சேகர் ரெட்டி மேட்டரில் திமுக அமைச்சர் பெயர்.

சேகர் ரெட்டி மேட்டரில் திமுக அமைச்சர் பெயர். முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்..
சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள பெயரில் அப்போதைய அதிமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயரும் இருந்தது. இந்தநிலையில இப்போ திமுகவில் இணைஞ்சு அமைச்சராக உள்ள அவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதா தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருக்குது.  சேகர் ரெட்டி டைரி விவகாரம் இப்போ மீண்டும் சூடுபிடிச்சிருக்குது.. இப்போ யார் இந்த சேகர் ரெட்டின்னு பாப்போம் வேலூர் அருகே தொண்டான் துளசி என்ற பகுதியை சேர்ந்தவர்தான் சேகர் ரெட்டி. தெலுங்கு, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இவர் தொடக்கத்தில சென்னைக்கு ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு தினக்கூலியாகவே வந்திருக்கிறாரு. அதுக்கு பின்னால அங்கு கொஞ்சம் கொஞ்சமாக யூனியன் அளவில் பெரிதாக உயர்ந்து தனக்கு நெருக்கமானவர்களை பணிக்கு எடுக்கும் கான்ட்ராக்டராக மாறியிருக்காரு.. அப்போதே இவருக்கான அரசியல் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியிருக்குது. ரயில்வே யூனியன் தேர்தல்தான் இவரின் முதல் அரசியல் களம்னு சொல்லணும். அப்போதான் அதிமுகவில் சிலருக்கு நெருக்கம் ஆகியிருக்காரு. இதெல்லாம் 1980களின் மத்தியிலும் இறுதியிலும் நடந்த சம்பவங்கள். அங்கிருந்து 1990களில் ஏற்பட்ட அரசியல் நட்புகள் காரணமாக சென்னையில் அதிமுக தலைகளோடு இணைஞ்சு சில தேர்தல் பணிகளை பார்த்து இருக்கிறார். அதன் மூலம் அதிமுக உறுப்பினர் அட்டையும் இவருக்கு கிடைச்சிருக்குது. அதிமுகவில் உறுப்பினராக இருந்தாலும் நேரடியாக களத்தில் இருப்பதை விட அரசியல் தலைவர்களுக்கு முக்கியமான பணிகளை சீக்ரெட்டாக செய்வதுதான் இவரின் ஸ்டைல்ங்கிறாங்க. தொடக்க காலத்தில் இவர் பெரிதா அதிமுக தலைகளுக்கு நெருக்கமாக இல்லைன்னாலும் இவரின் கடவுள் பக்தியும், விசுவாசமும் அதிமுக தலைமையை கவர்ந்திருக்குது. 2000க்கு பிறகுதான் அதிமுக தலைமையின் நேரடி தொடர்பும் இவருக்கு கிடைச்சதுங்கிறாங்க. அப்போ அதிமுக ஆட்சிக்காகக் ஜெயலலிதா பெயரில் திருப்பதியில் சேகர் ரெட்டி சிறப்பு பூஜை நடத்தினாராம். பூஜைகள் மீது அதீத நம்பிக்கை கொண்ட ஜெயலலிதாவிற்கு இது பிடிச்சுப் போனதுனால தலைமை இவருக்கு பல முக்கிய பொறுப்புகளை அடுத்தடுத்து வழங்கியதாம். ஒவ்வொரு முறை ஜெயலலிதாவை சந்திக்கும் போதும் லட்டு வாங்கி வருவது, கோவில் பிரசாதம் கொண்டு வருவது.. உங்களுக்கு சிறப்பு பூஜை செய்தேன்.. தேங்காய் இதோன்னு தலைமைக்கு நெருக்கமாக இருந்துள்ளார். இவரின் நெருக்கம் காரணமாக அப்போதைய அதிமுக அமைச்சர்களும் இவருக்கு நெருக்கம் ஆனாங்க. சேகர் ரெட்டியின் ப்ளஸ் என்னன்னு சொல்லணும்னா அவர் எந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு வளைந்து நெளிந்து போக கூடியவராம். ஜெயலலிதா இருந்த போதும் சரி, சசிகலா சில நாட்கள் அதிமுகவை கட்டுப்படுத்திய போதும் சரி, இபிஎஸ், ஓபிஎஸ் இணைஞ்சு டாப்பிற்கு வந்த போதும் சரி, சேகர் ரெட்டி மட்டும் அப்படியே இருந்தாராம்.. அவரை அதிமுகவில் யாரும் பெரிசா பகைச்சுக்கலை. எல்லோருடைய குட்புக்கிலும் இவர் இருந்திருக்கிறார்.. இவரின் ரெட் டைரியிலும் அவர்கள் இருந்திருக்காங்க. (இதுதான் இப்போது சிக்கலே). இந்த தொடர் நட்புகள் காரணமா ஓபிஎஸ் உடனும் நட்பு ஏற்பட்டு இருக்குது.
