மத்திய கைலாஷ் அடையாறு பாலத்தில் பயமின்றி செல்லலாம்..! தமிழக அரசு விளக்கம்!!

சென்னை: அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்குதடையின்றிச் செல்வதற்கு ஏதுவாக சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.61 கோடியில் ‘எல்’ வடிவ மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 16-ந்தேதி திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள பகுதி என்றால் அது ஓஎம்ஆர் சாலை தான். மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடங்கி நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன, மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அலுவலங்களும் அமைந்துள்ளன. இதனால் எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதேநேரம் மெட்ரோ பணிகள் நடக்கும் காரணத்தால் பெரிய அளவில் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுக்க அரசால் முடியவில்லை. இந்த சூழலில் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.61 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘எல்’ வடிவ மேம்பால பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது. இந்த மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-  மத்திய கைலாஷ் அடையாறு பாலத்தின் உச்சியில் அபாயகரமான வளைவு.. வடிவமைத்தது யார்? மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்குதடையின்றிச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

Related posts:

உலகில் அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடம் !

கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கு­வது சிறந்­ததா?

குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...

பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் அகோரிகள் ஏன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

'டிராய்' உத்தரவை மீறும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் !

கிரீன் கார்டு வேணுமா? அதிகமா சம்பாதியுங்க - அமெரிக்கா அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!

நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் !