‘டியூட்’ — விமர்சனம் !

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, டிராவிட் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் டியூட். ப்ரதீப், மமிதா சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனி வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கட்டத்தில் மமிதாவிற்கு ப்ரதீப் மீது காதல் வருகிறது, இருவருமே மாமா பொண்ணு, அத்தை பையன் தான். ஆனால், ப்ரதீப் சிறு வயதிலிருந்து உன்னை என் ப்ரண்ட் ஆகத்தான் பார்க்கிறேன் என சொல்கிறார், இதனால் மனமுடைந்த மமிதா மேல் படிப்பு படிக்க செல்கிறார்.இந்த இடைப்பட்ட காலத்தில் ப்ரதீப், மமிதாவை ரொம்பவும் மிஸ் செய்ய, ஒரு கட்டத்தில் அவருக்கு மமிதா மீது காதல் வர, ப்ரதீப் மமிதா அப்பா சரத்குமாரிடம் சொல்கிறார், இதை தொடர்ந்து தடபுடலாக இவர்கள் திருமண ஏற்பாடு நடக்கிறது. சரத்குமார் மினிஸ்டர் என்பதால் இந்தியாவில் ஒட்டு மொத்த அரசியல் பிரபலங்களும் திருமணத்திற்கு வர, அங்கு வந்து மமிதா வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்ல, அதன் பிறகு மமிதா ஆசைப்பட்டவருடன் திருமணம் நடந்ததா? பிரதீப் இதற்காக என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரதீப் நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். மமிதா பைஜு அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். சரத்குமார் நடிப்பு சிறப்பு. பிரதீப் அம்மாவாக ரோகினியின் நடிப்பும் அருமை.வினோதினி, டிராவிட் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.நிகெத் பொம்மியின் ஓளிப்பதிவு அருமை.சாய் அபயங்கரின் பாடல்கள் இசை பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.மொத்தத்தில் இந்த Dude அனைவரையும் கவர்ந்துள்ளது. வெற்றி படமாக கொடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரனுக்கு பாராட்டுக்கள்.

Related posts:

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் - அஸ்வத்மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய 'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!

திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை காப்பாற்றியுள்ளது காவேரி மருத்துவமனை !

2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும்: சரத்குமார் பரபரப்பு பேட்டி!

'HIT 3' புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் 'பிச்சைக்காரன்' வெற்றிக் கூட்டணி!

ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் - ஆய்வில் வெளியான பகீர் தகவல்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’!

வாட்ஸ்அப் என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா..!