ஜெயலலிதாவின் குட் புக்கில் இருந்த காரணத்தால் இவருக்கு திருப்பதி தேவஸ்தான தேவசம் போர்டு உறுப்பினர் பதவியும் கிடைச்சுது. அதே சமயத்தில்தான் இவர் தீவிரமாக மணல் எடுக்கும் பிஸ்னஸ் நடத்தி வந்தார். இப்போது தன் மீது வைக்கப்படும் புகார்களுக்கும்.. இவர் தன்னுடைய வருமானம் எல்லாம் மணல் விற்பனையில் வந்தது என்றே குறிப்பிட்டு உள்ளார். ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத நேரத்தில் ஓ பன்னீர்செல்வமுடன் மிக நெருங்கிய நண்பராக சேகர் ரெட்டி இருந்ததாக கூறப்படுது. அடுத்த முதல்வராக ஓ பன்னீர்செல்வம் வரலாம்னு கணிச்சுதான் அவருடன் நெருக்கம் காட்டியதாக கூறப்படுது. இருவரும் ஒன்றாக சேர்ந்து ஜெயலலிதா குணமடையணும்னு திருப்பதியில் மொட்டை போட்டு பூஜையும் நடத்தினார்கள். இந்த புகைப்படமும் இணையம் முழுக்க அப்போ வைரலாச்சு. அப்போலோவிலும் இதற்காக சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் நடத்தப்பட்டுச்சாம். இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணத்திற்கு பின் நடந்த பல்வேறு ரெய்டுகளை தொடர்ந்து சேகர் ரெட்டியும் ரெய்டில் சிக்கினார். இந்த ரெய்டு சாதாரணமாக பண பதுக்கல் என்று இருந்தால் பெரிதாக பிரச்சனை ஆகி இருக்காது. ஆனால் இவருக்கு நெருக்கமாக இருந்ததாக தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் கூட அப்போது ரெய்டு நடத்தப்பட்டது. இதுதான் தேசிய அளவில் இந்த ரெய்டு கவனம் பெற காரணமாக மாறுச்சு. ரெயில்வேல சாதாரண தினக்கூலி பணிக்கு வந்தவர் 10 வருடங்களுக்கும் மேலாக அதிமுக ஆட்சியில் முக்கிய பவர் சென்டராக இருந்ததாக சொல்லப்படுது.

பிறகு நாளுக்கு நாள் அரசியல் செல்வாக்கை பெருக்கிக்கிட்டாரு… அதனால் பெரிய பெரிய காண்ட்ராக்ட்கள் கிடைக்கும் அளவுக்கு உயர்ந்தார்..   இதற்கு பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இருந்தாலும் ஜெ.சேகர் என்ற சேகர் ரெட்டி பெயரை சொன்னதுமே நமக்கு கண் முன் வந்து நிற்கும் உருவம் ஓபிஎஸ்தான்..! கடந்த காலங்களில் இவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இணக்கம் இருந்தது.. அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தியவர் இந்த ரெட்டிதான்.. தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தினார்.. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது, சேகர் ரெட்டியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிய வந்தது..  ஒருமுறை ஓபிஎஸ் தலையில் மொட்டை அடித்து கொண்டு, ரெட்டியுடன் திருப்பதி கோவிலில் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானது.. இது இவர்களின் இறுக்கமான நட்புக்கும் சாட்சியாகவும் விளங்கியது… இதற்கு பிறகுதான், திருப்பதி தேவஸ்தானத்தின் பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிவு செய்து கைதுசெய்தது…  அப்போத சோதனையில் அவரது டைரி ஒண்ணு சிக்கி, அந்த டைரியில் ஓபிஎஸ் பெயர் அடிபட்டு..பரபரப்பாகப் பேசப்பட்டுச்சு. இப்படிப்பட்ட சூழலில்தான், யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ, அவர்களின் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு, சட்ட ரீதியான தண்டனை தரப்படும்ணு ஸ்டாலின் பிரச்சாரங்களில் சொல்லிகிட்டே வந்தாரு.. அப்போதே சேகர் ரெட்டியின் பெயரும் பலருக்கு நினைவுக்கு வந்தது..  ஆனால், ஸ்டாலின் முதல்வரானதுமே, சேகர் ரெட்டி நேரில் வந்து சந்திச்சுப் பேசினாரு.