அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுகிறது தமிழக பாஜக! போட்டியிடும் 20 வேட்பாளர்களில் பலருக்கு எப்படி சீட் கிடைத்ததுன்னு கனமான புகார்கள் டெல்லிக்குப் பறந்துகிட்டிருக்காம்.. புகார்களைப் பார்த்து கட்சியின் தேசிய தலைமை அதிர்ச்சியடைந்திருக்கிறது.
தேர்தல் முடியட்டும், அப்போது தெரியும் எங்களின் அக்னிப் பார்வை” என இப்போதே பற்களைக் கடிக்கிறதாம் டெல்லி. இதற்கிடையே, பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் நிலவரங்கள் எப்படி இருக்கிறதுன்னு மத்திய உளவுத்துறையிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறது டெல்லி தலைமை.
கடந்த ஒரு வாரத்தில் 20 தொகுதிகளையும் இருமுறை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் உளவு ஆட்கள். ஒரு தொகுதியில் கூட பாசிட்டிவ் ரிசல்ட் வரலையாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உளவுத்துறை, ரிப்போர்ட்டை அனுப்பலாமா? வேண்டாமா? என யோசித்ததாம். இது தொடர்பாக நடந்த விவாதத்தில், நமக்கு எதற்கு வம்பு? என்ன ரிசல்ட் வந்ததோ அதனை அனுப்பி வைத்துவிடுவோம்னு முடிவெடுத்து, உண்மையான ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஓரிடத்தில் கூட தாமரை மலராது என்கிற ரிப்போர்ட்டை பார்த்து தேசியத் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோடியும் அமித்ஷாவும் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும்போது, தமிழக தலைவர்களுக்கு டோஸ் இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த டெல்லி சோர்ஸ்கள்.
இதுக்கிடைல தமிழக தேர்தலில் பாஜகவின் தோல்வியை அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தொண்டர்களே உறுதி செஞ்சிட்டதா சொல்றாங்க.
பாஜகவுடன் இணைந்து பரப்புரை செய்ய அதிமுகவினர் மறுத்து விட்ட செய்திகளை அவர்கள் ஆதரவு ஊடகங்களாலேயே மறைக்க முடியலையாம்.
அதிமுக போட்டியிடும் தொகுதிகளிலும் பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படங்கள் தென்படுவதில்லை.
இந்நிகழ்வுகள் திமுக மட்டுமின்றி பாஜகவை தீவிரமாக எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் இதர இயக்கங்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
இத்தேர்தலில் தங்கள் தேர்தல் அறிக்கைதான் ‘கதாநாயகன்’ என்று திமுக பெருமையுடன் அறிவிப்பு செய்தது. பல மக்கள் நல திட்டங்கள் அவ்வறிக்கையில் இருந்ததையும் மறுக்க முடியாது.
சமீபத்தில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, உணர்வுள்ள எந்த தமிழனும் ஏற்கமுடியாத தமிழ், தமிழகம், தமிழர் விரோத தேர்தல் அறிக்கையாக கருதப்படுகிறது. திமுகவிற்கு இந்த அறிக்கை ‘சூப்பர் கதாநாயகனாக’ஹீரோவாக உதவுவதை அறியமுடிகிறது.
“எங்களுக்கு வாக்களிக்க வில்லை என்றால் பாஜக வந்துவிடும்”
என்கிற பூச்சாண்டி கதையை மட்டும் திமுக கூறிக்கொண்டிராமல் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம், கடந்த காலத்தில் தங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை சீர் செய்ய என்ன செயல்திட்டம் என்று தெளிவாகக் கூறி வாக்கு சேகரித்தால் வரவேற்போம்.
தமிழகத்தின் அதிமுக்கிய கோரிக்கைகளான எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்தல் போன்றவற்றை முதல் அறிக்கையில் கைவிட்ட பின் மீண்டும் திருத்தமாக பின்னர் இணைத்தற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. அதேபோல் சிறுபான்மை முஸ்லிம் மக்களை குறிவைத்து இயற்றப்பட்ட CAA சட்டத்தை முதலில் ஆதரித்து அறிக்கையில் வெளியிட்டு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய பின் சிறு திருத்தமாக பின்னர் சேர்த்ததின் நோக்கம் என்ன என்பதையும் திமுக விளக்கியிருக்கலாம்.
பாஜக எதிர்ப்பு அலையை வைத்து மக்கள் ஆதரவை பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு அவர்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு வலிமை சேர்க்கும் விதமாக இந்தச் செயல்பாடுகள் அமைந்துள்ளதை திமுக தலைமை கவனத்தில் கொள்வார்கள் என்று நம்பலாம்.
பாஜகவுடன் அணி சேர்ந்துள்ள அதிமுக தங்கள் சரிந்து வரும் செல்வாக்கை சரிசெய்ய தமிழர் நலன் கருதி இப்போதாவது பாஜகவை கை கழுவுவது நல்லது.தேர்தலில் அதிமுக தோற்றால் பாஜகவை கழட்டி விட்டுடு வாங்கன்னு இப்பவே பேச ஆரம்பிச்சிட்டாங்களாம்