அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் “பரம்பொருள்”. நாகப்பட்டினம் கிராமத்தில் ஒரு வயலில் தென்னை மரம் நடும்போது ஒரு சோழர் காலத்து புத்தர் சிலை கிடைக்கிறது. அதை விவசாயி திருட்டுத்தனமாக விற்கும் போது அந்த விவசாயியை கொலை செய்துவிட்டு இந்த சிலையை ஒரு அருங்காட்சியம் நடத்தும் வியாபாரி கடத்தி கொண்டுப்போகிறார். இந்த சிலையின் விவரம் அறிந்த ஹீரோ அமிதேஷ் திருடுகிறார்.
இதையறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்ரேயன் (சரத்குமார்) அமிதேஷ்யை மிரட்டி இந்த சிலையை கள்ளத்தனமாக விற்க முயல்கிறார். இதற்கிடையில் தன் தங்கை மிகவும் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் இருக்கிறார் இதற்காக தான் நான் இந்த சிலையை திருடினேன் என்று சொல்ல சரி இந்த சிலையை நாம் இருவரும் பங்கு போட்டுக்கொள்வோம் என்று இருவரும் சேர்ந்து விற்க முயல்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா உள்ளிட்ட நட்சத்தி ரங்களின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் “பரம்பொருள்”. நாகப்பட்டினம் கிராமத்தில் ஒரு
வயலில் தென்னை மரம் நடும்போது ஒரு சோழர் காலத்து புத்தர் சிலை கிடைக்கிறது. அதை விவசாயி திருட்டுத்தனமாக விற்கும் போது அந்த விவசாயியை கொலை செய்துவிட்டு இந்த சிலையை ஒரு அருங்காட்சியம் நடத்தும் வியாபாரி கடத்தி கொண்டுப்போகிறார். இந்த சிலையின் விவரம் அறிந்த ஹீரோ அமிதேஷ் திருடுகிறார்.
12 கோடி ரூபாய்க்கு அந்த சிலையை வாங்குவதற்கு ஆள் கிடைத்த நேரத்தில், சிலை ஒரு புல்டோசரால் முற்றிலுமாக சேதமடைந்து விடுகிறது. இதனால், இருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
முடிந்த அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டு ஓய்வு பெற்ற பிறகு சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்கும் போலீஸ் அதிகாரி மைத்ரேயன்(சரத்குமார்). அவரின் இந்த மோசமான குறிக்கோளால் திருமண வாழ்க்கை முறிந்துவிடுவதால் தான் சிலை வியாபாரத்திலும் ஈடுபடுகிறார்.
பழமையான ஒரு புத்தர் சிலையை விற்பனை செய்ய மைத்ரேயனுக்கு உதவி செய்கிறார் ஆதி . ஆனால் அந்த சிலை விற்பனை அவர்கள் நினைப்பது போன்று அவ்வளவு எளிது அல்ல. அவர்கள் தங்கள் செயலில் வெற்றி பெறுவார்களா இல்லை இதனால் பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்ட பெரிய உண்மையை கண்டுபிடிப்பார்களா? வழக்கமான கேங் சண்டை, கொலைகளை விட்டுவிட்டு சிலை கடத்தல் வியாபாரத்தின் நுணுக்கங்களையும், பிரச்சனைகளையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜ். மைத்ரேயன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல்லாக காட்டியிருக்கலாம். சரத்குமாரும் சரி, அமிதாஷ் பிரதானும் சரி அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அமிதாஷின் காதலியாக நடித்திருக்கும் காஷ்மிரா தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜாவின் பி.ஜி.எம். படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.சட்டவிரோத வியாபார உலகை விரிவாக காட்டியிருக்கிறது பரம்பொருள். வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும்.