முத்ரா திட்டத்தில் 11,000 கோடி வாராக்கடன்? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட முத்ரா கடன் திட்டத்தில் வழங்கப்பட்ட கடன்களீல் ரூ. 11,000 கோடி வாராக்கடனாகியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2015 ஏப்ரலில் அறிமுகப்படுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனாதிட்டம் சிறு, குறு தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்துக்காகக் கடன் வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் முதல்- 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகின்றன.

2017-18 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டபடி இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2.46 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவீதம் பெண்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனில்இதுவரை ரூ. 11,000 கோடி வாராக்கடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதைக் குறிப்பிட்டுள்ள ரிசர்வ்வங்கி இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன்களை மேலாண்மை செய்வதில் மிகுந்தகவனம் அவசியம். இல்லையெனில் பெருமளவிலான கடன்கள் வாராக்கடன்களாக வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.