வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வேண்டுமா? செம வாய்ப்பு !

நீங்கள் 2019 அல்லது அதற்குப்பிறகு நீட்தேர்வில் தகுதி பெற்றிருந்தால் மிகவும் குறைந்த கட்டணத்தில் அதுவும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கமுடியும்!

மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் ஒரு நல்ல வருமானம் தரகூடிய பணியில் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், அதுஒரு பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர், பட்டய கணக்காளர் அல்லது இது போன்ற பல தொழில்களாக இருக்கலாம். இருப்பினும், +2இல் அறிவியலைத் தேர்ந்தெடுப்பவர்கள், அவர்களின் முதல் விருப்பமாக மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) கனவு காண்கின்றனர். மருத்துவப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்களுக்கான பொதுவான நுழைவுத் தேர்வாக நீட் (NEET) நடத்தப்படுகிறது.

குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்கு பல லட்சம் மாணவர்களுக்கு இடையே போட்டி நடக்கிறது. நாட்டின் புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சிலவற்றில் இடம் பிடிக்க மாணவர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் இடம் பிடிக்க நீட் (NEET) தேர்வில் முதல் 4000-5000 தரவரிசையில் இருந்தால் மட்டுமே முடியும். இந்தியாவில் தெற்குப் பகுதியில் நீட் (NEET) தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்றவர்களில் தமிழக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் உள்ளனர். ஆனால், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் நம்மை விட சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

நீட்டில் தகுதி பெறுபவர்களின் விகிதம் மற்றும் நாட்டில் உள்ள குறைவான மருத்துவ இடங்கள் ஆகியவையும் மாணவர்களின் மருத்துவ கனவைக் கலைக்கிறது. சென்னை, பெங்களூரு மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வேல்ஸ் குழு மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் தனது சென்னை வளாகத்தில் ஒரு ப்ரீ- மெட் (Pre-Med) திட்டத்தை இதற்காக வழங்கியுள்ளது, இது பிலிப்பைன்ஸ் சென்று அங்கு மருத்துவபடிப்பை (Doctor of Medicine) படிக்க அனுமதிக்கிறது. பிலிப்பைன்ஸில் உள்ள நிறுவனங்கள் நல்ல உள்கட்டமைப்பு, ஆசிரியர் மற்றும் தரமான மருத்துவக் கல்வியை வழங்கும் வசதிகளைக் கொண்டுள்ளன.

மருத்துவ பட்டங்களை வெளிநாட்டில் படித்த பல இந்தியமாணவர்கள் உள்ளனர். இருப்பினும், இவை எதுவும் பிலிப்பைன்ஸில் உள்ள நிறுவனங்களால் நேரடியாக தமிழகத்தில் ஊக்குவிக்கப்படுவதில்லை. அதேபோல் வெளிநாட்டில் பலமாணவர்கள் தாழ்ந்த மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத நிறுவனங்களில் படிக்கும்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் வேல்ஸ் குழுமம் மூலம் மிகவும் வெளிப்படையாக, நேர்மையான முறையில் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனை நிறுவனங்களில் படிக்க வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

வேல்ஸின் இந்த வாய்ப்பைக் கேட்டு மாணவர்களும் பெற்றோர்களும் இப்போது ஒரு பெரிய பெருமூச்சு விடுகிறார்கள். நம் நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டில் கல்விக்கட்டணமும் மலிவு மற்றும் மாணவர் வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும். சென்னையில் வேல்ஸ் குழுமத்தால் நடத்தப் பட்ட ப்ரீ-மெட் திட்டத்தில் சேரும் மாணவர்கள் எதிர்காலம் உறுதியாகிறது.

முதல்முறை இப்படி ஒரு புகழ் பெற்ற கல்விக் குழுவால் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் பிலிப்பைன்ஸுக்கு சென்று, அங்கு படிப்பைத் தொடர்ந்து, அதன் பின் நான்கு ஆண்டு எம்.டி (Doctor of Medicine) படிப்புப் படிக்கவும் முடியும். இறுதி ஆண்டு மருத்துவபடிப்பு இங்கு மருத்துவமனையில் நேரடியாகப் பயிற்றுவிக்கப்படும்.

குறைவான கட்டணம், பாதுகாப்பான சுற்றுப் புறங்கள் மற்றும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அமெரிக்க கல்விமுறை, ஆகியவை வெளிநாட்டு மண்ணில் மருத்துவப் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நல்ல ப்ளஸ் பாயிண்டாக இருக்கும். முக்கியமாக பிலிப்பைன்ஸில் படிப்பது அதிக நன்மையை அளிக்கும். பிலிப்பைன்ஸில் உள்ள கல்வி நிறுவனங்கள் / மருத்துவக் கல்லூரிகளை உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை மற்றும் உயர் கல்வி ஆணையம் (CHED) அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.