கூடவே உதயநிதி ஸ்டாலினும் இருந்தாரு.அந்த புகைப்படங்கள் எல்லா பத்திரிகைகள்லயும் வெளிவந்து பரபரப்பாகப் பேசப்பட்டது. கொரோனா நிவாரண நிதியையும் ஒரு கோடி ரூபாய் தந்துவிட்டு போனார். இதனால் மறுபடியும் மணல் ஒப்பந்தம் சேகர் ரெட்டிக்கே தரப்பட்டுவிடுமோ என்ற ஒரு சந்தேகமும் எழுந்தது.. ஆந்திரத்தின் விஐபி ஒருவர்தாம் இதற்கெல்லாம் காரணம்னு, திமுக மேலிடத்துக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பாக பேசியதாகவும் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டுச்சு. இப்படிப்பட்ட சூழலில்தான், சேகர் ரெட்டி டைரி விவகாரம் மீண்டும் சூடுபிடிச்சிருக்குது.. சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய புள்ளிகள் பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வந்தது.. அதுகுறித்துதான் வருமான வரித்துறையினர் விசாரித்தும் வந்தனர்.. இப்போது அந்த விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சேர்த்து 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…. அந்த வகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து, திமுகவில் இணைஞ்சு இப்போ திமுக அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியுது. இதை திமுக எப்படி எதிர்கொள்ள போகுதுங்கிறதுதான் தற்போதைய எதிர்பார்ப்பா இருக்குது.. ஏற்கனவே வேலை வாங்கித் தர்றதா பணம் வாங்கி மோசடி செய்ததா தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி சிக்கி இருக்காரு. இந்த வழக்கின் வாக்குமூலங்களை பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 2 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்திச்சு.  இந்த வழக்கில் இருந்து அவருக்கு விலக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள்.. அமைச்சர் பதவியில் இருந்து, மோசடி வழக்கை எதிர்கொள்வது என்பது எங்கும் நடக்காத ஒண்ணுங்கிறாங்க.
ஆட்சி பறிபோன பிறகுதான் இப்படிப்பட்டமோசடி வழக்குகளை ஆளும்கட்சி தொடுக்கும் என்பது நடைமுறை.. ஆனால், தற்போது அமைச்சராக இருந்துகொண்டே வழக்கையும் சந்தித்து வருகிறார் செந்தில்பாலாஜி..  இப்போது கூடுதலாக வருமான வரி நோட்டீஸ் விவகாரத்திலும் அவர் பெயர் அடிபடுவதும், அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் திமுகவுக்கு நெருக்கடியை தந்துள்ளது.. மத்திய அரசுக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கரூரில் செந்தில்பாலாஜி மேற்கொண்ட செயல்பாடுகளை பார்த்து முதல்வர் ஸ்டாலின் அவரை நேரடியாக பாராட்டியதாக செய்திகளும் வந்த நிலையில், இப்போ நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் ஸ்டாலினுக்கே தர்மசங்கடத்தை தந்துள்ளது.இவரின் டைரியில் இருந்த பெயர்கள்தான் இப்போஅனைத்து சர்ச்சைகளுக்கும் காரணம். டைரியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்ற தலைவர்களுக்கு  பணம் கொடுக்கப்பட்டதா? கொடுக்கப்பட்டது என்றால் ஏன் கொடுக்கப்பட்டது? பணமதிப்பிழப்பிற்கு பின் இவரிடம் எப்படி பல கோடி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தது? யாருக்கு எல்லாம் இவர் பணம் மாற்ற உதவி செய்தாருன்னு பல மர்மங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கலை. இப்போ மீண்டும் இந்த வழக்கை வருமான வரித்துறை தூசி தட்டி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்களால்.. மீண்டும் பல பூதங்கள் இதில் இருந்து வெளியே வரலாம்னு எதிர்பார்க்கப்படுது.