நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸான ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’ நாளை (அக்டோபர் 2) ப்ரீமியர் ஆகிறது!

The Game. (L to R) Shraddha Srinath as Kavya, Santhosh Prathap as Anoop in The Game. Cr. Courtesy of Netflix © 2025

உலகளவில் ஓடிடி தளத்தில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் முதன் முறையாக அதன் தமிழ் ஒரிஜினல் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ சீரிஸை அக்டோபர் 2 அன்று ப்ரீமியர் செய்கிறது. ‘தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘இரை’ வெப் சிரீஸ் போன்ற ஸ்டைலிஷ் த்ரில்லர் கதைகளை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா தான் இந்த வெப்சீரிஸையும் இயக்கியுள்ளார்.

நாளை ப்ரீமியர் ஆக இருக்கும் ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’ தொடர் விறுவிறுப்பான ஏழு எபிசோடுகளை கொண்டிருக்கிறது. ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேமிங் துறையில் பணிபுரியும் தம்பதி எதிர்கொள்ளும் உணர்வுப்பூர்வமான போராட்டங்களைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்கள் எப்படி நம் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வை மாற்றியமைக்கிறது என்பதை பல அடுக்குகளுடன் இந்தக் கதை பேசியிருக்கிறது.

இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “கேமிங் துறையில் பணிபுரியும் திருமணமான தம்பதிகள் பற்றி இந்தத் தொடர் பேசுகிறது. இன்றைய சமூகவலைதளங்கள் எப்படி அவர்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் தலையிடுகிறது என்பதையும் காட்டியுள்ளோம். இதுமட்டுமல்லாது பெண் காவல் அதிகாரி, 15 வயது பெண் மற்றும் 65 வயதுடைய வசந்தா என இவர்கள் வாழ்விலும் சமூகவலைதளம் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் இதில் பார்க்கலாம். ‘தி கேம்’ என்பது நம்முடைய நேரம் மற்றும் ஆழமான மனித கதைகள் பற்றியது” என்றார்.

நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்து கொண்டதாவது, “தனது வேலையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு மிக்க கேம் டெவலப்பர் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சமூகவலைதளதங்களில் எதையும் தைரியமாக பேசுபவள் காவ்யா. இதனால் அவளுக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் அதைவிட அதிக வெறுப்பும் கிடைக்கிறது. இது அவளுக்கு தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து தனது குடும்பத்தையும் சொந்தங்களையும் எப்படி காக்கிறாள் என்பதுதான் கதை. வேலையையும் தனிப்பட்ட பொறுப்புகளையும் குழப்பிக் கொள்ளும் பெரும்பாலான தற்கால மாடர்ன் பெண்களை காவ்யா கதாபாத்திரம் பிரதிபலிக்கும்”.

நடிகர் சந்தோஷ் பிரதாப், ” நான் இதுவரை நடித்திராத கேம் டெவலப்பர் கதாபாத்திரத்தில் இந்தத் தொடரில் நடித்திருக்கிறேன். இதுவரை அதிரடியான, வலுவான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற பிம்பம் இந்தத் தொடர் மூலம் உடையும் என நம்புகிறேன். வழக்கமான உடற்பயிற்சி, அழகுப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை தவிர்த்து கதாபாத்திரத்திற்காக  மட்டும் இதில் கவனம் செலுத்தினேன். தோற்றத்தை காட்டிலும் என் கதாபாத்திரம் பேச வேண்டும் என உழைத்திருக்கிறேன். இந்த தொடரில் என்னை பார்வையாளர்கள் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள்” என்றார்.

Related posts:

நிர்வாகம் பொறுப்பல்ல’-- விமர்சனம்!

'கார்மேனி செல்வம்' அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது!

வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது!

‘மார்கோ’வின் வெற்றிக்குப் பின், Cubes Entertainment புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !!

*மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விர...

’மொத ராத்திரி’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!*

Production No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்