அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்!

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு சினேகா ரெட்டி!

அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட வலுவான சோஷியல் மீடியா கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளார்.

அவரது தொழில்முனைவுப் பயணத்தின் முக்கிய அங்கமாக ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ உள்ளது. தனது தொழில்முறை பணிகளுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் சினேகா அதிக ஆர்வம் உள்ளவர். தனது உடற்பயிற்சி மற்றும்  லைஃப்ஸ்டைல் பற்றிய கிளிம்ப்ஸை அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

தனது குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களையும் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதேபோல் அவரது பயணங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான பதிவுகளும் ரசிகர்களுடனான அவரது நெருக்கத்தை மேலும் அதிகரித்துள்ளன. அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அந்தஸ்து அவரை பிரபலமாக்கினாலும் கடந்த சில ஆண்டுகளில் தொழில்முனைவு, குடும்பம், உடற்பயிற்சி, பயணம் என தனக்கு விருப்பமானவைகளில் கவனம் செலுத்தி, சினேகா தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இன்று சினேகா ரெட்டி அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தால் மட்டுமல்லாமல், வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் தனக்கென தனி டிஜிட்டல் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பிரபல ஆளுமையாகவும் அறியப்படுகிறார்.

Related posts:

ரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்..

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.!

நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் 'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

சேரன் நாயகனாக நடித்துள்ள 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !

'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்!

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர். !