11
Dec
நவீனகால கல்வி முறையில் துணிச்சலான புதிய பார்வையை வழங்கும் வகையில் சென்னை புறநகரில் முதன்முறையாக ரெசிடென்ஷியல் பள்ளியாக உருவாகியுள்ளது ’சேஜ்ஹில்’. சமகால குடும்ப வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பெற்றோர் ஒத்துழைப்புடன் கூடிய பள்ளியாகவும் இது இருக்கும். நகர வாழ்க்கையில் தொழில்- குடும்பம் என்ற இரட்டை குதிரையில் பெற்றோர்கள் சவாரி செய்து வர குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான நடைமுறை சிக்கல்களை சமநிலைப்படுத்த இருவருக்குமான இடமாகவும் ‘சேஜ்ஹில்’ இருக்கும். சர்வதேச கல்விமுறை, புதுமையாக்கம், கலாச்சார ஆய்வு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றை இணைக்கும் அணுகுமுறையை ‘சேஜ்ஹில்’ கொண்டுள்ளது. மாணவர்களை தேர்வுகளுக்கு மட்டுமே தயார்படுத்தாமல் வாழ்க்கை, அறிவுதிறன், படைப்புத் திறமை, எதிர்கால உலகத்திற்கு ஏற்றாற்போல நேரடி கள அனுபவங்களையும் கொடுத்து அவர்களை ‘சேஜ்ஹில்’ தயார்படுத்துகிறது. சென்னையின் கல்வி வடிவமைப்பில் இருந்து ‘சேஜ்ஹில்’லை தனித்துவமாக்குவது அதன் ‘Co-Parenting Value Delivery Engagement Model’. அதாவது, பள்ளியை விட்டு குழந்தை தள்ளி இருக்கும்போதும் பெற்றோரை குழந்தைகளின் வளர்ச்சியுடன் இணைக்கும் வகையில்…
