*”சம்பலில் இருந்து குலசேகரபட்டினம் வரை நீண்ட தூரம் பயணித்திருந்தேன்” நடிகை சீமா பிஸ்வாஸ்!*

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது.
இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பண்டிட் குயின்’ படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா.
‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பட்டேன். காளியின் சாராம்சமே கடும் தியாகங்கள் தான். படக்குழுவினரும் தங்களுடைய கடும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். மேலும், படத்திற்கான தியாகங்களுக்கு காளி நிச்சயம் வெற்றி தருவாள் என்ற உறுதியுடன் உள்ளனர். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது” என்றார்.

Related posts:

*நடிகர் சாந்தனு பாக்யராஜின் ’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது!*

”காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது” இயக்குநர்  APG  ஏழுமலை!

“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

வஸந்த் ரவி - வாங்க சாப்பிடலாம்-முன்னு அழைச்சிருக்கார்!

குழந்தைகளுடன் பார்க்கிற மாதிரியான படங்கள் அபூர்வமாகத்தான் வெளி வருகின்றன. குழந்தைகளை வெகுவாக கவரும் விதமாக வந்திருக்கும் படம் தான் டபுள்டக்கர்.!

'கிணறு' ('The Well'): மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்!

'பிழை' - பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு பாடம் !

'ஜெய் ஹனுமான்' சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது!