தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!

தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த , இந்தியாவின் மிகவும் இளைய குழந்தைகளில் ஒன்று , ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டது ! மிகவும் முன்னதாகவே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு டாக்டர் ராகுல் யாதவ் தலைமையிலான மருத்துவக்குழு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டது சென்னையை சேர்ந்த திருமதி கீதா அறிவழகன் அவர்களுக்கு , கருவுற்றதிலிருந்து 22 வாரம் என்ற இரண்டாவது பருவத்தின்போதே 510 கிராம் எடையுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு டாக்டர் ராகுல் யாதவ் தலைமையிலான பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் குழு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளித்ததை இன்று உலகிற்கு வெளிப்படுத்தினர் . பிரசவத்திற்கு முந்தைய நிலையில் கர்ப்பப்பையின் சவ்வு கிழிதல் ஏற்பட்டதன் காரணமாக திருமதி கீதா அறிவழகன் பிரசவகாலத்திற்கு முன்னதாகவே குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் . இக்குழந்தைகள் , வேறு மருத்துவமனையில் பிறந்து , தீவிர பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர் . இருப்பினும் , இரட்டை குழந்தைகளில் ஒருவர் ஒரு சில தினங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது , மற்றொரு குழந்தை நான்காவது நாளில் , மிகவும் ஆபத்தான நிலையில் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் தீவிர சிகிச்சை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார் .

கருவுற்றதிலிருந்து 22 வாரங்கள் என்ற கால அளவிற்குள்ளே பிறந்த இக்குழந்தைக்கு சுவாசிப்பதில் அதிக சிரமம் இருந்தது மட்டுமின்றி , ஊன்பசை சருமம் , பலவீனமான எலும்புகள் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய பிரச்சனைகளும் இருந்தன . மருத்துவ சேர்க்கை நேரத்தில் 380 கிராம் என்ற குறைந்த எடையைக் கொண்டிருந்த இக்குழந்தைக்கு விரிவான மருத்துவ கண்காணிப்பும் மற்றும் உயிர்பிழைத்து இயல்பான குழந்தையாக ஆவதற்கு 24×7 தீவிர சிகிச்சை ஆதரவும் தேவைப்பட்டது . அறிவியல் பூர்வமாக பார்க்கையில் , 22 வாரங்கள் என்ற கர்ப்பகாலத்தின் இரண்டாவது பருவத்தில் பிறக்கின்ற குழந்தைகள் உயிர்பிழைக்கின்ற வெற்றி விகிதமானது , மிக அரிதாகவே இருக்கிறது . ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் பிள்ளை பிறப்பு மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் தலைமை நிபுணர் டாக்டர் .ராகுல் யாதவ் மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் முதுநிலை மருத்துவர்கள் டாக்டர்.ஷோபனா ராஜேந்திரன் மற்றும் டாக்டர்.அருண்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு , ஒரு இரட்டை சுவர் கொண்ட இன்குபேட்டரில் வைத்து , வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் செயற்கை சுவாச சாதனத்தை பயன்படுத்தி குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் சுவாசிக்க உதவி செய்து சிகிச்சையளித்தனர் .

குழந்தைக்கு ஊட்டச்சத்து மறுவாழ்வு , தீங்கு விளைவிக்காத சுவாச ஆதரவு மற்றும் மேம்பாட்டு ஆதரவு பராமரிப்பை மருத்துவர்கள் அளித்தனர் . இந்த தருணம் குறித்து கருத்து தெரிவித்த பிள்ளை பிறப்பியல் மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் முதன்மை ஆலோசகர் டாக்டர்.ராகுல் யாதவ் கூறுகையில் , 22 வார குழந்தையின் உயிர்வாழ்வு விகிதம் மிகக் குறைவு என்பதை அறிந்ததால் , குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு மிக அதிகமாக இருந்தது . திருமதி கீதா அறிவழகன் அவர்கள் இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்திருந்தார் , அவர்களில் ஒருவர் பிரசவத்திற்குப் பிறகு இறந்தார் . திருமதி கீதாவின் மகப்பேறியல் நிபுணர்கள் குழந்தையை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு பரிந்துரைத்தனர் . குழந்தை சுவாசிப்பதில் கடுமையான சிரமம் மற்றும் நுரையீரல் தொற்றுடன் மிகவும் ஆபத்தான நிலையில் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது , குழந்தை நிலையான முன்னேற்றத்தையும் , ஆரோக்கியத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக எமது மருத்துவர்கள் குழு சாத்தியமுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது . இந்த தீவிர சிகிச்சையின் காரணமாக , குழந்தையின் உடல் எடை ஆரோக்கியம் மற்றும் உணவு உட்கொள்ளலில் படிப்படியான மற்றும் நிலையான வளர்ச்சி இருப்பதை நாங்கள் கண்டோம் . இந்த பெற்றோர்கள் எங்களது குழு மீது வைத்திருந்த முழுமையான நம்பிக்கையின் காரணமாகவே இந்த சிகிச்சை சாத்தியமானது , ” என்று கூறினார் . அவர் மேலும் கூறுகையில் , ” கடந்த ஒரு வருடத்திற்குள் , 25 வாரங்களுக்கு முன்பு பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளோம் . உயிர்வாழ்வதற்கான குறைந்த வாய்ப்புகளுடன் முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கு வாழ்க்கை உள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் ” என்றார் .

அவர் மேலும் கூறுகையில் , ” கடந்த ஒரு வருடத்திற்குள் , 25 வாரங்களுக்கு முன்பு பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளோம் . உயிர்வாழ்வதற்கான குறைந்த வாய்ப்புகளுடன் முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கு வாழ்க்கை உள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் ” என்றார் . செய்தியாளர்களிடம் பேசிய ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் பொது மேலாளர் திரு . ராஜ்மோகன் கூறுகையில் , ” ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் , ஒவ்வொரு வாழ்க்கையும் மிகவும் விலைமதிப்பற்றது , மேலும் இந்த முயற்சியில் எங்களுக்கு உதவ சில மேம்பட்ட இயந்திரங்கள் உள்ளன . கீதா மற்றும் அவரது குழந்தையை நாங்கள் வாழ்த்துகிறோம் , ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை இந்த குழந்தையின் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் ” என்றார் . இந்த சிறப்பு சிகிச்சையைப் பெறுவதற்கு ஏராளமானோர் மனமுவந்து நிதியுதவி செய்கின்ற க்ரெளடு ஃபண்டிங் என்ற நிதித்திரட்டல் நடவடிக்கையின் வழியாக , இப்பெற்றோர்கள் சிகிச்சைக்கான தொகையை சேகரிக்க மருத்துவமனை இவர்களுக்கு உதவியது . 100 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு இக்குழந்தை 1.54 கிலோகிராம் எடையுடன் , மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் . தற்பொழுது, குழந்தை நன்றாகச் செயல்படுகிறது, வயதுக்கு ஏற்றவாறு 3.5 கிலோ எடையும் பெற்றுள்ளது , மற்றும் அவரது கண் காது கேட்கும் திறண் சரியான நிலையில் உள்ளது . குழந்தையின் மனவளர்ச்சியும் இயல்பாகவே உள்ளது .