அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்!

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு சினேகா ரெட்டி!

அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட வலுவான சோஷியல் மீடியா கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளார்.

அவரது தொழில்முனைவுப் பயணத்தின் முக்கிய அங்கமாக ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ உள்ளது. தனது தொழில்முறை பணிகளுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் சினேகா அதிக ஆர்வம் உள்ளவர். தனது உடற்பயிற்சி மற்றும்  லைஃப்ஸ்டைல் பற்றிய கிளிம்ப்ஸை அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

தனது குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களையும் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதேபோல் அவரது பயணங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான பதிவுகளும் ரசிகர்களுடனான அவரது நெருக்கத்தை மேலும் அதிகரித்துள்ளன. அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அந்தஸ்து அவரை பிரபலமாக்கினாலும் கடந்த சில ஆண்டுகளில் தொழில்முனைவு, குடும்பம், உடற்பயிற்சி, பயணம் என தனக்கு விருப்பமானவைகளில் கவனம் செலுத்தி, சினேகா தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இன்று சினேகா ரெட்டி அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தால் மட்டுமல்லாமல், வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் தனக்கென தனி டிஜிட்டல் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பிரபல ஆளுமையாகவும் அறியப்படுகிறார்.

Related posts:

லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்து ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா பேனரின் கீழ் இயக்க இருக்கிறார்....

*'உப்பு புளி காரம்' ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் 'குற்றம் கடிதல் 2' திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்

’ஒன் மேன்’ --திரைப்பட விமர்சனம்!

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் கலைஞருக்கு கிடைத்த வரம்”... ‘என்ன விலை’ திரைப்படம் குறித்து ந...

நடிகர் சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

நிதி பற்றாக்குறை ! 13,000 இணைப்பகங்களை மூடும் BSNL?