தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு இந்த மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் போயிருக்காங்க. ஆனா கடந்த முறையே கூடுதல் கால அவகாசம் கிடையாதுன்னு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி சொல்லிடுச்சி.

உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பிரதான கட்சிகள்லா தீவிரமா வேலை பாத்துகிட்டு வர்ற நிலையில வழக்கம் போல் திக்கு தெரியாமல் தேமுதிக தொண்டர்கள் தவிச்சுகிட்டு வர்றாங்க ளாம்..

உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் போயிருக்குது. ஆனால் கடந்த முறையே கூடுதல் கால அவகாசம் கிடையாதுன்னு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திடுச்சி. அந்த வகையில் அவகாசம் கிடைக்கவில்லைன்னா இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனை முன்னாடியே உணர்ந்த திமுக ஏற்கனவே மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை போட்டு முடிச்சாச்சு..

அதிமுகவும் கூட அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வேலைகள் ஜரூராகவே நடந்துகிட்டே வருது. இதே போல் காங்கிரசும் கூட இதுவரை இல்லாத அளவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகிகிட்டு வருது. இவங்களை மாதிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்த பிரேமலதா திடீரென கேப்டன் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றுவிட்டார். முதலில் கேப்டன் மட்டுமே சென்ற நிலையில் பிரேமலதா இங்கு இருந்ததால் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கவலை இல்லாமல் இருந்தாங்க..

ஆனால் இப்படி எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்ங்கிற நிலையில் திடீரென பிரேமலதா துபாய் சென்றது கட்சி நிர்வாகிகளுக்கே ஷாக்காய்டுச்சாம். இதற்கு காரணம் என்னன்னா திமுகவுடன் நடத்திய உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையாம் வழக்கம் போல நெகோஷியேஷன் பிரச்சினை தான். அதாவது ச 10 சதவீத இடங்களை தேமுதிக கேட்டதாகவும் சரி போய் வாருங்கள்னு திமுக தரப்பு தேமுதிகவை அனுப்பி வைத்துவிட்டதாகவும், அதன் பிறகு தேமுதிகவிற்கு திமுக தரப்பில் இருநது எந்த அழைப்பும் இல்லைன்னு சொல்றாங்க

இதனால் நொந்து போன பிரேமலதா, தம்பி சுதீஷக் கூப்பிட்டு துபாய்க்கு டிக்கெட் போடுன்னாங்களாம் விஜயகாந்தின் உடல்நிலையை காரணம் காட்டி துபாய் சென்றுவிட்டதாக சொல்றாங்க. கேட்டது கிடைக்கல அதுதான் முக்கியமான காரணம்.மேலும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்களிடம் பொறுப்பை கொடுத்துவிட தேமுதிக திட்டமிட்டுள்ளதாக சொல்றாங்க அதாவது நீங்களே முடிவு பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டாங்களாம். அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக புறக்கணிச்சிடும்னே சொல்றாங்க. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு இந்த 9 மாவட்டங்களை டீலில் விட தேமுதிக மேலிடம் முடிவெடுத்துவிட்டதாகவும் இந்த தகவல் கசிந்து திமுகவுடன் கூட்டணி கனவில் இருந்து நிர்வாகிகள் அலறிப்போய் கிடப்பதாகவும் சொல்கிறார்கள்.தேமுதிகவை பொறுத்த வரைக்கும் பொறுமையும் நிதானமும் கிடையாது.இந்த உள்ளாட்சித் தேர்தல்லையாவது திமுகவோட கூட்டணி சேர்ந்து கொஞ்சம் இடம் ஜெயிக்கலாம்னு நெனைச்சிருந்தாங்க.அதிலயும் பிரேமலதா மண்ணை அள்ளி போட்டுட்டு போய்ட்டாங்கன்னு நிர்வாகிகள் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

Related posts:

“வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ஐந்து நாள் விழா நடத்துகின்றனர்”

ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் !

போரூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் டிரை ஐ சூட் சாதன தொகுப்பு ! அமைச்சர் D. ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். !!

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் !

40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!

சாலா விமர்சனம்!

சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!