தொழில்நுட்ப தகுதிகளுடன் தரமிக்க ஆசிரியர்களை உருவாக்கும் – டிஏவி பள்ளிகள் !

தொழில்நுட்ப தகுதிகளுடன் கூடிய தரமிக்க ஆசிரியர்களை உருவாக்குதில் புகழ்பெற்ற டிஏவி பள்ளி முன்னிலை வகிப்பதாக அதன் செயலாளர் விகாஷ் ஆர்யா தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்விமுறை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் தரமிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் GST குறித்த முழுமையான வணிக கல்வியை கல்வியாளர் வசந்தா பாலசுப்ரமணியம் அறிமுகப்படுத்தினார். அது பற்றிய விளக்கங்களையும் இன்றைய ஆசிரியர்களின் தரமற்ற நிலையையும் விவரித்து , செய்தியாளர்களிடம் பேசிய அவர்.. தலைத்துவ பண்பு, பெற்றோர்களுடன் பழகும் முறை உள்ளிட்ட அனுபவமிக்க தொழில்நுட்ப தகுதிகளுடன் கூடிய ஆசிரியர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கி வருவதாகவும், தங்கள் டிஏவி பள்ளி குழுமத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆசிரியர்கள் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவதாக தெரிவித்தார்.மேலும் கடந்த 3 ஆண்டுகளாக இணையதளம் மூலமாக மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.

குறைபாடு உடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை அளிப்பது மற்றும் அடிப்படை கல்வி,மொழி ஆளுமையை உடைய மாணவர்களை உருவாக்குவது உள்ளிட்டவற்றை தங்களின் ஆசிரியர் பயிற்சி முறையின் சிறப்பம்சமாக உள்ளது எனவும் தெரிவித்தனர்.இந்திகழ்வின் போது டிஏவி பள்ளிகள் குழுமத்தின் துணைத்தலைவர் ராஜீவ் சௌத்ரி மற்றும் இயக்குனர் சாந்தி அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.