நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது, மறு தேர்தலுக்கு உத்தரவு !

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ந் தேதி தேர்தல் நடந்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் நடந்தாலும் ஓட்டுக்களை எண்ண நீதிமன்றம் தடை விதித்திருந்தது.பதவிக்காலம் முடிந்த 6 மாதத்திற்கு பின்னரே தேர்தல் நடத்தினர். ஏகப்பட்ட குளறுபடி உள்ளன. எனவே இந்த தேர்தலே செல்லாது என அறிவிக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது: ஐகோர்ட் அதிரடி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ல் தேர்தல் நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடந்தாலும் ஓட்டுக்களை எண்ண சென்னை ஐகோர்ட்ட தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து நாசர், விஷால் வழக்கு தொடர்ந்தனர்.எந்த முறைகேடும் நடக்கவில்லை, தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஓட்டு எண்ணிக்கை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் எல்லாம் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல கட்ட விசாரணைகள் நடந்த நிலையில் தீர்ப்பு ஜன., 24 வழங்கப்படும் என நேற்று ஐகோர்ட் அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்தவும், அதுவரை சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளை அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி நிர்வகிப்பார் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts:

’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!
தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் !
சொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!
போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !
ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில்'மான்குர்த்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. !
ஹாலிவுட் நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் விருஷபா படத்தில் இணைந்துள்ளார் !!
இயக்குனர் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ !