முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ ரோபோசெஃப் ‘ ( ROBOCHEF ) !

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும் . அந்த அறை , பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது . பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் திகழும் . இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள் , ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து இன்றளவிலும் போராடி வருகிறார்கள் . அவர்கள் மிக்சி , கிரைண்டர் , ஜுஸ் மேக்கர் , காபி மேக்கர் , காய்கறிகளை வெட்டும் கருவி , இன்டக்ஷன் ஸ்டவ் என தனித்தனியாக கருவிகளைக் கண்டுபிடித்து பெண்களுக்கு உதவி செய்தாலும் , அவர்கள் சமையலறையில் செலவிடும் நேரத்தைக் குறைக்க முடிவதில்லை . வீட்டுச் சாப்பிட்டிற்காக ஏங்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது . பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிட்டாலும் அதில் கிடைக்கும் சுவை , நாம் எதிர்பார்ப்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது என்றும் , அவை விரைவில் கிடைக்கவேண்டும் என்றும் , சுவை என்பது ஒரே அளவில் எப்போதும் மாறாததாக இருக்கவேண்டும் என்றும் எண்ணுகிறார்கள் . இந்த எண்ணத்தை செயலாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்படுவது தான் ‘ ரோபோசெஃப் ‘ .

இந்தியாவில் முதல் சமைக்கும் எந்திர மனிதன். இது குறித்து இந்த இயந்திர மனிதனை வடிவமைத்த குழுவின் தலைவரும், ரோபோசெஃப் ( ROBOCHEF ) நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி பேசுகையில், ” மென்பொருள் நிபுணராக நான் பதினோரு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு , உணவுத்துறையில் ஏதேனும் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, இந்த ரோபோசெஃப் என்ற இயந்திர மனிதனை வடிவமைத்திருக்கிறோம் . இந்த இயந்திர மனிதன் அறுநூறு ( 600 வகையான ) வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். அதில் இந்தியன், சைனீஸ், வியட்நாமீஸ் , தாய்லாந்து நாட்டு உணவுவகைகள் என பல நாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம் . இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்து, விநியோகிக்கிறோம் . வீட்டின் இல்லத்தரசி சமையலுக்காக தினமும் குறைந்தபட்சம் ஆறு மணிநேரத்தை ஒதுக்க வேண்டியதிருக்கிறது . உணவகங்களில் காலையில் உணவு பரிமாறவேண்டும் என்றால் அங்குள்ள ஊழியர்கள் அதிகாலை மூன்று மணயளவில் எழுந்து, காலை உணவை தயாரிக்கவேண்டியதிருக்கும்.அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பணியை தொடர்ந்து செய்வதால், சலிப்பு ஏற்படுகிறது.அது சுவையிலும் எதிரொலிக்கிறது . இதனால் காலை உணவிற்கான சுவையை எதிர்பார்த்து வரும் பயனாளர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது . இது தான் யதார்த்தம். இதனை மாற்றியமைக்கவேண்டும் என்றும், ஒரே மாதிரியான சுவையுடன் அனைவருக்கும், அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைக்க வேண்டும் என்பதும், அதனை முழுவதும் தானியங்கி அடிப்படையில் தயாராகவேண்டும் என்பதும் தான் ரேபோ செஃப்பின் வடிவமைப்பின் உந்துதலாக இருந்தது . மனிதர்களின் உதவியின்றி இயந்திரத்தால் எவ்வளவு தூரம் சமையலில் ஈடுபடுத்த முடியும் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்தோம். வடிவமைத்த பின்னர் சமையலுக்கு செலவிடும் நேரம் குறைந்திருப்பதை உறுதி செய்தோம். ஒரே மாதிரியான சுவையை அனைத்து விதமான உணவு வகைகளிலும் அளிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தினோம். உதாரணத்திற்கு மதுரை சிக்கன் பிரியாணியை எங்களுடைய ரோபோ செஃப் சமைத்தால், மதுரை, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் வேறு எங்கு சுவைத்தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும் . இது ரோபோசெஃபின் மிகப்பெரும் பலன் என்று கூறலாம்.உணவை ‘ டேக் அவே பாணியில் எடுத்துக் கொண்டுச் செல்லும் வகையிலும் ரோபோசெஃப் சேவையாற்றும் . ” என்று விரிவாக விளக்கமளித்தார் .

பிறகு இறுதியில் ரோபோசெஃப்பில் தயாரிக்கப்பட்ட உணவை விழாவிற்கு வருகைத்தந்த அனைவரும் பார்வையிட்டனர். அப்போது இதன் செயல்முறையை இதனை வடிவமைத்த குழுவினர் விளக்கமளித்தனர் ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது . துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உலகளவிலான கண்காட்சியில் இடம்பெறுவதற்காக இந்தியாவிலிருந்து ரோபோசெஃப் தேர்வு செய்யப்பட்டது , அந்த கண்காட்சியில் பலரின் பாராட்டுகளையும் ரோபோசெஃப் பெற்றிருக்கிறது. செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய ரோபோசெஃப் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இதன் மூலம் ரோபோசெஃபே விதவிதமான சுவையில், உணவைத் தயாரித்து மக்களை மகிழ்விக்கும். ஒரே நிமிடத்தில் பத்து தோசையைத் தயாரிக்கும் கருவி, சப்பாத்தி மற்றும் புரோட்டாவை தயாரிக்கும் கருவி, பஜ்ஜி, போண்டோ போன்ற நொறுக்கு தீனிகளை தயாரிக்கும் கருவி என சமையலுக்கு பயன்படும் வகையிலான பல கருவிகளும், எங்களின் தயாரிப்புகளாக அறிமுகமாகி, வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது .சுவை,(Holistic Taste)சுகாதாரம் , ( Hygine ) ஆரோக்கியம் ( Healthy ) இது தான் உணவின் ரகசியம் . இதற்கு இனிமேல் ரோபோசெஃப் அவசியம் .