பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜாவான நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் !

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா!

கோலிவுட்டில் இந்த ஆண்டு 2024ல் முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்கள் வணிகம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதில், விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் பெரும் வெற்றி வணிக வட்டாரங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 105 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் பான்-இந்திய படங்கள் வந்த போதிலும் ‘மகாராஜா’ திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், வெளிநாடுகள் மற்றும் தமிழ் பேசாத பிரதேசங்களில் இருந்தும் இப்படம் அற்புதமான வரவேற்பை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது, “இது வணிகரீதியாக கிடைத்த வெற்றி என்பதையும் தாண்டி, தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளது. உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை வரவேற்கவும் பாராட்டவும் திரைப்பட ஆர்வலர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ‘மகாராஜா’ கொடுத்துள்ளது. ‘மகாராஜா’ திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்தபோது, இது பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று நம்பினோம். ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், கமர்ஷியல் ரீதியாகவும் எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்தான். 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ் சினிமா நிறைய வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில், ‘மகாராஜா’ திரைப்படம் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்திருப்பது எங்களுக்கு பெருமை. படத்திற்கு ஆதரவு கொடுத்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி” என்றார்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், தி ரூட்டின் ஜெகதீஷ் பழனிசாமியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ’மகாராஜா’. இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்

Related posts:

அஃப்ரிஞ்ச் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது!

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'!

சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் - எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா?

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்!

வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம் !

*இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!*

தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது, ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர் !!!

விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் 'ரெட் ஃப்ளவர்' செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !