தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்கக் கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த சந்தானம், ஒருகட்டத்தில் காமெடியன் ரோல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன.

கடந்த ஆண்டு டிடி ரிட்டன்ஸ் படம் மூலம் மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுத்த சந்தானத்திற்கு, இந்த ஆண்டு சக்சஸ்புல் ஆண்டாகவே அமைந்துள்ளது. அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் ‘இங்க நான் தான் கிங்கு’.

ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா என பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் வழங்க அவரது மகள் சுஷ்மிதா அன்புச் செழியன் தயாரித்துள்ளார்.
சந்தானத்திற்கு இருக்கும் கடனை அடைக்க திருமணம் செய்துக் கொள்ள ஜமீன் பரம்பரையை சேர்ந்த பெண்ணை பார்க்கிறார். ஆனால், திருமணத்துக்கு பிறகு தான் ஜமீனுக்கே பல கோடி கடன் இருப்பது தெரியவருகிறது. அந்த கடன் சுமையும் சேர்ந்து சந்தானம் தலையில் விழும் போது தேவையில்லாமல் ஒரு கொலை பழியும் விழுகிறது. இதில், இருந்து எப்படி சந்தானம் தப்பிக்கிறார். தனது கடனை அடைத்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை. பல இடங்களில் லாஜிக்கே இல்லையென்றாலும் காமெடி மேஜிக் வொர்க்அவுட் ஆகியுள்ளது.

படத்தில் ஏகப்பட்ட காமெடி கேரக்டர்கள் தங்களின் வழக்கமான கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். அதேசமயம் பல தமிழ் படங்களை இமிடேட் செய்திருக்கிறார்கள். அதேபோல் சில படங்களை நினைவூட்டும் வகையில் காட்சிகளை வைத்திருக்கிறார்கள்.இதெல்லாம் தமிழ் சினிமால சகஜம் தானே?

சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன் கூட்டணி அழகான காம்போவாக அமைந்துள்ளது. காமெடி, டான்ஸில் மாஸ் காட்டியிருக்கிறார் சந்தானம். ஹீரோயின் பிரயாலயாவுக்கு இன்னும் நடிப்பதற்கான காட்சிகளை வழங்கியிருக்கலாம்.பொம்மை போல வந்து போகிறார்.

பொதுவாக சந்தானம் படம் என்றால் காமெடி சற்று தூக்கலாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக காமெடி சொதப்பி வந்த நிலையில், அதனை இப்படத்தின் மூலம் ஓரளவு தீர்த்து வைத்துள்ளார் சந்தானம். படம் முழுக்க அவர் வாங்கிய கடனை அடைக்கும் வழியாக பயணிப்பதால் காட்சிக்கு காட்சி நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை ரசிக்கும் படியாக இருக்கிறது. குறிப்பாக தம்பி ராமையா, பால சரவணன், கூல் சுரேஷ், முனீஸ்காந்த் ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு சந்தானம் படும்பாடு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அதேசமயம் படத்தில் முதலில் சீரியஸாக சொல்லப்படும் விஷயத்தை கடைசியில் காமெடியாக கொண்டு செல்ல முயன்று கோட்டை விட்டிருக்கிறார்கள். இதனால் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துள்ளது. இமானின் இசையில் மாயோனே பாடல் மட்டும் ரசிக்க வைப்பதோடு, மாலு மாலு பாடல் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது. இமானின் பின்னணி இசை வழக்கமான பாணியையே கையாண்டிருப்பதால் ரசிக்கும் படியாக இல்லை..

மேலும் படம் பார்த்த பிறகு டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என கேட்க வைத்துள்ளார்கள்.ரசிகர்களும் முணுமுணுப்பது காதில் விழுகிறது.மற்றபடி சில குறைகள் இருந்தாலும் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் சந்தானத்திற்காக “நான் தான் இங்கு கிங்கு” படத்தை குடும்பத்துடன் போய் பார்க்கலாம்.!

Related posts:

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் 'நீளிரா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு!

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா-இசைஞானி இளையராஜா!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்மன்' திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது!

கிஷோர் - TTF வாசன் இணைந்து மிரட்டும் 'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Turkish Airlines Announces Flight Resumptions, Restoring Middle East Network !

*"மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக 'பிரேக்ஃபாஸ்ட்' படம் இருக்கும்"- நடிகர் ராணவ்!*