கிடப்பில் போடப்பட்ட இராமநாதபுரம் உப்பூர் அனல் மின்நிலையம் உற்பத்தி செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 180 கோடி செலவு!
!
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், புதிய மின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, திட்டங்கள் தீட்டி முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதும், அடுத்து வருகின்ற அதிமுக ஆட்சியில் அத்திட்டங்கள் முடிவுக்கு கொண்டு வருவதும் கடந்த காலத்தில் நாம் கண்ணால் கண்ட சம்பவங்கள்.
2006 – 2011 திமுக ஆட்சியில், அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் மூலம், 2011 – 2016 ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக ஆட்சியில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மின்தடை பிரச்சினையின்றி சமாளித்து வந்தார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கும் முன்னர், 24.02.2016 இல் உலக தொழில் முனைவோர் மாநாடு என்ற ஒன்றை மிகப்பெரிய விளம்பரத்துடன் நடத்திய நிகழ்வு முடிவுற்ற மூன்றாம் நாள் 27.02.2016 அன்று, இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 995.16 ஏக்கர் பரப்பில் ரூ.12 ஆயிரத்து 778 கோடி மதிப்பில் நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனில் இரண்டு அலகுகள் கொண்ட, மிக உயரிய உப்பூர் அனல் மின் திட்டத்துக்கு (super critical) சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக, அடிக்கல் நாட்டினார்.அன்றைய முதல்வர் ஜெயலலிதா .
இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த நத்தம் ஆர். விசுவநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகிட்டாங்க.
உப்பூர் அனல்மின் திட்டமானது செப்டம்பர் 2019 இல் நிறைவுப் பெற்று, நாளொன்றுக்கு 38.4 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று பக்கம் பக்கமாக ஜெயலலிதா ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.
2006 – 2011 இல் நத்தம் விசுவநாதன் மின்துறை அமைச்சராக இருந்து நடத்திய டீலிங்கில், தன்னை ஏமாற்றி விட்டதாக கருதிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2016 தேர்தலில் போட்டியிடவே வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்.
2016 தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அவர்கள் மின்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பி.தங்கமணியை நியமித்தார்.
கடந்த ஐந்தாண்டு அதிமுக ஆட்சியில் மணி (Money) பவருடன் வலம் வந்த மூன்று மணியான (வேலு”மணி” – தங்க”மணி” – வீர”மணி”) அமைச்சகர்களின் வசூல் இரகமே தனி இரகம் தான்.
கடந்த ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி கடந்த 26.06.2019 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில், வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், உப்பூர் அனல் மின் திட்டம், உடன்குடி அனல் மின் திட்டம் நிலை-1, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திட்டம், குந்தா நீரேற்று புனல் மின் திட்டம், கொல்லிமலை நீர் மின்திட்டம் ஆகிய புதிய மின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
ஆக எந்தவொரு மின்திட்டமும் ஜூன் 2019 வரை ( ஏன் இன்று வரை ) உற்பத்தியை தொடங்க வில்லையென்பதே, அதிமுக ஆட்சியின் நிர்வாக இலட்சணத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இதில் வருடத்தில் எட்டு மாதங்கள் நீர் வரத்தே இல்லாத கொல்லிமலையில், 20 மெகா வாட் உற்பத்தி செய்யும் அனல்மின்திட்டம் அறிவிக்கப்படுகிறது. இதற்கு நிதித்துறைச் செயலாளர் ஆக ஞானதேசிகன் இருந்த போது, 325 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு என்று கூறி, திட்டம் கால தாமதம் ஆனதால், 20 % உயர்த்தி (?) 405 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டு, செலவு கணக்கு முடிந்துள்ள நிலையில், அத்திட்டம் மூலம் 20 மெகாவாட் அவ்வளவு கூட வேண்டாம் நாளொன்றுக்கு 20 யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்பட வில்லை.
சரி இதுதான் இப்படியென்றால், இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் தொடங்கப்பட்ட மிக உயரிய அனல் மின் நிலையத்தில் எவ்வளவு உற்பத்தி ஆகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், சிங்கிள் யூனிட் மின்சாரம் கூட இன்றைய தேதி வரை உற்பத்தியாக வில்லையென்ற அதிர்ச்சி தகவல் தான் கிடைத்துள்ளது.
உப்பூர் அனல்மின் நிலையத்திற்காக 995 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று கண்டறியப்பட்டது. இதில் 768 ஏக்கர் பட்டா நிலமாகவும், 227 ஏக்கர் புறம்போக்கு நிலமாகவும் இருந்தது. பட்டா நிலங்களில் 418 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களுக்கு 17 கோடி ரூபாய் நிதி மின் வாரியத்தின் மூலம் கடந்தாண்டு ஜூன் ஒன்றாம் தேதிதான் வழங்கப்பட்டது. மீதமுள்ள 350 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர்.
அதிமுகவின் ஆட்சியில் அமைச்சர்கள் எந்தவொரு திட்டத்துக்கும் அதன் சாத்தியக்கூறுகள் (Feasibility), சரியான திட்டமிடல் (Prober Planning), நில எடுப்பு விவகாரம் முடிவுறாது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திட்டம் அறிவித்துவிட்டு செலவுக்கணக்கும் எழுதியிருக்காங்களாம்..
இத்திட்டத்தில் நிலம் எடுப்பு போக, அனல் மின்திட்டப் பணிகள் பேக்கேஜ் முறையில் மூன்று நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்குது.
பாரத் மிகு மின் நிறுவனம், கட்டுமானம், டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் அமைத்திட 5 ஆயிரத்து 852 கோடி ஒதுக்கி திட்ட தொடக்க நாளென்றே பணியாணை வழங்கப்பட்டிருக்குது. 21.02.2018 இல் பேலன்ஸ் ஆப் ப்ராஜெக்ட் (BOP) என்ற பெயரில் 3 ஆயிரத்து 647 கோடி ரூபாய்க்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படுது.
அனல் மின் திட்டம் உயர் கோபுரங்களை குளிர்விக்க, கடல்நீரை நன்னீராக்கிடும் திட்டத்துக்கு, கடல் நீர் கொண்டு வர எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு கடலில் பாலம் அமைத்து குழாய்கள் பதிக்கும் பணிக்கு (Sea water Intake Pipe) பணிக்கான ஒப்பந்தம் 08.05.2018 அன்று எல் அண்ட் டி நிறுவனத்துக்கு 999 கோடி ரூபாய் என்று போடப்படுது.
மொத்தம் 10 ஆயிரத்து 566 கோடி ரூபாய்க்கு மூன்று நிறுவனத்துக்கும் ஒப்படைத்த பணிகளுக்காக இது வரை மூவாயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 18.05.2016 மற்றும் 29.10.2018 அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டதால் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தரப்படுது.
ஆயினும், உப்பூர் அனல் மின் நிலையத்தில் மின் உலைகளை குளிர்விப்பதற்காக கடலில் தண்ணீர் எடுப்பதற்காக கடலுக்குள் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கும் வேலை நடைபெற்று வருவதால், தேவிபட்டினம் முதல் தொண்டி வரையிலான கிராம மக்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளும், கடலில் வளரக்கூடிய புற்கள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்ற உயிரினங்களும் அழியும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அப்பகுதி காரங்காடு, புதுப்பட்டினம், சிங்கார வேலன், காசிப்பட்டினம், தேவிப்பட்டினம் உள்ளிட்ட 25 க்கும் அதிகமான கிராம மக்களும், மீனவ மக்களும் தொடர் போராட்டம் நடத்தினாங்க.
அப்போது இனி பாலம் கட்டும் வேலை நடைபெறாதுன்னு அதிகாரிகள் உறுதி அளிச்சாங்க. ஆனால் அதன் பின்னர் மீண்டும் அங்கு பணிகள் தொடங்கி நடைபெறுவதை கண்டித்து, மீனவர்கள் கடல் மார்க்கமாக படகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுக்குள் பாலம் கட்டும் திட்டத்தை கைவிடும் வரை எங்களின் போராட்டம் தொடரும். மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அழிக்கக்கூடிய இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும்னு குரல் கொடுத்தாங்க.
கட்டுமானப் பணிகள் தொடங்காத நிலையில், கோடிக்கணக்கான மதிப்பிலான இயந்திர தளவாடங்கள் வந்திறங்கிய நிலையில் அவை பாதுகாப்பின்றி வெய்யிலிலும், மழையிலும் கிடந்து, சமீபத்தில் பெய்த பெருமழையில் உருவான தண்ணீரில் மூழ்கி பார்க்கும் நமது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
இதற்கிடையில், கடந்த 18.03.2021 அன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உப்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது என்பது பெரும் அதிரிச்சி செய்தி மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நிர்வாகத்தின் அவலத்துக்கு இது ஒரு சான்றுன்னு சொல்லலாம்.
இந்நிலையில் இதுவரை சிங்கிள் யூனிட் உற்பத்தி செய்யாத இத்திட்டத்துக்கு இதுவரை செல்விடப்பட்டுள்ள மூன்றாயிரம் கோடி ரூபாய், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்(Rural Electrification Corporation Limited) மூலம் பெறப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.
சிங்கிள் யூனிட் கூட உற்பத்தி செய்யாத இத்திட்டத்துக்கு மாதந்தோறும் 180 கோடி ரூபாய் மின் வசதியாக்க நிறுவனத்துக்கு வட்டி கட்டும் அதிமேதாவி அமைச்சராக பி.தங்கமணி இருந்துள்ளார்.
சாதாரணமாக தொழிற்சாலை கட்டும் ஒரு நபர், தான் வாங்கிய இடத்தில் கட்டுமானம் முடிந்த பின்னர்தான் இயந்திர தளவாடங்கள் வாங்குவது, நிறுவுவது என்று படிப்படியாக பணிகளை முடிப்பார்.
