சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களை அறிவோம். !

கொரோனா வைரஸால் உலக நாடுகள் நடுங்கி ஒடுங்கிப்போய் நிற்கின்றன. அலோபதி மருத்துவம் அபார வளர்ச்சி அடைந்திருந்தாலும் கொரோனா வைரஸுக்கு ‘மருந்து இருக்கு ஆனா இல்லை’ என்று கூறும் நிலையே. ஆனால் பாரம்பரிய தமிழ் மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்து இருக்கிறது என்று உரக்கச் சொல்லி யாரும் பயப்பட வேண்டாம் என்று நம்பிக்கை தருகிறது தமிழகம்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களை அறிவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத சிந்தாமணி மருத்துவம் ராவணனால் உருவாக்கப்பட்டது. ராமாயண ராவணனின் மறுபக்கத்தில் அவன் சிறந்த சிவபக்தனும், மருத்துவ சித்தனும் ஆவான். ராவணன் இயற்றிய ஆயிரக் கணக்கான மருத்துவ குறிப்புகள் சிந்தாமணி மருத்துவம் என்ற நுாலில் கிடைக்கின்றன. அகத்தியர் இயற்றிய சித்த மருத்துவம் இதற்கு பிந்தைய காலத்தில் உருவானது என்பது ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு.

நுரையீரலின் குழந்தை சிறுநீரகம்.

அக்குபஞ்சர் மருத்துவ சித்தாந்தத்தின் படி ‘சிறுநீரகம் நுரையீரலின் குழந்தை’ என்றால் வியப்பாக இருக்கிறதா! ஆம், உடலின் உறுப்புகள் அனைத்தும் தாய் தனயன் விதிப்படி அமைந்துள்ளது. நாம் எப்படி உறவுகளோடு இருக்கிறோமோ அதைப்போல்தான் உறுப்புகளும். நுரையீரலின் அம்மா மண்ணீரல். மண்ணீரல் இறந்த செல்களை, கழிவுகளை வெளியேற்றும். நோய் எதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.

சிறுநீரகம் உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றும். எரித்ரோபயாட்டின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யும், இதுதான் எலும்பு மஜ்ஜையில் ரத்தம் உற்பத்தி ஆக உதவுகிறது. வைட்டமின் ‘D’ யை வேலை செய்ய துாண்டும். ரத்தக் கொதிப்பை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது. ஆகவே நுரையீரல் பாதிக்கப்படும்போது அதன் அம்மாவிடம் சக்தியை வாங்கும், அதே நேரத்தில் தன் குழந்தையாகிய சிறுநீரகத்திற்கு சக்தி கொடுக்காது. இதனால் சிறுநீரகத்தின் செயல்பாடுகளும், மண்ணீரலின் செயல்பாடுகளும் குறையத் தொடங்கும்.இதேபோல்தான் சர்க்கரை நோயால் இருதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை சில ஆண்டுகளில் பாதிக்கப் படுகின்றன.அக்குபஞ்சர் மருத்துவத்தில் நோயின் தாக்கம் எந்த உறுப்பில் என்பதை அறிந்து அதன் அம்மா மற்றும் குழந்தை உறுப்புகளை செயல்பட துாண்டி விடும் பொழுது தீர்வு கிடைக்கிறது.

சுவாசா மூலிகைப் பொடி.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நுரையீரல் மட்டுமல்ல அதைச் சார்ந்த மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.இந்த வைரஸ் நெருஞ்சி முள் போலத் தோற்றமளிக்கும். இது மூக்கின் வழியாகச் சென்று மூச்சுக் குழாயில் உள்ள எபித்திலியம் செல்களில் அதன் முள்போன்ற பகுதி உட்காரும். இங்கே தான் தன் இனத்தைப் பெருக்கி, இதனோடு போராடும் வெள்ளை அணுக்களை அழித்து நுரையீரலுக்குள் செல்கிறது. இந்த நிகழ்வை நடக்கவிடாமல் எட்டி உதைத்து வெளியே தள்ளிவிட்டு, கிருமிகளின் தாக்கத்தை தொண்டையோடு நின்று விட செய்யசிந்தாமணி மருத்துவத்தில் மூலிகை பொடி ஒன்று உள்ளது. இது அரிய மூலிகைகளின் தொகுப்பான ‘சுவாசா’ மூலிகைப் பொடி.

