வீடுகளை வாடகைக்கு விடுவோர்,2 மாத வாடகையைத்தான் முன்பணமாக வாங்கணும்!

வீடுகளை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகையை மட்டுமே, முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக பெற வேண்டும்’ என,மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வாடகை வீட்டு வசதியை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கியுள்ளது.இதில், வாடகை வீட்டு வசதி மாதிரி சட்ட வரைவை, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு அனுப்பியுள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், ‘நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள், பொறுப்புகள் சட்டம் – 2017’ நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், பல்வேறு திருத்தங்களுக்கு பின், பிப்ரவரி, 22ல் அமலுக்கு வந்துள்ளது.இதற்காக, 32 மாவட்டங்களிலும் வாடகை வீட்டுவசதி ஆணையம், வாடகை தொடர்பான வழக்குகளுக்காக, 32 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வாடகை தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதற்குமான மாதிரி வாடகை வீட்டுவசதி சட்டத்தை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மீது, பொது மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.இந்த மாதிரி சட்டத்தில், வாடகைதாரர்களின் உரிமைகளுக்கு இணையாக, நில உரிமையாளர்களின் உரிமைகளுக்கும், பாதுகாப்பு அளிக்கும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, வீட்டை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகைக்கு இணையான தொகையை மட்டுமே முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக வசூலிக்க முடியும்.

வாடகையை உயர்த்த வேண்டும் என்றால், அது குறித்து, குடியிருப்போருக்கு, மூன்று மாதங்களுக்கு முன் அறிவிக்க வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், அவருக்கு அபராதம் விதிக்க, இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதன்படி, ஒப்பந்த காலத்துக்கு பின், ஒவ்வொரு மாதத்துக்கும், இரு மடங்கு வாடகையை, உரிமையாளர் வசூலிக்க முடியும். பெருநகரங்களில் வணிக நோக்கில், வாடகை வீட்டு வசதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Related posts:

*சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம்...

வாழை' படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில் ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’!

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் - அஸ்வத்மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய 'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!

விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்!

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்!