ரிசல்ட்டுக்குப் பிறகு அதிமுக தன் கைக்கு வருமா? ஜோதிடர்களுக்கு வலை வீசும் சசிகலா…

ரிசல்ட்டுக்குப் பிறகு அதிமுக தன் கைக்கு வருமா? ஜோதிடர்களுக்கு வலை வீசும் சசிகலா…

மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைக்குமா.?..திமுக ஆட்சி அமைக்குமான்னு இரண்டு கட்சித் தலைவர்களும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறாங்க ?. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என ஒரு பெரும் பட்டாளமே அண்ணா அறிவாலயத்திற்கு போக வேண்டியிருக்குமா.. ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு போக வேண்டியிருக்குமான்னு குழம்பிப் போயிருக்காங்க.!

இப்படிபட்ட சூழலில், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக தனது கைக்கு வருமா ? என்று சரியாக குறி பார்த்து சொல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோதிடம் பார்த்த பிரபல சோதிடர்களை எல்லாம் வலை வீசி சசிகலா தேடிக் கொண்டிருப்பதாக தகவல் ஒன்று பரவி வருது. அப்படிபட்ட தகவலை மன்னார்குடி மைனர் பரப்பி வர்றதா சொல்றாங்க ! பெங்களுரில் இருந்து சென்னை வந்த கொஞ்ச நாட்களிலேயே இந்த தேர்தலில் அதிமுக நிச்சயம் தோற்கும் என்பதை உணர்ந்து கொண்டார், சசிகலா. சரிந்து கொண்டிருக்கும் அதிமுக அரசின் செல்வாக்கை தூக்கி நிறுத்தி, திமுக.வுக்கு இணையான பலத்தோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தனது தலைமையை ஏற்பார்கள், அமமுக.வை கூட்டணியில் சேர்ப்பார்கள் என்றெல்லாம் கனவு கண்டார் சசிகலா. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொங்கு மண்டல அமைச்சர்கள், சின்னம்மா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலை அதிமுக.வில் ஒருபோதும் சேர்க்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இப்போதும் அப்படியே இருக்கிறார்கள்.

இதையறிந்த சசசிகலா அரசியலில் இருந்து ஒதுக்கியிருப்பதாக அறிவித்துவிட்டு, புனித யாத்திரை மேற்கொண்டார். அதன் பின்னணியிலேயே, அரசியலில் இருந்து தான் ஒருபோதும் ஒதுங்கப் போவதில்லை என்பதை தென்மாவட்ட அதிமுக.வினருக்கும் பிற மண்டலங்களில் உள்ள தனது விசுவாசிகளுக்கும் தெரிவிப்பதற்கான ஒரு யுக்தியாகதான் தனது ஒதுங்கும் நாடகத்தை கடைப்பிடித்தார்.

தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோதுகூட, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தீராத விசுவாசம் கொண்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள், எம்.ஜி.ஆர்.காலத்து முன்னணி நிர்வாகிகள் என பலரை அழைத்து, அவர்களின் மனவோட்டங்களை அறிந்து கொள்வதிலும், தனது தலைமையை ஏற்று அதிமுக.வில் மீண்டும் ஆர்வமாக செயல்படும் வகையில் அவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குமான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

அதேபோல, அதிமுக ஆதரவு மனநிலையில் உள்ள எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், திரைப்படத் துறையினர் என பல்வேறு தரப்பினரையும் அழைத்து நெகிழ்ச்சியுடன் பேசி, அவர்களை எல்லாம் தனது புகழ்பாடும் பாவலர்களாக மாற்றும் முயற்சியிலும் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் பெற்று வருகிறார். கூடவே, அவர்களிடம் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்காது என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றனவே? அந்தளவுக்காக இவர்கள் மோசமான ஆட்சியை தந்துள்ளார்களான்னு ஆதங்கத்தோடு கேள்விகளை எழுப்பி, அவர்களின் முகமாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறார் சின்னம்மா.

பல்வேறு தரப்பினருடான கலந்துரையாடலில், இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்பதை உறுதிபட தெரிந்து கொண்டு உற்சாகமாகிவிட்டார் சசிகலா. மே 2 ஆம் தேதிக்குப் பின்னர், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தலைமைக்கு எதிராக கிளம்பும் அதிருப்தி குரல்கள் அதிகமாக எதிரொலிக்கும் என்பதையும் யூகித்து வைத்திருக்கும் சசிகலா, அதிருப்தியாளர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வந்து தன்னை அதிமுக.வின் தலைமை ஏற்க வற்புறுத்துவார்கள், வலியுறுத்துவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மே 2 க்குப் பிறகான காலம், தனக்கு சாதமாக இருக்குமா…அரசியலில் மீண்டும் உச்சம் பெறுவதற்கான நட்சத்திரங்கள் பலம் பெற்று இருக்கிறதா, தீவிர அரசியலில் ஈடுபட்டால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாதிரி அசைக்க முடியாத சக்தியாக திகழ முடியுமா ? என்பதையெல்லாம் துல்லியாக கணக்கிட்டுச் சொல்லக்கூடிய, நல்ல ஜோதிடர்களை தேடி தேடி வரவழைத்து ஜாதகம் பார்ப்பதுதான், கடந்த பல நாட்களாக சசிகலாவிற்கு முக்கியமான வேலையாக இருக்கிறது.

அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு யார் யாரெல்லாம் சோதிடம் பார்த்தார்களோ, அவர்கள் எல்லாம் எந்தெந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர சசிகலாவின் விசுவாசக் கூட்டம் ஊர் ஊராக, மாநிலம் மாநிலமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

சசிகலாவின் மறைமுக செயல்பாடுகளைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாமல், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக.வுக்கு யார் பொதுச் செயலாளர் என்ற போட்டியில் ஓ.பி.எஸ்.ஸும்,இ.பி.எஸ்.ஸும் சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுப் பிள்ளைகளின் செயல்கள் போலத்தான் இருக்கின்றன இருவரின் அரசியல் வியூகங்கள்.இன்றைக்கு ஜோதிடர்களைத் தேடிப் போகும் சசிகலாவுக்கு ஜெயலலிதா மறைந்த உடனே சென்னை மொகப்பேரைச் சேர்ந்த ஜோதிடர் ஒருத்தர் சொன்ன யோசனையை நிராகரித்ததன் விளைவை இப்ப சசிகலா சந்தித்து வர்றாங்க.அந்த ஜோதிடர் என்ன சொன்னாருன்னா