மூலிகைகள் என்ன.

இதில் அடங்கிய சில மூலிகைகளின் பயன்கள்…அமுக்குரம் : நரம்புகள், ரத்த நாளங்களை செயல்பட துாண்டும்.அதிமதுரம்: தொண்டையிலுள்ள வீக்கம், வலி, கரகரப்பு போன்ற பாதிப்பிலிருந்து விடுபட செய்கிறது.ஏலம் : நெஞ்சு சளி, கபம் வெளியேற உதவுகிறது.சிறுநாகப்பூ: இருதயத்தை பலப்படுத்தும், அடைப்புகளை நீக்கும், சிறுநீரகத்தின் கழிவுகள் சீராக பிரிவதற்கு உதவுகிறது.நாட்டு மாதுளை விதை: இருதயத்தில் ரத்த ஓட்டம் சீராக செயல்பட உதவுகிறது. மற்றும் சுக்கு, நல்லமிளகு, திப்பிலி, மற்றும் ஏலவிதை போன்ற மூலிகைகள் கபம், சுரம் நீக்கி, நன்கு ஜீரணசக்தியை வலுப்படுத்தும், பசியை துாண்டும், ரத்த விருத்தி அடைய செய்யும்.

கல்லீரலை பலப்படுத்தும்.சுவாசா மூலிகைப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து நாக்கில் இரண்டு நிமிடம் வைத்து உமிழ் நீரூடன் விழுங்கினால், கொரோனா வைரஸ் உட்பட எந்த கிருமிகளையும் தொண்டையிலேயே தடுப்பது மட்டுமல்ல மற்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக துாண்டும்.பக்க விளைவு ஏற்படாது. ஆனால் சில மூலிகைகளை சுத்திகரிப்பு செய்து தயாரிக்க வேண்டும். ஆகவே இதனை சித்த மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு பயன்படுத்தவும்.தமிழகத்தில் சில மாவட்டத்தில் அலோபதி மருந்துடன் “சுவாசா” மூலிகைப் பொடியும் தரப்பட்டு கொரோனா பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல்.

பொதுவாகவே இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நாட்டவரை விட அதிகம். அதிலும் தமிழர்களுக்கு மிக அதிகம். ஏனென்றால் நாம் உணவில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம்.இந்த உணவுப் பழக்க வழக்கங்கள் சற்று மாறி பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பரோட்டா, குளிர்பானங்கள் போன்ற உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து விடும்.
மேலை நாடுகளில் கொரோனா நிறைய பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதற்கு காரணம் அவர்களது உணவு பழக்கமே.ஆகவே உணவு எனும் மா மருந்தை நம் பாரம்பரிய முறையில் உட்கொண்டால், கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தற்காப்பு முறைகள்.

என்ன தான் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் சாப்பிட்டாலும் நம்மை நாம் தற்காத்துக்கொண்டால் மட்டுமே கொரோனா அண்டாமல் காக்க முடியும்.அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவசிய வேலைகளுக்கு வெளியே செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும். சிந்தாமணி மருத்துவ தத்துவப்படி நாம் சுவாசிக்கும் காற்றை (ஆக்ஸிஜன்) பிராணன் என்றும், மூக்கிலிருந்து வெளியேற்றும் காற்றை (கார்பன் டை ஆக்சைடு) அபாணன் என்றும் சொல்வோம். சுவாசிக்கும் காற்று உடம்பில் பத்து விதமான வாயுக்களாக மாறி, பத்து வித வேலைகளைச் செய்யும்.

அதில் அபாணன் வாயு கழிவுகளை வெளியேற்றும். ஆனால் முக கவசம் அணிந்திருக்கும் பொழுது மூச்சுக் காற்று முழுதும் வெளிச் செல்ல முடியாமல், மீண்டும் மீண்டும் உள் சுவாசிக்கும் காற்று பிராணன், அபாணன் வாயுவையே உள்ளிழுக்க நேரிடும். இதனால் சில நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சுவாச காற்று வெளிச் செல்லுமாறு முக கவசத்தை அடிக்கடி கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டும்.கொரோனாவை எதிர்த்துப் போராட நம் கையில் இருக்கும் ஆயுதங்களில் கூடுதலாக சிந்தாமணி மருத்துவத்தின் சுவாசா மூலிகைப் பொடியையும் அரசு பரிசீலிக்க வேண்டும்