“ஓம் காளி ஜெய் காளி’ வெப் சீரிஸில் என்னைக் கவர்ந்ததே அதன் புராணங்களும் சடங்குகளும்தான் ” – நடிகை சீமா பிஸ்வாஸ்!

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை சீமா பிஸ்வாஸ் மிகவும் கவனமாகத்  தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ மற்றும் பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘இயற்கை’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2006 இல் வெளியான ‘தலைமகன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும்  ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸில் நடித்திருக்கிறார்.

இந்த வெப்சீரிஸில் பணிபுரிந்த அனுபவம் பற்றி நடிகை சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரம் பாசிடிவ், நெகடிவ் என பல லேயர் கொண்டது. கதை கேட்கும்போதே என் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தை அறிந்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இயக்குநர் ராமு செல்லப்பா அர்ப்பணிப்பு, விடாமுயற்சி கொண்டவர்.

மொழிபெயர்ப்பாளர் மூலம் எனக்கு கதை சொல்ல அவர் மும்பைக்கு வந்தார். படப்பிடிப்பு தளத்தில் மொழி எனக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து கவலைப்பட்டேன். ஆனால், படப்பிடிப்பு முழுக்க இயக்குநர் ராமு செல்லப்பா எனக்கு உதவி செய்தார்” என்றார்.

’ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகிறது.

Related posts:

லியோ ஹம்சவிர்தன் என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன் 2 புதிய படங்கள...

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு !

ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!

அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா - டெல்னா டேவிஸ் நடிக்கும் 'லவ் இங்க்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது..!

அஃப்ரிஞ்ச் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது!

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

ஃபேஸ்புக் அக்கவுண்ட் லாக் இன் ஆகாத பட்சத்தில் இதை செய்து அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்யலாம் !