திராவிடம் இந்தி வேண்டாம் என்கிறது யாருக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்..
திராவிட ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் (மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தாலும் மாநில அரசிடம் பல கிளியரன்ஸ் வாங்க வேண்டும் அந்த இடத்தில் கொக்கி போடலாம்) ஹிந்தி வேண்டாம் என்று ஒரு போதும் இந்த திராவிடம் கூறியதில்லை ஏனென்றால்..
லட்சியத்தை விட திராவிடத்திற்கு இந்த கல்வியை வியாபாரமாக்கி வரும் லட்சங்கள் முக்கியம்.
வழக்கம்போல தமிழ்நாட்டு மக்களை போலி மாயையை காட்டிதான் திராவிடம் ஏமாற்றி வருகிறது
உதாரணத்திற்கு உங்கள் ஊரில் உங்கள் கிராமத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை பேர் இன்ஜினியர் படித்துவிட்டு வேலையில்லாமல் சுத்திக்கிட்டு இருக்கோம்
வருஷத்துக்கு ரெண்டு லட்சம் என்ஜினியர் களை உருவாக்குவது பெரிய விஷயமல்ல எத்தனை இன்ஜினியர்களுக்கு வேலை கொடுக்க முடிகிறது அல்லது எத்தனை இன்ஜினியர்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்
முடிந்தால் திராவிடத்தை அந்த கணக்கை கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்
இவர்களே கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டியது கல்வி கட்டணம் என்ற பெயரில் வருமானம் பார்க்க வேண்டியது கல்வி கடன் என்ற பெயரில் அரசு பணத்தை சட்டபூர்வமாக கொள்ளையடிப்பது பிறகு மாணவர்களை கடன்காரன் ஆக்கிவிட்டு சுகி ஜும்ட்டோ போன்ற நிறுவனங்களில் இன்ஜினியர் படித்த மாணவர்களை உணவுப் பண்டம் விற்க வைக்க வேண்டியது இதுதான் திராவிடத்தின் வளர்ச்சியா..
புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பது என்றால் அதில் உள்ள அம்சங்கள் அடுத்த தலைமுறைக்கு தேவையான கல்வியல் முறைகள் இவற்றிலுள்ள கோட்பாடுகளை எதிர்த்துப் பேசவும்
மீண்டும் மீண்டும் திராவிட கட்சிகள் உணர்வை தூண்டி தமிழர்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.
மொத்தத்தில்
திராவிடம் படிக்க வைத்தது…
சமுதாய வளர்ச்சிக்காக அல்ல..
அவர்கள் சந்ததிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக..
அதற்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைப்பதால் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்..
ஆப்பு 1:
ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக்கல்வி என்பதால் தனியார் பள்ளிகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு அட்மிஷன் போட்டு லட்சக்கணக்கில் எல்கேஜி யுகேஜி என்று கொள்ளை அடிக்க முடியாது.
ஆப்பு 2
புதிய கல்விக் கொள்கையின் படி இதற்கு முன்பு இருந்தது போல யுனஸ்கோ இராமசாமிக்கு விருது கொடுத்தது என்பது போன்ற திராவிடப் புளுகை கண்டமேனிக்கு மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஏற்றி ஏமாற்ற முடியாது
ஆப்பு 3
மாணவர்கள் விருப்பப் பாடத்தை படிநிலை வாரியாக பிரித்துக் கொள்ளும் வசதி இருப்பதால் ஒரு லட்சம் இரண்டு லட்சம் மாணவர்கள் என்று இஞ்சினியரிங் காலேஜில் அட்மிஷன் போட்டு பகல் கொள்ளை அடிக்க முடியாது.
ஆப்பு 4
இந்தியா முழுக்க ஒரே மாதிரியான கல்வித் திட்டம் என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளில் கிடைக்கும் பாடத்திட்டத்தின் தரம் கிடைக்கும் இதனால் சமச்சீர் கல்வி ஸ்டேட் போர்டு என இவர்கள் இஷ்டத்திற்கு கல்வியை தரம்பிரித்து தனியார் பள்ளிகள்தான் அரசுப் பள்ளிகளைவிட அதிகமான தரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கின்றார்கள் என்ற மாயையை உருவாக்கி கோடி கோடியாக கொள்ளை அடிக்க முடியாது
ஆப்பு 5
இந்தியாவில் இருக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான தரக்கட்டுப்பாடு என விதிப்பதால் பத்தாம் வகுப்பு தாண்டாத நபர்களை எல்லாம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்று நியமித்து அடிமாட்டு சம்பளம் கொடுத்து கொள்ளை லாபம் பார்க்க முடியாது
ஆப்பு 6
பன்னிரண்டாம் வகுப்புவரை கட்டாய கல்வி நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 6 சதவீதம் கல்விக்கு என தரம் சார்ந்த கல்வி அளிக்கப்படுவதால் அதோடு இடையில் நின்றாலும் மீண்டும் கல்வியை தொடரும் வசதியும் புதிய கல்வித் திட்டத்தில் இருப்பதால் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வெகுவாக குறையும் அதனால் தேர்தல் நிதி முதல் தேவையேற்படும் போதெல்லாம் நிதி திரட்டும் கல்வி தந்தையிடமிருந்து கட்சிகள் காசு வாங்க முடியாது.
இது பள்ளிக்கல்வியில் மட்டும்தான்
ஏற்கனவே மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் கோடிக்கணக்கில் நடந்த கொலையை நீட்தேர்வு நிறுத்தி விட்டதால் இருப்பதற்கும் சோதனை வந்து விடும் என்றுதான் திராவிடம் கதறுகிறது