தமிழக ஆளுநர் பதவி விலகுவாரா ? இல்லை மாற்றப்படுவாரா ? இதுதான் ஹாட் டாபிக்கா போய்க்கிட்டு இருக்கு ? ஏன் என்ன பிரச்சினைன்னு பாக்கலாம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக உள்ளதாக கூறப்படும் தகவல் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்குது.
ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக சட்ட சபையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை சட்டப்பேரவையின் சபாநாயகர் மறுபரிசீலனைக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிட்டாரு.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட சுமார் 5 மாதங்களுக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது முடிவை அறிவித்துள்ளார். அதே சமயம் இந்த சட்ட முன்வடிவு மாணவர்கள் நலன்களுக்கு எதிரானது எனவும், ஆளுநர் மாளிகை கூறி இருக்குது.
பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200வது விதியின்படி ஒரு மாநில சட்ட பேரவையால் மசோதா நிறைவேற்றப்பட்டால் முதலில் ஒப்புதலுக்காக அந்த மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது அதற்கான ஒப்புதலை தடுத்து நிறுத்தலாம் அல்லது குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக அந்த மசோதா மீதான முடிவை ஒத்தி வைத்ததாக அறிவிக்கலாம்.
ஒருவேளை அந்த மசோதா பண மசோதாவாக இல்லாவிட்டால் அதில் உள்ள சில அம்சங்களை மறுபரிசீலனை செய்யக்கோரி சட்டப்பேரவைக்கே மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும்.
குறிப்பா மசோதாவில் திருத்தம் செய்தால் சரியாக இருக்கும் என ஆளுநர் அறிவுறுத்திய விஷயங்களை திருத்தம் செய்ய மாநில சட்டப்பேரவை கூடி மசோதாவில் திருத்தம் செய்து அல்லது மீண்டும் திருத்தம் இல்லாமல் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம்.
மாநில அரசு மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், இந்த முறை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது கட்டாயம் குடியரசு தலைவருக்கு அனுப்பியே ஆகணும். எனவே 2வது முறையும் அந்த மசோதாவை ஆளுநரால் நிராகரிக்க முடியாது.
தற்போது தமிழக அரசு இந்த மசோதாவை 2வது முறையாக ஆளுநருக்கு அனுப்பி இருப்பதால் அதை நிராகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஒண்ணு ஒப்புதல் அளிக்கணும் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பணும்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை உருவாக்கியதன் மூலம் ‘இந்த பிரச்சனையை என்னால் தீர்க்க முடியவில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கன்னு ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக மேலிடத்துக்கு சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
எனவே, பிரச்சனைகளை தீர்ப்பதாக உறுதியளித்து தமிழகம் வந்த ஆளுநர் தற்போது, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கே சிக்கலை ஏற்படுத்தி ஒட்டுமொத்த இமேஜை டேமேஜ் செஞ்சிட்டாரு.
மேலும், தமிழக அரசை மிரட்டி கட்டுக்குள் கொண்டு வந்து சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக மாற்ற வேண்டும் என்கின்ற பாஜக பிளானையும் ஆளுநர் ஆர்.என்.ரவி நீர்த்து போக செய்துட்டார்.
இனியும் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிக்க நேர்ந்தால் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தந்தே ஆகணும்ங்கிற இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநரை நீக்கினாலோ அல்லது வேறு இடத்துக்கு இடமாற்றம் அளித்தாலும் கூட மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும்.
எனவே ஆளுநர் தாமாக முன் வந்து பதவி விலகினால் மட்டுமே பிரச்சனைக்கு தற்காலிகமாக உடனடி தீர்வு காண முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் முதலில் இருந்து இந்த பிரச்சனையை கிடப்பில் போடலாம் என்பது பாஜக பிளான்.
இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு தெரிந்தோ தெரியாமலோ பாஜகவுக்கு உதவி செஞ்சிருக்கிறாங்க.
அதனால இதையே சாக்காக வைத்து ஆளுநர் பதவி விலகுவது குறித்து பாஜக ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்குது. இதனால் கிண்டி ஆளுநர் மாளிகையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.ஆளுநர் தாமாகவே ராஜினாமா செய்வாரா இல்லை மத்திய அரசு வேறு மாநிலத்துக்கு மாத்துமாங்கிறதப் பொறுத்திருந்து தான் பாக்கணும்.பாப்போம்.