சென்னை வாசிகள் சராசரி இந்தியர்களை விட அதிக அளவில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் !!

மகிந்திரா குழுமத்தின் முதலாவது “மாற்று முறை” (ALTERNATIVISM) (1) ஆய்வில் சென்னையை அடிப்படையாகக் கொண்ட 90 சதவீத மக்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் ஆபத்துக் குறித்துத் தங்களுக்குத் தெரியும் என்று பதில் அளித்தனர். தேசிய அளவில் இவ்வாறு பதில் அளித்தவர்களின் சராசரி 75 சதவீதமாக உள்ளது. நீர் சேமிப்பு மற்றும் அது தொடர்பான சுற்றுச் சூழல் விவரங்கள் குறித்து தங்களுக்கு விழிப்புணர்வு உள்ளது என்றும் அது தொடர்பான தகவல்கள் தெரியும் என்றும் சென்னையைச் சேர்ந்த 69 சதவீதம் பேர் கூறினர். தேசிய அளவில் இவ்வாறு கூறியவர்களின் சராசரி 70 சதவீதம். சென்னையில் நான்கில் மூன்று பேர், இந்தியா உட்பட பல நாடுகளில் எதிர்காலத்தில் மிகப் பெரிய தண்ணீர் பிரச்சினை ஏற்படக் கூடும் என்று கவலை தெரிவித்தனர். தேசிய அளவில் இவ்வாறு தெரிவித்தவர்களின் சராசரி 68 சதவீதம்.

இந்த கவலைகளை எல்லாம் தீர்க்கும் வகையில் நடைமுறை வாழ்வில் மாற்றங்களை பார்க்கும் போது அதை சென்னையில் 26 சதவீதம் பேர் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டு போக்குவரத்து நடைமுறையில் மாற்றத்தைத் தேர்வு செய்வதாகக் கூறியுள்ளனர். தேசிய அளவில் இதன் சராசரி 13 சதவீதமாக உள்ளது. சென்னையைப் பொருத்தவரை மிகப் பெரும்பான்மையான 74 சதவீதம் பேர், போக்குவரத்தில் சவுகரியம், வசதி, நேரம், செலவு ஆகியவற்றை முக்கியமாகக் கருவதுவதாக கூறியுள்ளனர். தேசிய அளவில் 87 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர்.வர்த்தக சமுதாயத்தினரிடம் இருந்து சென்னைவாசிகள் எதிர்பார்ப்பது இந்த ஆய்வின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் மாற்றுத் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கினால் பருவ நிலை மாற்ற சவாலை திறம்பட எகிர்கொள்ள இயலும் என 86 சதவீத சென்னை மக்கள் தெரிவித்துள்ளனர் (தேசிய சராசரி 89 சதவீதம்). 73 சதவீத சென்னை மக்கள், தங்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் காற்று சுத்திகரிப்பு, மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் மறு சுழற்சி உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர் (தேசிய சராசரி 68 சதவீதம்).வர்த்தக சமுதாயத்தினரிடம் இருந்து சென்னைவாசிகள் எதிர்பார்ப்பது இந்த ஆய்வின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் மாற்றுத் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கினால் பருவ நிலை மாற்ற சவாலை திறம்பட எகிர்கொள்ள இயலும் என 86 சதவீத சென்னை மக்கள் தெரிவித்துள்ளனர் (தேசிய சராசரி 89 சதவீதம்). 73 சதவீத சென்னை மக்கள், தங்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் காற்று சுத்திகரிப்பு, மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் மறு சுழற்சி உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர் (தேசிய சராசரி 68 சதவீதம்).

மகிந்திரா குழுமத்தின் நீடித்த வளர்ச்சிப் பிரிவு தலைமை அதிகாரி அனிர்பன் கோஷ் (Anirban Ghosh, Chief Sustainability Officer, Mahindra Group) இது குறித்துக் கூறுகையில், “நீண்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தற்போதைய தலைமுறை இந்தியர்கள் சுற்றுச் சூழல் குறித்து அதிக அளவு விழிப்புணர்வுடன் உள்ளனர் என்பது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய சராசரி அளவைக் காட்டிலும் சென்னைவாசிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு அதிகமாக இருப்பது ஒப்பீட்டின் மூலம் தெரிய வருகிறது. எனினும் இந்த விழிப்புணர்வை செயலில் கொண்டுவர நுகர்வோருக்கு எளிதில் கிடைக்கக் கூடிய சுற்றுச் சூழலுக்கு ஏற்ற மாற்றுத் தயாரிப்புகள் தேவை. தொழில், வணிக சமுதாயத்திற்கு அதிக பொறுப்பு உள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்கள் ஒரு மாற்றுத் தயாரிப்பைத் தயாரிப்பது மட்டுமல்லாமல் அது எந்த அளவில் சிறப்பான செயல்பாட்டுக்கு உரியதாக இருக்கிறது என்பதும் முக்கியம். இதில் தெரிய வந்துள்ள தகவல் மிகத் தெளிவானது. அதாவது, சுற்றுச் சூழல் மாற்றத்துக்கான ஆயுதத்தை தொழில், வர்த்தக சமுதாயம் எடுக்க வேண்டும் என்பதே அது.” பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள பசுமை வாய்ப்புகளை ஊக்கவிக்க மகிந்திரா குழுமம் ஆர்வமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக தனது தொழில் துறைகளான வாகனங்கள், எரிசக்தி, உள்ளிட்டவற்றில் இந்த நிறுவனம் பசுமைத் தயாரிப்புகளை வழங்க முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பசுமைக் கட்டடங்கள், நுண்ணீர்ப் பாசனம் மற்றும் பிற தொழில் நுட்பத் தீர்வுகளிலும் இது கவனம் செலுத்துகிறது. என்றார்.