IRCTC பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.! மெயில் செக் பண்ணுங்க! அலர்ட் ஆகிக்கோங்க. !

🚃🚋🚃🚋🚃===========

தற்சமயம்IRCTC இணையதளம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், irctctour என்ற இணையதளம், ஐஆர்சிடிசி பெயரை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது.

ஐஆர்சிடிசி

எனவே ஐஆர்சிடிசி பயனாளர்கள், இதுபோன்ற தவறான இணையதளங்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி தனது பயனாளர்களுக்கு இப்போது இமெயில் அணுப்பியுள்ளது.

irctctour இணையதளம்

மேலும் இதுதொடர்பாக ஐஆர்சிடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், irctctour என்று செயல்படும் இணையதளம் IRCTC இணையதளம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பல்வேறு கேஷ்பேக் திட்டங்கள் உள்ளன, மக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற திட்டங்கள் இந்தத இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட்

குறிப்பாக ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் விற்பனை மற்றும் சில சேவைகளை மட்டுமே வழங்குகிறது. மற்றபடி கேன்சல் செய்யப்பட்ட பயனாளர்களுக்கு போன் செய்து அவர்களது தகவல்களை கேட்டபதில்லை. பின்பு வங்கிக்கணக்கு எண்,
ஏடிஎம் கார்டு விபரங்கள், பின் நம்பர், டிக்கெட் புக் செய்யும்போது வரும் ஒடிபி உள்ளிட்ட விபரங்களை ஐஆர்சிடிசி ஒருபோதும் தனது பயனாளர்களிடமிருந்து கேட்பதில்லை. பயனாளர்கள் இதுபோன்ற போலி இணையதளங்களிலிருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக இந்த இணையதளத்தில் மூலம் பணம் செலுத்தி,சிலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர் என்றும்,பின்பு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்ததையடுத்து, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இ-மெயில்

ஐஆர்சிடிசி தற்சமயம் பயனாளர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயில் குறிப்பிட்டுள்ளது இதுதான்.
 
The tour confirmation voucher of fraud is exactly the same as IRCTC. The mentioned details are mobile no.9999999999, landline no. +91 6371526046 & email-id: [email protected] are being used for selling tourism products in the name of IRCTC,’ the email reads.