5 மாநிலங்களில் சறுக்கிய காங்!ஸ்டாலினின் மெகா பிளான்!

சைலண்ட்டாக இருந்தது ஏன்?.. 5 மாநிலங்களில் சறுக்கிய காங்! இதுதான் “சான்ஸ்”.. ஸ்டாலினின் மெகா பிளான்!

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திமுக தரப்பில் சில முக்கிய திட்டங்கள் போடப்பட்டு இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. முக்கியமாக உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்ததன் மூலம் 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைக்குமோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகள் இடையே எழுந்துள்ளது.இதன் காரணமாக மாநில அளவில் வலுவாக இருக்கும் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து 2024ல் தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் இருக்கின்றன. முதல்வர்கள் மம்தா பானர்ஜி, கேசிஆர் ஆகியோர் இது தொடர்பான ஆலோசனைகளை செய்து வருகின்றனர். Ads by Ads by சட்டசபை தேர்தல் வரலாற்றிலேயே.. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் தேர்தல் முடிவு இந்த தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே தேசிய அளவிலான மாநில கட்சிகளின் கூட்டணியை உருவாக்க திமுக முயன்று வருகிறது. முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒரு குடைக்கு கீழ் கொண்டு வரும் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அதோடு இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற வேண்டும் என்று திமுக விரும்புவதாகவே தெரிகிறது. கூட்டணி காங்கிரஸ் தேசிய அளவிலான கூட்டணியில் காங்கிரசை கழற்றிவிடும் எண்ணம் திமுகவிற்கு இருப்பதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வி நிலவியது. ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் வெற்றிபெற எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததும் முக்கிய காரணமாக இருந்தது. காங்கிரஸ் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை தனித்து போட்டியிட்டதும் வாக்குகள் பிரிய காரணமாக இருந்தது. இதை முன்னிட்டே தேர்தல் தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியை தேசிய அளவிலான கூட்டணியில் இணையும்படி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து இருந்தார். காங்கிரஸ் தனியாக செல்ல வேண்டும் என்றால் செல்லலாம் என்று முன்பு கூறியவர், இப்போது காங்கிரசை கூட்டணியில் சேரும்படி கூறி இறங்கி வந்துள்ளார். திமுக பிளான் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிய கூடாது என்பதை மம்தா பானர்ஜி உணர்ந்து கொண்ட நிலையில்தான் இப்படி காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த பின் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அதை பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் போல அதிகம் பேசாமல் முதல்வர் ஸ்டாலின் அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில்தான் முக்கியமான திட்டம் ஒன்றை திமுக தலைமை இதில் போட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. மாநில கட்சி காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தனி தனியாக 2024 தேர்தலை சந்தித்தால் அது வாக்குகள் பிரிய காரணமாக அமையும். இதனால் மாநில கட்சிகள் – காங்கிரஸ் இடையே இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் திமுக இறங்க போகிறதாம். டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட திமுக கட்சி அலுவலகம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கு சோனியா, மம்தா, உத்தவ் தாக்கரே, கேசிஆர் ஆகியோரை அழைக்கும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறாராம். கூட்டணி அமையுமா? இந்த நிகழ்வில்தான் மாநில கட்சிகள் – காங்கிரஸ் இடையே நட்பை உருவாக்க ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர். தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. உ.பி தேர்தலில் அகிலேஷ் உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து இருந்தால் வாக்குகள் பிரிந்து இருக்காது. பல இடங்களில் பாஜக 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதை தடுத்து இருக்கலாம். கூட்டணிக்கான அவசியத்தை உ.பி தேர்தல் உணர்த்திவிட்டது. ஸ்டாலின் பிளான் அதனால்தான் மம்தாவும் இறங்கி வந்துள்ளார். இதை பயன்படுத்தி காங்கிரஸ் – மாநில கட்சிகள் இடையே மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறார் என்று உடன்பிறப்புகள் கூறுகிறார்கள். இதற்காக அவர் அமைதியாக காய் நகர்த்தி வருகிறார். எனவேதான் வெளிப்படையாக எதுவும் கருத்து கூறவில்லை. காங்கிரஸ் உடன் நட்பாக இருக்கும் கட்சி திமுக, இதே திமுக மம்தா, கேசிஆர் ஆகியோருடனும் நட்பாக உள்ளது. எனவே திமுக மட்டுமே இந்த விவகாரத்தில் பாலமாக செயல்பட முடியும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

 

Related posts:

இந்த 5 ரகசிய ஆப்ஸ் (Secret Apps) உங்கள் மொபைலில் இருக்கா..?
ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் !
ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்கிறது!
நான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் ! நடிகை நயன்தாரா !!
விதார்த் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு !
’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
6 ஆண்டுகளில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லை ! அதிர்ச்சி ரிப்போர்ட்!
நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !