ரூ.740 கோடி மோசடி ? ரான்பாக்ஸி மாஜி தலைவர்கள் கைது.!

ரூ. 740 கோடி மோசடி செய்த புகாரில் ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பற்பசை முதல் வலிநிவாரணி போக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தயாரித்து வரும், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி நிறுவனம். உலகளவில் 150 நாடுகளில் கிளைகளும், 50 வருட முன் அனுபவமும் கொண்டது. நிறுவனத்தின் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஷிவிந்தர் சிங், ரெலிகர் நிறுவனத்திற்காக ரூ. 740 கோடி கடன் பெற்றனர்.

எனினும் நிதி நெருக்கடி காரணமாக ரான்பாக்ஸி நிறுவனத்தை, ஜப்பானை சேர்ந்த, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 2008ம் ஆண்டு விற்றனர்.2018 டிசம்பர் மாதம், ரூ 740 கோடி மோசடி செய்ததாக, சிங் சகோதரர்கள் மீது புதுடில்லி காவல் நிலையத்தில் பொருளாதார குற்றத்தின் கீழ் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, இவர்கள் மீது கடந்த மே மாதம் , அமலாக்க இயக்குநரகத்தின் கீழ், நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், இரு சகோதரர்களான ஷிவிந்தர் சிங் , மல்விந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related posts:

நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா!

18 ஆண்டுகள் நடக்க முடியாமல் இருந்த பெண்ணுக்கு 32 வது வயதில் அறுவை சிகிச்சை ! நோபல் மருத்துவமனை சாதனை.!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது.!

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது.!

'ஹரி ஹர வீர மல்லு பாகம்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

'ஜென்ம நட்சத்திரம்' வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!