24
Dec
இலங்கையிலிருந்து தமிழகம் வர்றவங்க எல்லோரும் இன்றளவும் முக்கால்வாசி பேர் அகதி முகாமில் தான் அடைக்கப்பட்டு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கும் சூழலில் அப்படியான இலங்கையிலிருந்த தமிழ்வாசியை வைத்து ஒரு குரூரமான அதுவும் பாரதிராஜாவையும் நடிக்க வைத்து இப்படி ஒரு கரூரமான ஒரு பக்கா சிகப்பு படத்தை கொடுத்து அசத்த முயன்றிருக்கும் இயக்குநருக்கு முதலில் ஒரு சபாஷ் சொல்லித்தான் ஆக வேண்டும்.தரமணி படத்தில் மிரட்டிய நடிகர் வசந்த் ரவி இந்த படத்திலும் வேற லெவலில் மிரட்டி உள்ளார். வசந்த் ரவி 8 அடி பாய்ந்தால் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிப்பில் 16 அடி பாய்ந்துள்ளார். கேங்ஸ்டர் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது என்பதால் கதை எதுவே இல்லாமல் பழிவாங்குவதற்குண்டான சரியான காரணம் இல்லாமல் காட்சிகளை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டது போல இருக்கும் ராக்கி ரசிக்க வைக்கிறதான்னு கேட்டா நிச்சயமா இல்லைன்னு தான் சொல்லணும். கையில் சுத்தியல்.. முகத்தில்…