ஆனால், மக்களை மின்கட்டனம் என்றப்பெயரில் சுரண்டிடும் தமிழ்நாடு மின்சார வாரியம், முடிவுறாத பணிக்கு 180 கோடி ரூபாய் மாதந்தோறும் வட்டிக்கட்டும் கொடுமைக்கு காரணமாக இருந்த அமைச்சர்கள், அலுவலர்கள் ( நிர்வாகம் மற்றும் பொறியாளர்கள்) அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு சுமத்தி, சாத்தியக்கூறு இல்லாத திட்டத்துக்கு செல்விடப்பட்ட தொகையை வட்டியும் முதலுமாக பிடித்தம் செய்ய வேண்டும் என்று மின்சார வாரியத்தில் பேரிடர் காலங்களிலும் உயிரைத் துச்சமென நினைத்து பணியாற்றும் களப்பணியாளர்கள் ஒருமித்த குரலில் சொல்றாங்க..
தமிழ்நாட்டின் மின்சார தேவையை சமாளிப்பதற்காக 3,200 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வது என அ.தி.மு.க அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2028 வரையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அவ்வாறு தனியாரிடம் கொள்முதல் செய்துவிட்டு `மின் மிகை மாநிலம்’னு கூசாமல் பொய் சொல்லிட்டு வந்தாங்க.
ஆனால், எந்தக் காலத்திலும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்ததில்லை. தமிழ்நாட்டின் மொத்த தேவை என்பது 16,500 மெகா வாட் மின்சாரம் ஆகும். இதில், சென்னை மாநகருக்கு 3,600 மெகாவாட் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் 3 கோடியே 10 ஆயிரம் நுகர்வோர்கள் இருக்கிறாங்க.. அதுமட்டுமல்லாமல், ஓர் ஆண்டுக்கு புதிதாக 750 மெகாவாட் மின்சாரத்தை நாம் கட்டாயமாக உற்பத்தி செய்தாக வேண்டும். 16,500 மெகாவாட்டுடன் 750 சேர்த்து 17,250 என்ற கணக்கில் ஆண்டுதோறும் புதிதாக உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். நகர்ப்புற விரிவாக்கம், தொழிற்சாலைகள் பெருக்கம், தொழில்நுட்ப பூங்கா, புதிய வீடுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு இதனைச் செய்ய வேண்டும்.
`தற்போது ஜூன் முதல் செப்டம்பர் வரையில் காற்றாலையில் இருந்து நமக்கு மின்சாரம் கிடைக்குது.இப்போ காற்றாலைகள் 8,500 மெகாவாட் திறனுள்ளதாக இருக்குது. இதில இருந்து 2,800 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் உறுதியாகக் கிடைத்து வருது. அது இந்த 4 மாதங்களுக்கு மட்டும்தான். அதன்பிறகு 400 மெகாவாட் கிடைப்பதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும். காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும் இந்தநேரத்தில் மின்தடை உள்ளது என்று கூறுவதே தவறானது”
மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து (நெய்வேலி, கல்பாக்கம் உள்பட) 6,800 மெகாவாட் மின்சாரம் நமக்கு வருகிறது. இதுதவிர, மின்சாரத்தை தனியாரிடம் இருந்து பெறாமல் தமிழக அரசே உற்பத்தி செய்ய வேண்டும். மத்திய நிதித்துறை அமைச்சகம், 25 ஆண்டுகளாக இயங்கி வரும் அனல் மின் நிலையங்களை மூட வேண்டும் எனக் கூறியுள்ளது. அதாவது நிலக்கரி அடிப்படையில் இயங்கும் நிலையங்களை மூடிவிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றபடி தயாரிக்க வேண்டும் என்ற முடிவில் இந்திய அரசு உள்ளது.
நாமும் நிலக்கரிக்கு மாற்றாக சோலார் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சோலார் பேனல்களை ஒருமுறை பொருத்திவிட்டால் 25 ஆண்டுகளுக்கு பேட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதற்காக சோலார் பூங்காக்களை அரசு உருவாக்க வேண்டும்.
பசுமை வழிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கு ஏராளமான புதிய வழிகள் இருக்குது. அதனைச் சரியாக செய்தாலே மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடையலாம். மேலும், வணிக நிறுவனங்கள், ஐ.டி பூங்காக்களில் சோலார் பேனல் பொருத்துமாறு அரசு கட்டாயப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மின் செலவில் 10 சதவிகிதத்தை மிச்சப்படுத்தலாம். இதன்மூலம் மின்வாரியத்துக்கான சுமையும் குறையும்”
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மின் உற்பத்தி கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிந்து இழப்பினை சரி செய்வதோடு மின் உற்பத்தி க்கு தேவையான திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு? செய்வீர்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே !