உடலுறவின் போது வலி உண்டாவதற்கு என்னென்ன காரணங்கள் ?

சில சமயங்களில் உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வலி மிகுந்ததாக அமைகிறது. இந்த மாதிரியான வலி உண்டாவதற்கு என்னென்ன காரணங்கள் ஏற்படலாம், அதற்கு நிவாரணம் அளிப்பது எப்படி என பார்ப்போம்

பொதுவாக உடலுறவு என்பது இன்பகரமான ஒன்றாக கூறப்படுகிறது. ஆனால் அதே உடலுறவு சில பேருக்கு மகிழ்ச்சிகரமானதாக இருப்பதில்லை. உடலுறவின்போது வேதனை, வலி, டிஸோர்காஸ்மியா போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. வலி மிகுந்த புணர்ச்சி என்பது எந்தவொரு உடற்கூறியல் நிபுணரும் அனுபவிக்கும் ஒன்று. இதுகுறித்து பிசிகல் தெரபி மருத்துவர் கூறுகையில் வலிமிகுந்த புணர்ச்சி என்பது ஒரு ஆரோக்கியமற்ற ஒன்று. இது ஒருவருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

​உறவின்போது வலி உண்டாதல்

டிஸோர்காஸ்மியா என்பது ஒரு அசாதாரணமானது அல்ல. வலிமிகுந்த புணர்ச்சியை அனுபவிக்கிறார்கள் என்பதற்கான உறுதியான சான்றுகள் இதில் இல்லை.இது குறித்து சிறுநீரக மருத்துவர் மற்றும் பெண் இடுப்பு மருத்துவ நிபுணர் கூறுகையில் சுமார் 10 சதவீத மக்கள் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் வலி மிகுந்த புணர்ச்சியை அனுபவிப்பதாக கூறியுள்ளனர். வலி மிகுந்த புணர்ச்சிக்கு தீர்வுகள் உள்ளன என்று மற்றொரு மருத்துவர் கூறியுள்ளார்.

உடலுறவு என்பது உடல், உணர்ச்சி, மன மற்றும் உளவியல் காரணிகளை உள்ளடக்கியது. சில நேரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கலவைகளுடன் அமையப் பெறும்.இது குறித்து பாலியல் சுகாதார ஆலோசகர் கூறுகையில் இடுப்பு தசை செயலிழப்பு என்பது வலி மிகுந்த புணர்ச்சியின் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

​வலி மிகுந்த புணர்ச்சி எதனால் ஏற்படுகிறது

தோள்கள், கழுத்து, கீழ் முதுகு, இடுப்பு தசைகளில் ஏற்படும் அழுத்தத்தால் இந்த புணர்ச்சி வலி உண்டாகிறது.இடுப்பு செயலிழப்பு கூட உடலுறுவின் போது நாள்பட்ட அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்கலாம்.இதெல்லாம் உடலுறுவின் போது வலி ஏற்படக் காரணமாக இருக்கலாம்

சுய இன்பம்

துணையுடனான உடலுறவு

திருமணத்திற்கு முந்தைய உடலுறவு

பாலியல் நோக்குநிலை

பெண்ணுறுப்பு வழி பாலியல்

இடுப்பு செயலிழப்பு

​இடுப்பு செயலிழப்பு

இடுப்புத் தசைகள் அந்தரங்க எலும்பிலிருந்து கோக்ஸிக்ஸ் பக்கத்திலிருந்து பக்கமாக பரவுகின்றன.

எனவே தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொள்ளும் போது இந்த தசைகள் மிகவும் வேகமாக சுருங்குகின்றன. இந்த தசைப்பிடிப்பால் சில நேரங்களில் புணர்ச்சியின் போது வலி ஏற்படுகிறது.

ஏற்கனவே இடுப்பு தசை செயலிழப்பு நோயாளிகளுக்கு புணர்ச்சியால் தசைகள் இன்னும் இறுக்கமடைகின்றன. இது மேலும் வேதனையை உண்டாக்குகிறது என்று அவர் கூறுகிறார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் தசைச் சுருக்கங்கள் நரம்புத் தடையை ஏற்படுத்தும், இது பாலியல் உச்சக்கட்டத்தின் போது வலிக்கு வழி வகுக்கிறது.

​கடும் வலி ஏற்படுதல்

எண்ட்ரோமெட்ரியோசிஸ் கருப்பை திசு கருப்பைக்கு வெளியே வரும் போது எண்ட்ரோமெட்ரியோசிஸ் ஏற்படுகிறது. இடுப்பு வலி மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இதனாலும் உடலுறவின் போது வலி உண்டாகிறது.

எண்ட்ரோமெட்ரியோசிஸ் இருந்தால் கீழ்க்கண்ட பிரச்சனைகளை சந்திப்பீர்கள்

மலம் கழிக்கும் போது வலித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி உண்டாதல் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்த போக்கு கீழ் முதுகு வலி.

இடுப்பு அழற்சி நோய்

இடுப்பு அழற்சி நோய் என்பது இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் அழற்சி தொற்றாகும். பாலியல் ரீதியாக பரவும் தொற்று, கருப்பை, ஃபலோபியன் குழாய்கள் அல்லது கருப்பைகள் வரை பரவும் போது இது பொதுவாக நிகழ்கிறது.

இடுப்பு அழற்சி நோய் காரணங்கள்

உடலுறுவின் போது இரத்த போக்கு ஏற்படுதல்

உடலுறவின் போது இரத்தம் வெளியேறுதல்

காய்ச்சல்

வாசனை அல்லது சுவை மாற்றம்.நீண்ட காலமாக சிகிச்சைகள் அளிக்கப்படாமல் விட்டால் சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.ஆன்டி பயாடிக்ஸ் மருந்தைக் கொண்டு இந்த அழற்சியை நம்மால் சரி செய்ய முடியும்.

​கருப்பை நீர்க்கட்டிகள்

கருப்பை நீர்கட்டிகளால் கூட உடலுறுவின் போது வலி உண்டாக வாய்ப்புள்ளது.ஆனால் இந்த நீர்க்கட்டிகள் சில மாதங்களுக்கு பிறகு போய் விடும்.கருப்பை நார்த்திசுக்கட்டிகள் பொதுவாக அறிகுறிகளை ஏற்படுத்தாது.ஆனால் சில சமயங்களில் உடலுறுவின் போது ஊடுருவல் வலி, மலச்சிக்கல் அல்லது குறைந்த முதுகுவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

​வலி மிகுந்த புணர்ச்சி வரலாறு

ஆரம்ப காலத்தில் கூட உடலுறுவின் போது சிலர் வலி மிகுந்த புணர்ச்சியை அனுபவிக்கின்றனர். எனவே வலியை தவிர்க்க புணர்ச்சியின் போது உடலையும் மூளையையும் ஒன்று சேர்க்க வேண்டும். உணர்வு ரீதியாக அனுபவிக்கும் போது புணர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

​வலி மிகுந்த புணர்ச்சிக்கு நிவாரணம் என்ன?

நீங்கள் வலியை சரி செய்ய முயற்சிக்கக் கூடாது. நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதில் தாமதம் உங்க அறிகுறிகளை அதிகரிக்க செய்யலாம் அல்லது பிற சிக்கல்களுக்கு வழி வகுக்கும். இல்லையென்றால் ஒரு மருத்துவ நிபுணரை சந்திப்பது வேதனையான புணர்ச்சியை முற்றிலும் அகற்றும்.

பொதுவான காரணங்கள்

வலி மிகுந்த ஆண்குறி புணர்ச்சிக்கு 5 பொதுவான காரணங்கள்

ஆண்களுக்கும் இந்த வலி மிகுந்த விந்து தள்ளல் பிரச்சனை உள்ளது.

விந்து வெளியேறும் போது எரிதல்,எரிச்சல் அல்லது கொட்டுதல் போன்ற வலிகளை ஆண்களும் அனுபவிக்கிறார்கள். இது சிகிச்சை அளிக்கப்படாத பாலியல் தொற்றாகும்.

​பாலியல் தொற்றின் அறிகுறிகள்

கோனோரியா

கிளமிடியா

ட்ரைக்கோமோனியாசிஸ்

போன்ற அனைத்து பாக்டீரியாக்களும் உடலுறுவின் மூலம் தொற்றுக்களை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. ஹெர்பஸ் போன்ற வைரஸ்கள் பாலியல் தொற்றை ஏற்படுத்தச் செய்கிறது.

​இடுப்பு தசை செயலிழப்பு

இடுப்பு தசை செயலிழப்பு குறித்து மருத்துவர் கூறுவதாவது, புணர்ச்சியின் போது விந்து தள்ளல் ஏற்படுவது தசைகளில் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. அவை வலியை ஏற்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில் நரம்புத் தூண்டலுக்கு வழி வகுக்கிறது.

​புரோஸ்டேடிஸ்

புரோஸ்டேட் என்பது சிறுநீர்ப்பைக்கு கீழே அமைந்துள்ள கால் அளவிலான சுரப்பி ஆகும்.

சில நேரங்களில் பாக்டீரியா தொற்று, நாள்பட்ட நிலை காரணமாக இந்த சுரப்பி வீக்கமடைகிறது. இதுவே புரோஸ்டேடிஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது விந்து வெளியேறுவதை வலிமையாக்கும்.

​புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் அறிகுறிகள் அற்றது. எனவே புரோஸ்டேட் புற்றுநோய்க்கு புரோஸ்டேடெக்டோமி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொள்கின்றனர். புரோஸ்டேட் புற்றுநோய்க்கான இரண்டு பொதுவான சிகிச்சைகள்

விந்து தள்ளல் நீர்க்கட்டிகள் அல்லது கற்கள் போன்றவை விந்து வெளியேற்றக் குழாயில் உருவாகலாம்.

​நிவாரணம் பெற என்ன செய்யலாம்

ஆண்குறி புணர்ச்சி உங்களுக்கு இன்பத்தை விட வலியை ஏற்படுத்துகிறது என்றால் ஒரு சுகாதார மருத்துவரிடம் பேசுங்கள்.

புற்றுநோயானது சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய சாத்தியமான காரணிகளில் ஒன்று.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்

ஒரு முறை வேதனையான புணர்ச்சிக்காக நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இரண்டாவது முறை ஏற்படும்போது மட்டுமே நீங்கள் மருத்துவரை அணுகலாம் என்கிறார். வேதனையான புணர்வு நிலை தொடர்ந்தால் ஒரு மாதம் வரைக் கூட நீங்கள் சந்திப்பை தொடங்கலாம்.

பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் இருந்தால் மகளிர் மருத்துவ நிபுணரை சந்தியுங்கள். பாலியல் செயலிழப்பு, எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் வலி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை சந்தியுங்கள்.

இடுப்பு தசை செயலிழப்பு பிரச்சனை இல்லையென்றால் பாலியல் சிகிச்சையாளர் அல்லது சோமாடிக் பாலியல் நிபுணருடன் பணிபுரிய பரிந்துரைக்கிறார்கள். எனவே வலி மிகுந்த புணர்ச்சி தொடர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.