நீரை மிச்சமாக்கும், ‘ஷவர்’!

இனி வரும் ஆண்டுகளில் உலகெங்கும் தண்ணீருக்கு தட்டுப்பாடு வரப் போகிறது. இருந்தாலும், குளியல் அறையில், ‘ஷவர்’ பொருத்துவது தொடர்கிறது.

ஷவர்களில் தண்ணீர் கூடுதலாக வீணாகும் என்பதால், அதில், 75 சதவீத நீரை மிச்சப்படுத்தவும், முழுமையான ஷவர் குளியல் அனுபவத்தைத் தரவும், சுவீடனைச் சேர்ந்த ‘ஆல்ட்டர்ட்’ ஆராய்ச்சி செய்துள்ளது.

இது உருவாக்கியுள்ள ஷவரின் அமைப்பில், நீர்த் திவலைகள் உடல் முழுவதையும் நனைக்கத் தேவையான அகலத்தில், குளிக்கும் அனுபவத்தைத் தரும் அழுத்தத்தில் நீரைத் தெளிக்கிறது. நீரை சூடேற்றும் வசதியும் இதனுள் இருப்பதால், குறைந்த மின் செலவில் அதிக நீர்த் திவலைகள் வந்து விழும்.

வரும் ஜூன் மாதம் அறிமுகமாகவிருக்கும் ஆல்ட்டர்ட் ஷவர் கருவியை, எந்த குளியலறை ஷவர் குழாயிலும் இணைக்க முடியும் என்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டை அது பெற்றுள்ளது.