‘முசாசி’ படக்குழுவினரைப் பாராட்டிய இலங்கை பிரதமர் !

பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் ‘முசாசி’ படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார்.‌ ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள். படக்குழுவினரை கௌரவப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்ற படக் குழுவினர் அவர் நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக் குழுவினர் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

‘முசாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Related posts:

ஜேப்பியார் பல்கலைக்கழகம் நடத்தும் மானுட சாதனைகளின் உச்சம்

*திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*

“வெற்றிமாறன் சாரின் 'விடுதலை' படத்திற்குப் பிறகு, ’ஜமா’ படத்தில் இன்னொரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” - நட...

லீடர்-- திரைப்பட விமர்சனம்!

"18 மைல்ஸ்" படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்..!

’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகள் பறிமுதல்! அமைச்சா் விஜயபாஸ்கா் தகவல் !!