இந்திய மாணவர்களுக்கு மலேசியபல்கலைக்கழக உதவித் தொகை !

மலேசிய நாட்டின், சரவக் நகரில் உள்ள ஸ்வைன்பெர்ன் பல்கலைக்கழகம் அதன் பல்வேறு துறைப் பாடங்களில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில்,தொழில்துறைக்கான இன்றைய தேவைகளின்படி, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு வாய்ப்புகள் – பிஸினஸ், கம்ப்யூட்டர், டிசைன், என்ஜினியரிங் மற்றும் அறிவியல் பாடங்களில் வழங்கப்படுகின்றன. இது தவிர, பிஸினஸ் நிர்வாகத்தில் பட்ட மேற்படிப்பும், ஆராய்ச்சிப்பணிகளில் முனைவர் பட்டங்களும் கூட வழங்கப்படுகின்றன.
தேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களைக் கொண்டு இந்தப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படுவதோடு, அத்தகைய அனுபவம் பெற்றவர்களைக் கொண்டே பயிற்றுவிக்கப்படுவதால், இங்கு பயிலும் மாணவர்கள் நல்ல வேலை வாய்ப்பு பெறும் நிலை ஏற்படுவதோடு, பணிக்குச் செல்லும் முன்பே அது தொடர்பான அனுபவம் பெறும் வாய்ப்பும் உள்ளது.

மலேசிய நாட்டின் ஸ்வைன்பெர்ன் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்கள் மற்றும் அதன் கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வணிக மேலாளர் மற்றும் மாணவர் தேர்வு இயக்குனர் ஜெகதீஷ் சிங் (Mr.Jagdish Singh), எதிர்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரி மாணவர்களை உருவாக்கும் பணியில் கவனம் செலுத்தும் எமது பல்கலைக்கழகம் எங்களுடன் உடன்பாடு மேற்கொண்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு , அவர்களை அனுப்பி நேரடி தொழில் அனுபவ வாய்ப்பைப் பெற ஏற்பாடு செய்கிறோம் . நாங்கள் உருவாக்கியுள்ள தொழில் ஆலோசகர்கள் கொண்ட நிபுணர் குழு . எங்களது பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களின் தேவைகளிலும் ஆலோசனை வழங்கி , அதை மேம்படுத்தி வருகிறார்கள் . அதன் மூலம் , இன்றைய உலகின் தேவைக்கு ஏற்றதாக , பாடத்திட்டங்கள் இருப்பதை நாங்கள் உறுதி செய்து கொள்கிறோம் .

இந்தியாவில் சி.பி.எஸ்.இ.( CBSE ) சர்வதேச பாடத் திட்டங்களில் 12 ஆம் வகுப்பு கற்றவர்கள் , அதில் உயர் மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் நிலையில் , நுழைவுத் தேர்வு உள்ளிட்ட எந்த இடைஞ்சல்களும் இன்றி நேரடியாகவே ஸ்வைன்பெர்ன் பல்கலைக்கழகத்தில் சேரவும் , அது வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெறவும் விண்ணப்பிக்கலாம் . மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் , அவர்களது மொழித்திறனை சோதிக்கும் பொதுத் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ்.( IELTS ) தேர்வில் பங்கேற்று தங்களது திறனை நிருபித்து பட்டப்படிப்பில் சேர்ந்து உதவித் தொகை பெறலாம் . பட்ட மேற்படிப்பை பொறுத்தவரை எல்லா மாணவர்களும் அவசியம் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் . தொழில்துறைக்கு இன்றைக்கு தேவைப்படும் பாடத் திட்டங்களை பிஸினஸ் , கம்ப்யூட்டர் , டிசைன் , பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களில் பயில இங்கு வாய்ப்புகள் உள்ளன . அவற்றில் சேர , மேல்நிலைக் கல்வி அல்லது டிப்ளமோ பட்டயம் படிப்பு முடித்தவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் . மேலும் எம்.பி ஏ.( MBA ) எனக் குறிப்பிடப்படும் வணிக நிர்வாக முதுநிலை பட்டம் , ஆராய்ச்சிப் பிரிவில் முனைவர் பட்டம் ( Ph.D ) போன்றவற்றிலும் இந்தப் பல்கலைக்கழகம் கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது .

எங்களது மாணவர்களில் வேலை வாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் . அதனால்தான் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழங்களிலேயே எமது பல்கலைக்கழகம் பலரால் விரும்பி தேர்வு செய்யப்படுகிறது . உலக அளவில் செயல்படும் பல முன்னணி நிறுவனங்களுடனும் , ஜாப்ஸ்ட்ரீட்.காம் ( jobstreet.com ) என்ற வலைதளத்துடனும் நாங்கள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையால் , எங்களது பல்கலைக்கழக வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமே மாணவர்கள் பணி வாய்ப்பு பெற முடிகிறது ” எனத் தெரிவித்தார் .செய்தியாளர்கள் சந்திப்பில் மலேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் முனைவர் வள்ளியப்பன் ராமன், முதன்மை செயல் அதிகாரி மற்றும் துணை வேந்தர் பேராசிரியர் ஜாண்வில்சன், மார்க்கெட்டிங் மேலாளர் கேரன்வோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts:

எழுத்தாளர் பொன்னிலன் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோருக்கு "படைப்பு சங்கமம் 2023" விருது !
தொழில்நுட்ப தகுதிகளுடன் தரமிக்க ஆசிரியர்களை உருவாக்கும் - டிஏவி பள்ளிகள் !
படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்!
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??-
வேலைவாய்ப்பை பெற்று தரும் 5 தொழிற்படிப்புகள்! வீட்டிலிருந்து இலவசமாக படிக்கலாம்!!
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்'? இது சாத்தியமா?
நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம்.
4th International Conference on Robotics, Automation, and Non-Destructive Evaluation (RANE) 2023 held at Hindustan Institute of Technology and Science...