இந்தியாவில் வசூலில் சாதனை படைத்த ஹாலிவுட் படமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று மீண்டும் வெளியாகிறது!

டிசம்பர் 19 ஆம் தேதி ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம் வெளியாகும் முன்பே, ஆஸ்கார் விருது பெற்ற ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்தியாவில் 3Dயில் கண்டு மகிழுங்கள்!

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், 20த் சென்ச்சுரி ஸ்டுடியோஸ், அக்டோபர் 2, 2025  (வியாழக்கிழமை) அன்று ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை மறு வெளியீடு செய்கிறது.

ஜேம்ஸ் கேமரூனின் பிரமிக்க வைக்கும் காட்சியும், நீருக்கடியிலும் நிலப்பரப்பின் மேலும் இதுவரை பார்த்திடாத பிரம்மாண்டத்தை ஒரு வாரத்திற்கு முன்பாகவே 3D-யில் காணத் தயாராகுங்கள்.

டிசம்பர் 2022 வெளியான இந்தத் திரைப்படம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனை படைத்தது. மேலும் சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸூக்காக ஆஸ்கார் விருது வென்று உலகளவிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா நடித்த இந்தப் படத்தில் சிகோர்னி வீவர், கேட் வின்ஸ்லெட் மற்றும் ஸ்டீபன் லாங் ஆகியோரும் நடித்திருந்தனர்.

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை இந்திய திரையரங்குகளில் 20த் சென்ச்சுரி ஸ்டுடியோஸ் அக்டோபர் 2, 2025 அன்று 3Dயில் வெளியிடுகிறது.பண்டோராவை 3D-யில் மீண்டும் காணும் சினிமா அனுபவத்தை தவறவிடாதீர்கள்!

Related posts:

"லவ்" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில்'மான்குர்த்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. !

SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!

93 வயதில்ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன்

ரூ.10 லட்சத்தில் தயாரான படம் !

இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

'தணல்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!