நிதியமைச்சர் மாற்றமா? ஸ்டாலின் அதிருப்தி!

[5:06 pm, 06/09/2021] N.SHANKAR: ஐபேக்லேருந்து அரசு ஊழியர்கள் வரை மோதல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் காரணமாகின்றது வரும் நிதி அமைச்சர் மேல திமுக தலைமை கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருந்தப்போ, அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டாரு.. அப்போ திமுகவோட ஐடி விங்கை கவனிச்சிகிட்டு வந்தவர்தான் பழனிவேல் தியாகராஜன். இவருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல்கள் வெடிச்சதா சொல்லப்படுது. இதன் காரணமாக ஐபேக் நிறுவனம் வேண்டாம்னு சொல்வியிருக்கிறாரு.
ஆனா இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் விடாப்பிடியாக இருந்ததுனால ஒருவழியாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த சூழலில் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதியமைச்சர்ங்கிற மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஸ்டாலின் குடுத்தாரு. துறை சார்ந்த அனுபவம் இருந்தாலும் அரசியலில் ஜூனியர்ங்கிறதுனால இவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வேண்டாம்னு சீனியர்கள் எல்லாரும் சொன்னதாக தெரியுது.
இருந்தாலும் ஸ்டாலின் தன்னோட முடிவில் உறுதியாக இருந்தாரு. இந்த சூழலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செயல்பாடுகளும், பேச்சும் தொடர் சர்ச்சைகளுக்கு காரணமாகிட்டு வருது. முதல் ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறையை ஏற்க முடியாது. மாநிலத்தின் மக்கள்தொகை, பொருளாதாரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வாக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார்.
அதற்கு பல்வேறு மாநிலங்களும் கடும் எதிர்ப்பை காட்ட அமைச்சர் சர்ச்சையில் சிக்கிக்கிட்டாரு. இதனால் பழனிவேல் தியாகராஜன் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்முறை அதிருப்தி ஏற்பட்டுச்சின்னு சொல்றாங்க.. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேல கடும் விமர்சனங்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைச்சாரு. அதாவது, பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது.
வாய்க்கு வந்ததை எல்லாம் உளறக்கூடிய நபர். அவரது கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாதுன்னு சொன்னாரு. இந்த விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலிக்க, அதிமுக – திமுக இடையில காரசார விவாதத்தை ஏற்படுத்துச்சு. ஒருகட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, நிதியமைச்சர் தன்னை மட்டும் பொருளாதார நிபுணர்னு நினைச்சிகிட்டிருக்கிறாரு. மத்தவங்களை எல்லாம் மிகவும் அவமானப்படுத்துவதாக குறிப்பிட்டார்.
அதற்கு பழனிவேல் தியாகராஜன் உடனே மன்னிப்பு கேட்டு க்கிட்டாரு. இந்த சூழலில் தான் அரசு ஊழியர்களை கோபமடையச் செய்யும் வகையில் அமைச்சர் சமீபத்தில் நடந்துகிட்டாரு.. இதனை ஜாக்டோ ஜியோ அமைப்பினரே பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை நிதியமைச்சர் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் மீது மக்கள் மத்தியில் பகைமையை வளர்க்கும் வகையில் பேசியிருக்கிறாரு.
இது அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்படுத்துவதாக இருக்குது. இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கணும்னு வலியுறுத்தியிருக்காங்க.. திமுகவிற்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையிலான நல்லுறவு நீண்ட காலமாக நீடித்து வரும் விஷயம். இந்த விஷயத்தில் கைவைத்தது முதல்வருக்கு சற்று தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

‘அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் மக்கள் விரோதிகள்போல சித்திரித்துவரும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நெஞ்சம் நெகிழத் தேவையில்லை. வஞ்சம் இன்னும் மாறவில்லை’ என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பும், ‘நிதியமைச்சரின் இந்தப் போக்கு அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையிலான நல்லுறவில் விரிசலை உண்டாக்கும்’ என்று அறிவித்துள்ளது.

சமீபத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில், “விலைவாசி உயரும்போது அதை ஈடுகட்டுவதற்காக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படுது. ஆனால், கொரோனா ஊரடங்கால் இப்போ பலரும் சாப்பாட்டுக்குக் கூட பணமில்லாமல் தவிக்கிறாங்க. கணவனை இழந்தோருக்கான ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம் பலருக்குக் கொடுக்க வேண்டியிருக்குது. ஒரு ரூபாய் செலவு செய்தால் 60 – 65 பைசா அரசு ஊழியர் சம்பளம் அப்புறம் ஓய்வூதியத்துக்குப் போய்டுது. இதைச் சேமித்தால் 4,000 கோடி ரூபாய் மிச்சமாகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால், அடுத்த பத்தாண்டுகளில் அரசின் ஒட்டுமொத்த வருவாயும் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்குமே போய்விடும்”னு குறிப்பிட்டாரு.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம், “முந்தைய ஆட்சியாளர்கள்தான் எங்களை அழைத்துப் பேசக்கூட இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்னு எதிர்பார்த்தோம். ஆனால், எங்களது கோரிக்கைகள் பட்ஜெட்டில் புறக்கணிப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு, பி.எஃப் வட்டி குறைப்பு என பல்லாயிரம் கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். இந்தநிலையில், பட்ஜெட்டில் அகவிலைப்படியை மிகவும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், ‘அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் அகவிலைப்படி வழங்கப்படும்னு நிதியமைச்சர் அறிவித்திருக்கிறாரு. இதுமட்டுமல்ல… நிதியமைச்சர் எங்களை ஏளனமாகப் பேசுவதுதான் வேதனையாக இருக்குது. ஒருமுறை ஜெயலலிதா, ‘அரசு வருமானத்தில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்குமே போகுது’ன்னு சொன்னாரு.அது தவறான கருத்துன்னு குறிப்பிட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, ‘அரசாங்கத்தின் அச்சாணியாகச் செயல்படுபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறதுனாலத்தான் அரசு எந்திரம் செயல்படுகிறது; மக்கள் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையுதுன்னு பதில் சொன்னாரு. ஆனா, கருணாநிதியின் வழிவந்த ஸ்டாலினின் ஆட்சியில் ஜெயலலிதாவைப்போலவே பேசுகிறார் நிதியமைச்சர். அன்றைக்கு கருணாநிதி சொன்னதை இவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் காட்டமாக.

ஜேக்டோ – ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசனோ, “ஒரு ரூபாயில் 19 பைசா அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காகவும், 8 பைசா ஓய்வூதியத்துக்காகவும் செலவிடப்படுதுன்னு நிதிநிலை அறிக்கையில் தெரிவிச்சிட்டு, ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம் அப்புறம் ஓய்வூதியத்துக்காகச் செலவிடப்படுதுன்னு தவறான புள்ளிவிவரங்களை சொல்றாரு நிதியமைச்சர். அவரது அணுகுமுறையே சரியில்லை. இதில் முதல்வர் தலையிட்டு தீர்வுகாணனும்கிறாரு.

அதாவது அரசியல் அரங்கில் நியாயமான விஷயம்னா கூட ஆளுங்கட்சி அதனை நயமாகத் தான் செய்ய னும். இல்லைன்னா அது பெரும் தலைவலியாக மாறி தொல்லை கொடுக்கும்னு சொல்றாங்க அரசியல் விவரம் தெரிஞ்சவங்க. இந்த மாதிரி தொடர் சர்ச்சைகளுக்கு காரணமாகிட்டு வரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வேறு துறைக்கு மாற்றிடலாமான்னு  திமுக தலைமை யோசித்து வருவதாக சொல்லப்ப்படுது. இந்த விவகாரம் தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றவுடன் முடிவு எடுக்கப்படலாம்ங்கிற தகவல்கள் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருது.முதலமைச்சர் ஸ்டாலின் என்ன முடிவெடுக்க போறார்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related posts:

சரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்!
எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அணி திரளும் அதிமுக முன்னாள் நிர்வாகிகள்.
மோடிக்கு எதிராக மாநில சுயாட்சி கோஷம் ? அணிதிரளும் எதிர்க்கட்சிகள் !
முதல்வரை மட்டும் ஏன் "குறி" வைத்து தாக்குகிறார்.. தினகரன் திமுகவின் பி டீமா.. நக்கலடிக்கும் அதிமுக!
மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது திமுகவா ? அல்லது அதிமுகவா
திமுகவை தோற்கடித்த நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் கைது!
யார் ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் நான் ஜெயிக்கப் போவது உறுதி! அண்ணாமலை சவால் !
அமைச்சரவையில் ஸ்டாலின் புறக்கணித்த மாவட்டங்களும் காரணமும்!