M ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், இலவச கபசுர குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் !

தமிழக முதலமைச்சரால் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட M Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள், இலவச கபசுபம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் அறிமுகமாகியுள்ளது:

மாசில்லா தமிழகம் என்ற நோக்கத்தில் M Auto நிறுவனத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களின் இயக்கத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.

ஏற்கெனவே பயணிகள் ஆட்டோக்கள், நடமாடும் டீ கடைகள், போன்றவை M Auto நிறுவனத்தால் வடவமைககப்பட்ட மின்சார ஆட்டோக்களாக இயங்கிவருகிறன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. யாரும் வெளியே சென்று கடைகளில் கூட்டமாக நின்று சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கமுடியாத சூழலும் உள்ளது. இந்நிலையில் குடியிருப்புகளுக்கே நேரடியாக M Auto நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களில் சென்று, கொள்முதல் செய்யப்பட் விலையில் காய்கறிகள், கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசால் அங்கிகரிக்கப்பட்ட இலவச கபசுபம், இலவச முக்கவசம், போன்றவை வழங்கும் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த நடமாடும் மின்சார வாகன காய்கறி கடையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், வைரஸ் பரவும் வழிமுறைகள் அடங்கிய காணொளிகள் வாகனத்தின் இருபுரங்களிலும் ஒளிபரப்படுகிறது. மேலும் வாகனத்தை சுற்றிலும் காமராக்கள் பொருத்துப்பட்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஸ்வைப்பிங் இயந்திரம் என அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து M Auto நிறுவனத்தின் இயக்குனர் மன்சூர் அலிகான் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இதுபோன்ற சூழலில், யாரும் வீட்டைவிட்டு வெகுதூரம் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் மாசில்லா தமிழகம் என்ற நோகத்தில் தமிழக முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்ட மின்சார வாகனத்தின் மூலம், வீடுகளுக்கே காய்கறிகளையும், கபசுப குடிநீர், முகக்கவசம் போன்றவற்றை குடியிருப்புகளிலேயே கொண்டுவந்து விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள இடங்களில் எங்கள் M Auto நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படும். இதனால் மற்ற இடங்களைவிட 30 முதல் 50 விழுக்காடு வரை விலை குறைவாகவே இருக்கும் என்றார். மேலும், எங்கள் வாகனத்தில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றில் இருந்த காத்துக்கொள்ளும் கபசுப குடிநீர், முகக்கவசம், கை கழுவும் வசதிகள் போன்றவை இலவசமாக கொடுக்கப்படும் என்று கூறினார்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஒன்றுகூடாமல் இருப்பது, தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றால் மட்டுமே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் முதல்முறையாக இந்த நடமாடும் மின்சார காய்கறி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.