அபிஷேக் செளபே இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ’கில்லர் சூப்’ தொடர் பற்றி துபாளி!

நெட்ஃபிளிக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீரிஸான ‘கில்லர் சூப்’ க்ரைம், டார்க் காமெடி, விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றுக்காக அதன் தனித்த வெற்றியைத் தக்க வைத்துள்ளது. இதன் திரைக்கதை மட்டுமல்லாது, இதில் நடித்துள்ள நடிகர்களின் திறமையான நடிப்பும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
அதன் மையத்தில் துபாளி என்ற கதாபாத்திரம் உள்ளது. குறிப்பாக இயக்குநர் அபிஷேக் செளபாயின் வழிகாட்டுதலில் உருவாகியுள்ள துபாளி கதாபாத்திரம் மூலம் தன்னைப் பற்றி இன்னும் அதிகம் கண்டறிந்ததாக சொல்கிறார் அன்புதாசன். தமிழில் ’மீசைய முறுக்கு’, ‘கோலமாவு கோகிலா’, ’ஸோம்பி’, ’ஆதித்ய வர்மா’ மற்றும் ’ஓ மணபெண்ணே’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் அன்புதாசன்.

’கில்லர் சூப்’ தொடரில் துபாளி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் தன்னை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றிருக்கிறார் நடிகர் அன்புதாசன். இதுகுறித்து உற்சாகமாக அவர் பகிர்ந்துகொண்டிருப்பதாவது, “அபிஷேக் சௌபேயுடன் இணைந்திருப்பது என்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கிறேன். மேலும் இது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமல்ல. என் வாழ்க்கையில் இதன் மூலம் பல விஷயங்களையும் நான் கற்றுக் கொண்டேன்”.

திரையுலகம் சில சமயங்களில் இயக்குநர்களால் இயக்கப்படும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்றலாம். ஆனால், அதிலிருந்து தனித்துவமான ஒரு இயக்குநராக அபிஷேக் செளபே இருக்கிறார். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தெளிவான பார்வையோடு தன் கதையையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் அணுகியிருப்பது ‘கில்லர் சூப்’ தொடரில் தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்து நடிகர் அன்புதாசன் கூறும்போது, “மற்ற இயக்குநர்களுடன் ஒப்பிடும்போது, அபிஷேக் எப்போதும் அமைதியாகவும் தனது வேலையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். இவரது இந்த தனித்துவமான பண்பு படப்பிடிப்பில் அனைவரையும் ஒத்துழைப்புடனும் ஒவ்வொருவரின் தனித்திறனை வளர்த்தெடுக்கவும் உதவியது” என்றார்.
’கில்லர் சூப்’ தொடர் குறித்தான மறக்கமுடியாத நினைவுகளாக அவர் பகிர்ந்து கொண்டதாவது, “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கேரளாவில் ஒரு மழை நாள். அங்கு மழையால் நிலைமை தீவிரமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாது அபிஷேக் நிலைமையை அமைதியாக கையாண்டார். ‘கில்லர் சூப்’ தொடருக்குப் பிறகு நான் இயக்குநரானால் அபிஷேக் போல மிகவும் கூலாக சூழ்நிலையைக் கையாள வேண்டும் என முடிவு செய்துள்ளேன்” என்றார். இயக்குநர் அபிஷேக் செளபேயின் இந்த பண்பு இளம் தலைமுறையையும் ஊக்குவித்து அவர்கள் விரும்பும் கலையை அமைதியுடனும் பொறுமையுடனும் காதலுடனும் அணுக கற்றுக் கொடுத்திருக்கிறது.

’கில்லர் சூப்’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் விறுவிறுப்பான கதை இதில் இருக்கிறது. இயக்குநர் அபிஷேக் செளபேயின் திறமையான இயக்கம், துபாளி போல மனதைக் கவரும் கதாபாத்திரங்கள், நடிகர்களின் திறமையான நடிப்பு என இந்தத் தொடர் நிச்சயம் எண்டர்டெயின்மெண்ட்டோடு கூடிய சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்.

Related posts:

சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!

நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது, மறு தேர்தலுக்கு உத்தரவு !

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?

விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தில் இசை நாயகன் 'பால் டப்பா' நடிகராக அறிமுகமாகிறார்.!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை திரைப்படம் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாக உள்ளது.!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி!

கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகள் பறிமுதல்! அமைச்சா் விஜயபாஸ்கா் தகவல் !!

தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!