ரூ.8.64 லட்சம் விலையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் !

போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை எதிர்பாராத வகையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் விற்பனையில் அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம். ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் ட்யூக் மற்றும் ஆர்சி என்ற இரண்டு வகை பாடி ஸ்டைலில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில், ட்யூக் என்ற திறந்தமேனி வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டன. இதனால், ட்யூக் வரிசையில் 125, 200, 250, 390 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வந்தது. இவை அனைத்துமே சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள். இந்த நிலையில், அண்மையில் ட்யூக் வரிசையில் மிக சக்திவாய்ந்த இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக 790 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 23ந் தேதி இந்த புதிய ட்யூக் பைக்கை இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் களமிறக்கியது. ரூ.8.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் மாடல் வந்தது. போட்டியாளர்களைவிட இந்த பைக் சற்று விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்ட மாடலாக கருதப்பட்டது. ஆனால், அதிக தொழில்நுட்ப அம்சங்கள், மிரட்டலான டிசைன் ஆகியவை இந்த பைக்கிற்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு முதல் 10 நாட்களில் மட்டும் 41 கேடிஎம் 790 ட்யூக் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கேடிஎம் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த புதிய 790 ட்யூக் பைக் மாடல் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கவுகாத்தி, சூரஸ் ஆகிய 9 நகரங்களில் மட்டுமே முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், சிறப்பான டீலர் நெட்வொர்க்கும் இந்த பைக்கிற்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் 30 நகரங்களுக்கு மேல் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும். புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் இருக்கும் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 799 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் முழுவதுகமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 300 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. MOST READ:புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்! இந்த பைக்கில் ரெயின், ஸ்ட்ரீட், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் ஆகிய நான்கு விதமான பயன்பாட்டுக்கு தக்க டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இநத் பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வளைவுகளில் திரும்பும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாய்ந்து கீழே விழும் நிலை குறித்து எச்சரிக்கும் வசதி, ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஸ்லிப்பர் க்ளட்ச், குயிக் ஷிஃப்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.இந்த பைக்கில் முழுமையான டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கிற்கு கேடிஎம் பவர்பார்ட்ஸ் என்ற பெயரில் பிரத்யேக ஆக்சஸெரீகள் கொடுக்கப்படுகின்றன.