ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் – ஐ கௌரவித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் !

தென்னிந்தியாவின் முன்னணி ஜுவல்லரி பிராண்டான உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் , ரஷ்யாவில் நடைபெற்ற 45வது வேர்ல்டு ஸ்கில்ஸ் கஸான் 2019 நிகழ்வில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று ஆபரண வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சஞ்சய் பிரமானிக் – ஐ பாராட்டி கௌரவித்திருக்கிறது . இந்த இளம் சாதனையாளரை பாராட்டுவதற்காக நடைபெற்ற நிகழ்வில் அமரேந்திரன் உம்மிடி அவர்களோடு ஜெம் & ஜுவல்லரி ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குனரும் , தலைமைச் செயல் அலுவலருமான ராஜிவ் கார்க் பங்கேற்றார் . இந்திய குழுவானது , உலகின் மிகப்பெரிய சர்வதேச தொழில்முறைத்திறன் போட்டி நிகழ்வான இதில் , நான்கு பதக்கங்களையும் மற்றும் 15 நேர்த்தி நிலைக்கான மெடல்களையும் வென்றிருக்கிறது . ரஷ்யாவின் இந்த ஆண்டு நடைபெற்ற இந்த சர்வதேச திறன் சவால் போட்டியில் பங்கேற்ற 63 நாடுகளில் , இந்தியா 13 – வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது . விபிஜே – ன் கிரியேட்டிவ் சென்டரில் பயிற்சி பெற்ற இளைஞரான சஞ்சய் பிரமானிக் , ஜெம் & ஜுவல்லரி ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ( GISCI ) ஆதரவோடு இந்நிகழ்வில் பங்கேற்றார் .

இதில், நான்கு பதக்கங்களையும் மற்றும் 15 நேர்த்தி நிலைக்கான மெடல்களையும் வென்றிருக்கிறது . ரஷ்யாவின் இந்த ஆண்டு நடைபெற்ற இந்த சர்வதேச திறன் சவால் போட்டியில் பங்கேற்ற 63 நாடுகளில் , இந்தியா 13-வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.விபிஜே ன் கிரியேட்டிவ் சென்டரில் பயிற்சி பெற்ற இளைஞரான சஞ்சய் பிரமானிக் , ஜெம் & ஜுவல்லரி ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியாவின்( GISCI ) ஆதரவோடு இந்நிகழ்வில் பங்கேற்றார் . தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலால் ( NSDC ) இப்போட்டி அனுப்பி வைக்கப்பட்ட 48 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய குழுவில் சஞ்சயும் ஒருவராக இடம் பெற்றிருந்தார் . நமது இந்திய குழுவானது . 44 திறன் பிரிவுகளில் பங்கேற்றது . ஒரு தங்கம்,ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தத்தில் நான்கு பதக்கங்களைப் பெற்று , பழைய சாதனைகளை முறியடித்து,புதிய சாதனையோடு இக்குழு இந்தியாவிற்கு திரும்பியிருக்கிறது . ஜெம் & ஜூவல்லரி ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குனரும் , தலைமைச் செயல் அலுவலருமான ராஜிவ் கார்க் இப்பாராட்டு விழாவில் பேசுகையில் , ” நாட்டுக்கு பெருமையைத் தேடித் தந்திருப்பதோடு மட்டுமின்றி , உலகளவில் ஆபரண வடிவமைப்பு வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்து சஞ்சய் சாதித்திருக்கிறார் . இந்த சர்வதேச வேல்ர்டு ஸ்கில்ஸ் போரம் என்பது , இளவயது ஆபரண வடிவமைப்பாளர்கள் அவர்களது திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு கௌரவம் மிக்க செயல்தளமாக இருக்கிறது . அதே நேரத்தில் உலகெங்கிலும் இருந்து வரும் நிபுணர்களிடமிருந்து திறன்களையும் , புதிய உத்திகளையும் கற்றுக்கொள்வதற்கான தளமாக இது திகழ்கிறது . NSDC மற்றும் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்-ன் ஆபரண வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் சஞ்சய்- ன் திறன்களை இன்னும் நேர்த்தியாக்க எங்களால் முடிந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் . ஆபரண வடிவமைப்பு வகையினத்தில் இந்நாடு முதன்முதலாக பதக்கத்தை வென்றிருக்கிறது . இதன்மூலம் இந்நாட்டிற்கு சஞ்சய் பெருமை சேர்த்திருக்கிறார் , ” என்று கூறினார் .

உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்-ன் நிர்வாக இயக்குனர் அமரேந்திரன் உம்மிடி பேசுகையில் , ” எமது கிரியேட்டிவ் சென்டரில் இளம் நபர்களுக்கு பயிற்சியளிப்பது எங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு கௌரவமாகும் . புதிய உத்திகளை கற்றுக்கொள்வதற்கு இளம் மற்றும் பேரார்வம் மிக்க கைவினைக் கலைஞர்களுக்கு பயிற்சியளிக்க இந்நாட்டிலுள்ள அனைத்து ஆபரண தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் விபிஜிஏ தேசிய திறன் மேம்பாடு கவுன்சில் தேர்வு செய்திருப்பது எங்களுக்கு பெருமையும் , கௌரவமும் தந்திருக்கிறது . திறன்மிக்கவர்களை அடையாளம் கண்டறிவதும் மற்றும் ஒரு குறிப்பிட்ட சிறப்புப்பிரிவில் அவர்களுக்கு பயிற்சியளிப்பதும் ஒரு சவாலாக இருந்தது . இத்தகைய சர்வதேச செயல்தளங்கள் மற்றும் போட்டிகளில் இத்தகைய இளைஞர்களை பங்கேற்குமாறு செய்வது அவர்களது திறன்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுமாறு செய்யும் . விபிஜே நிறுவனத்தின் ஒரு அங்கமான கிரியேட்டிவ் சென்டர் , அதன் சிறப்பான திறன் மற்றும் வடிவமைப்பிற்காக உலக வரைபடத்தில் இடம்பெற்றிருப்பது மதிப்புமிக்க ஒரு கௌரவமாகும் , என்று கூறினார் .

வெண்கலப் பதக்கம் வென்று சாதித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த இந்த இளம் வடிவமைப்பு கலைஞரான சஞ்சய் பிரமானிக் இந்நிகழ்வின்போது பேசுகையில் , ‘ இந்தியாவிற்காக அதுவும் முதன்முதலாக போட்டியில் பங்கேற்றபோதே ஒரு பதக்கத்தை வென்றிருப்பது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும் . இது எனக்கு பெரும் மகிழ்ச்சியும் , கௌரவமும் தந்திருக்கிறது . நன்கு பயிற்சி பெறவும் மற்றும் எனது திறன்களை இன்னும் கூர்மையாக்கவும் ஒரு நேர்த்தியான தளத்தினை எனக்கு வழங்கியதற்காக விபிஜே நிறுவனம் அளித்த மாபெரும் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் நான் சமர்ப்பித்துக் கொள்கிறேன் . இங்கு எனக்கு வழங்கப்பட்ட சரியான வழிகாட்டுதல் என்னிடமிருந்து சிறந்த திறன்களை வெளிக்கொணர்ந்திருக்கிறது . இதன்மூலம் ஆபரண வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வகையினத்தில் இந்தியா பதக்கங்களை வென்றிருப்பதற்கு உதவியிருக்கிறது , ” என்று கூறினார் .

இந்தியா சார்பாக பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்தியாவில் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான திறன் போட்டிகளை உள்ளடக்கிய ஒரு கடுமையான தேர்வு செய்முறை வழியாக , தேர்வு செய்யப்பட்டிருந்தனர் . ரஷ்யாவில் நடைபெற்ற இப்போட்டியில் பெல்ஜியம் , யுகே , நியூசிலாந்து , சிங்கப்பூர் , ஸ்பெயின் போன்ற பல நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியாவை மூன்றாவது இடத்தைப் பெறுமாறு சஞ்சய் செய்திருக்கிறார் . சஞ்சய் , ஒரு விவசாயியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது . GISCI-யால் நடத்தப்பட்ட ஒரு கடுமையான உள்நாட்டு தேர்வு செய்முறைக்குப் பிறகு நமது நாட்டின் பிரதிநிதியாக பங்கேற்க சஞ்சய் தேர்வு செய்யப்பட்டார் . இவரது அறிவை மேம்படுத்தவும் , இவரது திறன்களை இன்னும் நேர்த்தியாக்கவும் GISCI – ன் உதவியின் மூலம் இவருக்கு பயிற்சியளிக்கப்பட்டது . உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் சென்னையின் நிர்வாக இயக்குனர் அமரேந்திரன் உம்மிடி மற்றும் இந்நிறுவனத்தின் வடிவமைப்பு , உருவாக்கம் மற்றும் தயாரிப்பு துறையின் தலைவர் அனுபம் கார்மகார் அவர்களது வழிகாட்டலின் கீழ் இப்பயிற்சியினை அவர் மேற்கொண்டார் . இதுமட்டுமல்லாது , உலகத்திறன் போட்டியில் முன்பு வெற்றிவாகை சூடியவரான பிரேசிலைச் சேர்ந்த லெனார்டோ என்ற ஒரு நிபுணரையும் NSDC – ன் ஆதரவோடு , GISCI இவருக்கு நுட்பமான விஷயங்களில் பயிற்சியளிக்க பணியமர்த்தியிருந்தது .