பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்துள்ள ஸ்டாலின் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து ஒரு பட்டியல் தயாரித்துள்ளாராம்.
அதுல சரியா செயல்படாத அமைச்சர்களை கழட்டிவிட அமைச்சரவையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வர உள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைஞ்சிருக்குது. பத்தாண்டுகளுக்கு அப்புறமா ஆட்சிக் கட்டிலில் திமுக ஏறியிருக்கும் நிலையில் பழைய விமர்சனங்கள், புகார்கள் இனி வரக்கூடாதுங்கிறதுல ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாரு.. அதனாலே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றாரு. விமர்சனங்களை தவிர்ப்பதற்காக உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்தாரு.
ஸ்டாலினின் நிர்வாகம் குறித்து பாராட்டு தெரிவிப்பவர்கள் கூறும் முக்கியமான விஷயம், அமைச்சர்களை சுதந்திரமாக இயங்க ஊக்குவிக்கிறாருங்கிறதுதான்.இத கொரோனா சமயத்தில் எல்லா அமைச்சர்களும் ஓடியாடி வேலை செஞ்சதப் பாக்க முடிஞ்சது. அதனாலே அவங்களால் சிறப்பாக செயல்பட முடிஞ்சதுன்னு பாராட்டு பத்திரங்கள் வாசிக்கப்பட்டது. ஆனால் ஸ்டாலினின் இந்த அணுகுமுறையை எத்தனை அமைச்சர்கள் துறை வளர்ச்சிக்கு பயன்படுத்துறாங்க. எத்தனை பேர் தனது வளர்ச்சிக்கு பயன்படுத்துறாங்கங்கிற கேள்வி வந்தது.

அமைச்சரவை அமைக்கும் போது ஸ்டாலின் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தாரு. அனுபவமும், இளமையும் கலந்திருக்கக்கூடியதாஅமைச்சரவை இருக்க வேண்டும் என நினைத்தார். அதுபோலவே அமைச்சரவையை உருவாக்கினார். ஆனால் ஆக்டிவாக செயல்படக்கூடியவர்களுக்கே முக்கிய பதவிகளை வழங்கினார். தன்னால் கண்டிப்பு காட்ட முடியாத சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு சில இலாகாக்களை குறைச்சே வழங்கினாரு.

துரைமுருகன் தனக்கு பொதுப் பணித்துறை கிடைக்கும்னு எதிர்பார்த்தாரு.ஆனா அதிலிருந்து நீர்வளத்தை மட்டும் தனியாக பிரித்துக் கொண்டு வந்து அவருக்கு கொடுத்தார் ஸ்டாலின். இது துரைமுருகனுக்கு பிடிக்கலை. எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்ல அவரை சமாதானப்படுத்துவதற்காகவே கனிமவளத்தையும் பின்னர் சேர்த்துக் கொடுத்துள்ளார். கே.என்.நேரு தனக்கு உள்ளாட்சித் துறை வரும் என எதிர்பார்க்க அவருக்கோ அதிலிருந்து நகர்ப்புற வளர்ச்சித் துறை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத் துறை கொடுத்தது பிடிக்கவில்லை.
சீனியர் அமைச்சர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கலைன்னு அதிருப்தி தெரிவிச்சதோடு, கட்சிக்கு புதியவர்கள், இளைஞர்களுக்கு முதலமைச்சர் அள்ளிக் கொடுத்துட்டாரேங்கிற அதிருப்தியும் சேர்ந்துகிடுச்சி.. இந்த அதிருப்தி சக அமைச்சர்களுடன் முரண்பாட்டை வளர்ப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அமைச்சர்கள் நீயா, நானா என மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டதாக முதல்வருக்கு ரிப்போர்ட் போயிருக்குன்னு சொல்றாங்க.
இதனால் துறை ரீதியான செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படுவதாகவும் அதனால் ஆட்சி குறித்து மக்களிடையே அதிருப்தி ஏற்பட இது காரணமாக அமையும்னு முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாரு. அதனால சீனியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு கூடுதல் இலாகாக்களை வழங்க போறார் முதல்வர் ஸ்டாலின். அதை யாரிடமிருந்து எடுத்து கொடுக்கப்போகிறார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்குது.
மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன் இவங்கள்லாம் சிறப்பா செயல்படுவதாக ஸ்டாலினுக்கு தகவல் வந்துள்ளது. அதேசமயம் துறை ரீதியான செயல்பாட்டில் சுணக்கம் காட்டுவதாகவும் ஒரு பட்டியல் ஸ்டாலின் கிட்ட வந்திருக்குது. அதில் கயல்விழி, நாசர், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், பெரிய கருப்பன், மதிவேந்தன், ராமச்சந்திரன் ஆகிய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதுன்னு சொல்றாங்க . ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு இவர்களிடமிருந்து சில இலாகாக்கள் சீனியர் அமைச்சர்களுக்கு போகும்னு உறுதியா சொல்றாங்க. திமுக உயர்மட்ட விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து அவர்களது செயல்பாட்டில் மாற்றம் இல்லைன்னா அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் இருக்காதுன்னும் தெளிவா சொல்றாங்க.நிர்வாகம் நல்லபடியா நடக்கணும், நல்லாட்சி மூலம் மக்களுக்கு நல்லது பண்ணணும்ணா இது போல் களையெடுப்பு அவசியம் தான்..