ஐ.எம்.டி.பியில் அதிக-தரமதிப்பீடு பெற்ற நடிகர் தனுஷ்11 திரைப்படங்களின் பட்டியல் !

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தனுஷ்: ஐ.எம்.டி.பியில் அதிக-தரமதிப்பீடு பெற்ற இந்நடிகரின் 11 திரைப்படங்களின் பட்டியல் இதோ

சென்னை-26.07.2023-தனுஷ் என்று பிரபலமாக அறியப்படும் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா அவர்கள் விரைவில் 40 வயதை அடைகிறார். தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் அவரது பலதுறை பணிகளுக்காக பிரபலமான இவர், ஒரு நடிகராக மட்டும் பணியாற்றவில்லை, ஆனால் ஒரு தயாரிப்பாளராக, பாடலாசிரியராக மற்றும் பின்னணிப் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, 2002 ஆம் ஆண்டு ஒரு வளரிளம் பருவ நபராக துள்ளுவதோ இளமை, திரைப்படத்தில் தனுஷ் அவர்கள் முதலில் திரையில் தோன்றினார். இது அவரது சகோதரர் கே. செல்வராகவன் அவர்களால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படமாகும். அப்போது முதல், அவர் புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், காதல் கொண்டேன், அசுரன், மற்றும் ஆடுகளம் போன்ற பல்வேறு பிரபலமான திரைப்படங்களில் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களில் அவரது சிறந்த நடிப்பிற்காக அவருக்கு முறையே 58வது மற்றும் 67வது தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன. இந்த நடிகர் ஆனந்த் எல். ராய் அவர்கள் இயக்கிய ராஞ்னா திரைப்படத்தின் மூலமாக ஹிந்தி திரைப்படத்தில் தனது கால்தடத்தைப் பதித்தார், அதன் இரண்டாவது பாகம் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எம்.டி.யின் அடிப்படையில் தனுஷ் அவர்கள் நடித்த 11 அதிக-தரமதிப்பீடு பெற்ற திரைப்படங்கள் இதோ:

1) புதுப்பேட்டை – 8.5
2) அசுரன் – 8.4
3) வட சென்னை – 8.4
4) ஆடுகளம் – 8.1
5) கர்ணன் – 8
6) காதல் கொண்டேன் – 8
7) திருச்சிற்றம்பலம் – 7.9
8) வேலையில்லா பட்டதாரி – 7.8
9) பொல்லாதவன் – 7.7
10) மயக்கம் என்ன – 7.7
11) ராஞ்னா – 7.6

Related posts:

கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் 'மனிதம்' புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் !

ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை !

படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா! தந்தையைப் பற்றி பாடகி எஸ்.பி. ஷைலஜா!!

செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!

திவால் சட்டம் அமலுக்கு வந்த பின் வாராக் கடன்களுக்கு தீர்வு!

விஜய் சேதுபதி கதை சொல்லும் 'கடைசீல பிரியாணி'...

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதை: ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!