‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

சிரிப்பு, மகிழ்ச்சி என நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு ஆவலுடன் காத்திருக்கிறது.

Related posts:

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா !

*இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!*

ஏர்டெல், வோடபோன், ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

வாட்ஸ்அப் என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா..!

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்த ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!

பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது!