ஜாக்கி –விமர்சனம்!

PK7 ஸ்டுடியோஸ் LLP சார்பில், பிரேமா கிருஷ்ணதாஸ் – சி தேவதாஸ் & ஜெயா தேவதாஸ் தயாரிப்பில் டாக்டர். பிரகாபால் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜாக்கி. இந்த படத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, காளி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பாத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங், சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். மதுரையின் பாரம்பரிய கிடா சண்டையை மையமாக வைத்து இந்த ஜாக்கி படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில், மடி என்ற படத்தை இயக்கிய டாக்டர் பிரகபல், இயக்கத்தில் மதுரையின் பாரம்பரியமான கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ஜாக்கி. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் கிடா சண்டை தான் படத்தின் மையக்கரு. படத்தின் கதாநாயகன் ராமர் ஆட்டோ ஓட்டுனர் ஆக உள்ளார். காளி என்ற அவரது கிடா களத்தில் இறங்கினால் மற்ற கிடாக்களை துவம்சம் செய்யும். மறுபுறம், படத்தின் வில்லன் கபரா கார்த்தி அணுகுண்டு என்ற கிடாவை வளர்த்து வருகிறார். அதுவும் சண்டை களத்தில் ராஜாவாக வலம் வருகிறது. இந்நிலையில் ஒரு போட்டியில் காளி, அணுகுண்டை தோற்கடிக்க, அது கௌரவ பிரச்சினையாக மாறுகிறது. இந்த தோல்வியால் ஆத்திரமடையும் கார்த்தி, ராமரின் குடும்பத்தையும், அவனது கிடாபையும் பழிவாங்க துடிக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே ஜாக்கி படத்தின் கதை.

யுவன் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணா இருவருமே மதுரையை சேர்ந்த இளைஞர்களாகவும், கிடா வளர்ப்பாளர்களாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இவர்களின் ஆக்ரோஷமான நடிப்பை விட, களத்தில் மோதும் ஆடுகளின் நடிப்பு தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கதாநாயகியாக வரும் அம்மு அபிராமி, தனது வழக்கமான யதார்த்தமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். மதுசூதன் ராவ் வழக்கமாக நடிக்கும் சண்டைகளை உருவாக்கும் கதாபாத்திரமாக இல்லாமல், சண்டைகளைத் தீர்த்து வைக்க முயற்சிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாரின் கேமரா, மதுரையின் புழுதி படிந்த மைதானங்களையும், கிடாக்கள் மோதும் காட்சிகளையும் மிக தத்ரூபமாக படமாக்கி உள்ளது. குறிப்பாக கிடா சண்டை காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது. சக்தி பாலாஜியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் காட்சிகளை மெருகேற்றுகின்றன. தமிழ் சினிமாவின் கிடா சண்டை வைத்து இதுவரை எந்த ஒரு படமும் வந்ததில்லை. அது இந்த படத்தை தனித்துவமாக்குகிறது. ஆடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான அழகான உறவை இயக்குனர் நன்றாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இடைவெளிக்கு முன்பு வரும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம் மிகச் சிறப்பு.

கதைக்களம் புதிதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் வழக்கமான பழிவாங்கும் கதையாக மாறுவதால் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக காதல் காட்சிகள் கதையின் ஓட்டத்திற்கு பெரிதாக உதவாமல், இடையில் திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது. இயக்குநர் பிரகபல், மதுரை மண் சார்ந்த ஒரு கதையை தேர்ந்தெடுத்து, அதை முடிந்தவரை குறை இல்லாமல் படமாக்கியுள்ளார். பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் மண்வாசனை திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஜாக்கி ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

Related posts:

தீம் பார்க்கில் தடம் பதித்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்!

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்!

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்!

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்'  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று 'திரெளபதி2' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது, ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர் !!!

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது...

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்!