித்தவர். நாயகன் நாவிதர் சமூகம். அது ஒரு பிரச்னை.  படித்து முடித்த பின்னும் நாயகனுக்கு வேலை கிடைக்கவிலை என்பது இரண்டாவது  பிரச்னை.

இவை கூடப் பரவாயில்லை. காதலியின் அக்காவின் கணவன் காதலியை தவறாகப் பார்ப்பது பற்றி  காதலனிடம்  காதலி கூறுகிறாள். அதுவே பிரச்னையாகிறது.  அக்கா, அக்காவின் கணவன் , அவர்களது பிள்ளை ஆகியோரோடு அவள் எங்கு போனாலும் ‘உடன் போகக் கூடாது ‘என்கிறான். தவிர்க்க முடியாமல் அவள் போனால் ”உன் மாமாவுக்கு நீ சம்மதம் சொல்லி விட்டாயா?” என்ற ரீதியில் மிரட்டும் தொனியில் பேச ..

ஒரு நிலையில் அந்தக் காதல் முறிகிறது. அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறாள்.இந்த நிலையில் நாயகனுக்கு வேலை கிடைத்து ஒரு ஐ டி கம்பெனியில் டீம்  லீடராக இருக்கிறான். அங்கு ஒரு பெண்  (  பெமினா ஜார்ஜ்) புதிதாக வேலைக்கு சேர்கிறாள்.அவள் நகருக்கு தனியாக வந்து வேலை செய்கிற நிலையில் அவளுக்கு சில உதவிகள் செய்கிறான்.நாயகன், அதையே சாக்காக வைத்து காதலிப்பதாக சொல்ல, அவளும் வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள,  காதல் என்ற பெயரில் அவன் அவளை  ஆபீஸ் வேலையைக் கூட செய்ய விடாமல்  அடித்து, மனோ ரீதியாக சித்திரவதை செய்து அடிமை போல் நடத்த, அவளுக்கு நாயகன் உதவ, கொடுமைக்கார காதலன் விலக, நாயகனுக்கும் அவளுக்கும் காதல் வருகிறது .

ஒரு நிலையில் அவள் அவனிடம் பழைய காதலை பற்றிக் கேட்க அவன் சொல்ல, அவளுக்கு ஓர் உண்மை புரிகிறது. அவனது பழைய காதலிக்கு என்ன பிடிக்குமோ அதையே  அவன் இவளுக்கும் செய்வதும் பழைய காதலிக்கு என்ன எல்லாம் பிடிக்காதோ அதை எல்லாம் இவளுக்கு அவன் செய்யாததும்புதிய காதலிக்கு புரிய வருகிறது.முதல் காதலியின் இன்னொரு ஜெராக்ஸ் ஆக அவன் தன்னை பார்ப்பதையும் தான் ஒரு டூப்ளிகேட் ஆக இருப்பதையும் விரும்பாத அவள் மனம் உடைகிறாள்.  ஹீரோ ஏகன் “இவர் நம்ம வீட்டுப் பையன் பா” என்ற எண்ணத்தை இந்தப்படத்திலும் நமக்குள் உருவாக்கியிருக்கிறார். ஒரு எதார்த்தமான நடிகர் என்ற முதிர்ச்சியையை பல இடங்களில் காட்டியிருக்கிறார். நாயகிகள் ஸ்ரீதேவி, பெமினா இருவருமே கேரக்டரின் சாராம்சத்தை உணர்ந்து ஆகச்சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஏகனின் நண்பர் கேரக்டர் உள்பட எல்லோரும் கொடுத்த வேலையை அழகாகச் செய்துள்ளனர்.