இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாயத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.

‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ படத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் புதிய சாகசங்களுக்காக மீண்டும் பண்டோரா உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார்.

மரைன் நாவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நாவி வாரியர் நெய்திரி (ஸோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகசத்தை பார்வையாளர்கள் பெற இருக்கிறார்கள். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா மற்றும் அமண்டா சில்வர் ஆகியோர் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன் மற்றும் ஷேன் சலெர்னோவின் கதையையும் கொண்ட இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தை 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா, டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடுகிறது.

Related posts:

வஸந்த் ரவி - வாங்க சாப்பிடலாம்-முன்னு அழைச்சிருக்கார்!

உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி வைக்கிறது ஜியோ !

இசையமைப்பாளர் ராலே ராஜனின் “Feel the Spark” வைரல் சாதனை!

ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் - ஆய்வில் வெளியான பகீர் தகவல்

*நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!*

சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ர...